chennireporters.com

#cabinet change; தமிழக அமைச்சரவை மாற்றம் புதிய முகங்களுக்கு வாய்ப்பு.

தமிழக அமைச்சரவையில் புதிதாக 2 இளம் அமைச்சர்கள்?

மூத்த அமைச்சர்கள் இரண்டு பேர் தமிழக அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 33 அமைச்சர்களுடன் தமிழக அமைச்சரவை இயங்கி வருகிறது. இந்நிலையில் தமிழக அமைச்சரவையில் மாற்றம் ஏற்பட உள்ளதாக கூறப்படுகிறது.

புதிதாக இடம் பெறும் அமைச்சர்கள் யார்/Who are the new ministers

முன்னதாக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் உள்ள தனது சொந்த தொகுதியான கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் நேற்று முன்தினம் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். கொளத்தூர் ஜி.கே.எம். காலனியில் நடைபெறும் சமுதாய நலக்கூடத்தின் கட்டுமான பணிகளை நேரில் ஆய்வு செய்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கொளத்தூரில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகளின் நிலை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

விக்கிரவாண்டியில் இன்று மாலை பிரசாரத்தை தொடங்குகிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் | Tamil News Minister Udhayanidhi Stalin Election Campaign started today evening

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முதல்-அமைச்சர், தமிழகத்தில் அமைச்சரவை மாற்றம் இருக்குமா? உதயநிதிக்கு துணை முதல்-அமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளதா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார். அதற்கு “மாற்றம் இருக்கும், ஏமாற்றம் இருக்காது” என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

மீண்டும் அமைச்சராவாரா செந்தில் பாலாஜி? நிபந்தனைகள் என்ன? - தமிழ்நாடு

இதனிடையே தமிழக அமைச்சரவை மாற்றத்தின்போது 2 புதிய இளம் அமைச்சர்களை சேர்க்க வேண்டும் என்பதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதியாக இருப்பதாகவும், அதற்காக முதல்-அமைச்சரை அவர் வலியுறுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

புதிய அமைச்சர்களின் வாழ்க்கை குறிப்பு | Tamil News New Ministers Biography

எனவே மூத்த அமைச்சர்கள் 2 பேர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. துணை முதல்-அமைச்சர் பதவிக்கு அமைச்சர் உதயநிதி முன்னேற உள்ளார். அது பற்றிய தகவல்கள் வரும் அக்டோபர் 5-ந் தேதிக்கு மேல் வெளியாகலாம் என்று தலைமைச் செயலக வட்டாரம் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

DMK MLAs meeting at Anna Arivalayam called on Jan 10

சிறையிலிருந்து ஜாமினில் வெளியே வந்திருக்கும் செந்தில் பாலாஜிக்கு அவர் ஏற்கனவே வகித்து வந்த துறைகள் வழங்கப்படும் என்றும் அவர் மீண்டும் அமைச்சராகிறார் என்றும் சொல்கிறார்கள் அறிவாலய வட்டாரத்தினர்.

இதையும் படிங்க.!