Chennai Reporters

பிரஸ் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட வாகனத்தில் கஞ்சா கடத்திய டுபாக்கூர்..

கோவையில் பத்திரிகையாளர் அடையாள அட்டையுடன் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக இருவர் கைது செய்யப்பட்டனர் .

கோவை வடவள்ளி – தொண்டாமுத்தூர் சாலை அஜ்ஜனூர் பிரிவு அருகே வடவள்ளி போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர் .அப்போது , அங்கு பத்திரிகையாளர் போல பிரஸ் ஸ்டிக்கர் ஒட்டி வந்த காரை மடக்கி காவல் துறையினர் சோதனையிட்டனர்.

அப்போது , காரில் சுமார் 2.5 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது . அதைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் , பிடிபட்ட நபர்கள் பி . என் . புதூரைச் சேர்ந்த சரவணன் (38) மற்றும் ராமநாதபுரத்தைச் சேர்ந்த சூர்யா (22) என்பதும் தெரியவந்தது .

இதையடுத்து பிடிபட்ட சரவணன் ஓட்டுநர் வேலை பார்த்து வருவதாகவும் , ஆனால் , காரில் பிரஸ் ஸ்டிக்கர் ஒட்டியதோடு ஆரம்பம் மலர் என்ற வார பத்திரிகையின் உதவி ஆசிரியர் என அடையாள அட்டையை வைத்திருந்ததும் தெரியவந்தது .

இதையடுத்து , இருவரையும் கைது செய்த காவல்துறையினர் அவர்களிடமிருந்த 2.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்த சரவணன் மீது அடிதடி வழக்குகளும் பல்வேறு மோசடி வழக்குகளும் நிலுவையில் உள்ளது அது தவிர இவர் நடத்தும் பத்திரிகை இன்னும் ஆர்.என்.ஐ. வாங்கவில்லை.

அது தவிர இந்த கஞ்சா கடத்தல் சரவணன் தொண்டு நிறுவனம் ஒன்றை நடத்தி ஒரு சில உதவிகளும் செய்துவிட்டு அதன் பேரில் லட்சக்கணக்கில் நிதி திட்டியதாகவும் கூறப்படுகிறது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் இதுபோன்ற போலி டுபாக்கூர் பத்திரிகையாளர்கள் 50க்கும் மேற்பட்டோர் தினமும் கட்டி வருகின்றனர்.

அவர்கள் எல்லாவிதமான சட்டத்திற்குப் புறம்பான வேலைகளையும் செய்து வருகின்றனர்.

எனவே கோவை மாவட்ட ஆட்சியர் கோவை மாவட்ட எஸ்பி கோவை மாவட்ட கமிஷனர் ஆகியோர் உண்மையான பத்திரிகையாளர்களையும் போலி பத்திரிகையாளர்களையும் அடையாளம் கண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் கோயம்புத்தூரில் உள்ள நடுநிலையான பத்திரிகையாளர்கள்.

இதையும் படிங்க.!

error: Alert: Content is protected !!