முன்னாள் அதிமுக அமைச்சர் பி.வி ரமணா அ.இ.அ.தி.மு.க ஆட்சி காலத்தில் வருவாய்த் துறை அமைச்சராகவும் வணிகவரித் துறை மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சராகவும் பால்வளத் துறை அமைச்சராகவும் பொறுப்பு வகித்து வந்தார்.
அப்போது அவருக்கு பத்துக்கும் மேற்பட்ட உதவியாளர்கள் பணியாற்றி வந்தனர்.அதாவது அவரது உதவியாளராக அண்ணாமலை, கிருஷ்ணராவ், கமல்ராஜ், முருகேசன், அன்புமணி, சிவப்பிரகாசம் என பலர் பணியாற்றி வந்தனர்.
அவர்கள் அனைவரும் பல்வேறு துறைகளில் வேலை வாங்கி தருவதாகவும் பணிமாற்றம் செய்து தருவதாகவும் பதவி உயர்வு வாங்கி தருவதாகவும் பலரிடம் லட்சக்கணக்கில் பணம் வாங்கிக் கொண்டு இதுவரை சம்பந்தப்பட்டவர்களுக்கு பணம் தராமல் ஏமாற்றி வருகின்றனர் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
எத்தனை உதவியாளர்கள் இருந்தாலும் ரமணாவின் இரண்டாவது மனைவி லதா அவர்களுக்கு தெரியாமல் யாரும் எதுவும் செய்துவிட முடியாது.யார் யார் எந்தெந்த துறையில் பணி வாங்கித் தரவேண்டும், டிரான்ஸ்பர் போட வேண்டும் என கடைசியாக லிஸ்டையும், ரேட்டையும் முடிவு செய்பவர் லதா தான்.
லதாவுக்கு தெரியாமல் அணுவும் அசையாது என்கிறார்கள்.ரமணாவுக்கு நெருக்கமானவர்கள் அவர் பத்திரப் பதிவுத் துறை அமைச்சராக இருந்த போது எம். சி. சம்பத்தின் உறவினரான சிவப்பிரியா சப்-ரிஜிஸ்டார் என்பவருக்கு பணி மாறுதல் செய்ய 12 லட்சம் ரூபாய் வாங்கிக் கொண்டு இன்னும் தரவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அதேபோல ஈஸ்வரி பெயர்கொண்ட ஒரு பெண் அதிகாரியும் முன்னாள் அமைச்சர் ரமணா விடம் 12 லட்ச ரூபாய் கொடுத்ததாக கூறப்படுகிறது.இது போல தமிழ்நாட்டில் பலர் கோடிக்கணக்கான பணத்தை வேலைக்காகவும் டிரான்ஸ்பர் காகவும் கொடுத்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில்தான் ரமணாவின் உதவியாளரான சிவப்பிரகாசம் மீது செஞ்சி தேவனாம் பேட்டை பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரிடம் மூன்று லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம் வாங்கிக் கொண்டு வேலை வாங்கித் தராமல் ஏமாற்றியதாக கூறப்படுகிறது.
இது குறித்து விழுப்புரம் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து சிவப்
பிரகாசத்தை தேடி வருகின்றனர்.இனிமேல்தான் ரமணா மற்றும் அவரது உதவியாளர்கள் மீது எத்தனை பேர் புகார் தரப் போகிறார்கள் என்று தெரியவரும்.
புற்றீசல் போல பலர் புகார்கள் வரும் என்று போலீசார் காத்து இருக்கிறார்களாம்.சில லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் கொடுத்த பணத்தை திருப்பி கேட்காமல் கொடுத்தது கொடுத்தபடியே இருக்கட்டும்.
வராக்கடனில் வரவு வைத்து விடுவோம் என்று புலம்பிக்கொண்டே இருக்கிறார்களாம். போலீசின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன வென்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.