#Chanar Community Municipality Chairman in Caste Violence; சாதி வன்மத்தில் சாணார் சமூதாய நகராட்சி சேர்மன். ஆட்டம் போடும் வள்ளி முருகன் மீது வன் கொடுமை வழக்கு பதியப்படுமா?

May 6, 2025

By இரா. தேவேந்திரன்.

நாடார் சமூகத்தை சார்ந்தவர்கள் அதே பகுதியில் பலர் மாட்டிறைச்சி சாப்பாட்டுக்கடை நடத்தி வருகின்றனர் ஆனால் தலித் சமூகத்தை சேர்ந்த முத்து செல்வி நடத்தும் கடையில் விற்பனை அதிகமாக இருப்பதாலும் சாப்பாடு சுவையாக இருப்பதாலும் கூட்டம் அதிகமாக வருகிறது. இதனைப் பொறுத்துக் கொள்ள முடியாத பக்கத்து கடையை சேர்ந்த நாடார் சமூகத்தினர் முத்துச்செல்வி கடை மீது எச்சி இலைகளை வந்து கொட்டுவது இரவு நேரங்களில் குடித்துவிட்டு பாட்டில்களை உடைப்பது மலம் கழிப்பது போன்ற இழி செயல்களை செய்து வருகின்றனர். இந்த நிலையில் வள்ளி முருகன் சுரண்டை நகராட்சி சேர்மன் ஆக இருப்பதாலும் அவரது அப்பா அந்த தொகுதியின் எம்எல்ஏவாக இருப்பதாலும் தளிச்சமுகத்தை சேர்ந்த ஒரு பெண் வியாபாரம் செய்யக்கூடாது என்பதற்காகவே நடத்தப்பட்ட அதிரடி தாக்குதல் என்கின்றார் பாதிக்கப்பட்ட முத்துச்செல்வி.

I Love Surandai - சுரண்டை

முத்து செல்வி என்கிற தலித் பெண், தென்காசி மாவட்டத்தில் உள்ள சுரண்டை அருகே ஒரு தள்ளுவண்டி கடையை நடத்தி வருகிறார். சில நாட்களுக்கு முன்பு அந்த ஊரின் சேர்மன் , காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வள்ளி முருகன், செல்வி மாட்டிறைச்சி உணவுகளை விற்பனை செய்வதாகக் கூறி, நேரில் சென்று அவரது சாப்பாட்டு வியாபாரத்தை மூடுமாறு மிரட்டினார். அவர், மாடு வழிபாட்டிற்கு உரியது எனவும், மாட்டிறைச்சி விற்பது மிகவும் நெறிமுறையற்றது எனவும் கூறி இருக்கிறார்.

ஆனால், முத்து செல்வியின் கூற்றுப்படி, மாட்டிறைச்சி விற்பனை என்பது இரண்டாம் பட்ச காரணம் மட்டுமே; முதன்மையாக, வள்ளி முருகன், ஒரு தலித் பெண்ணான செல்வி பொது இடத்தில் வியாபாரம் செய்வதைப் பிடிக்காமல் இருந்ததாக சொல்கிறார். வள்ளி முருகன், காங்கிரஸ் எம்எல்ஏ பழனி நாடாரின் மகன் ஆவார். அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி, அவர் முத்து செல்வியை மிரட்டி, அவரது சாப்பாட்டு கடை குறித்து எஸ்பி அலுவலகத்தில் புகார் சொல்லி அதை மூட வைத்துள்ளார் . உள்ளூர் அரசு அதிகாரிகள் செல்வியின் வீட்டிற்கு சென்று மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

இதனால், முத்து செல்வி இன்று தென்காசியில் உள்ள மாநில எஸ்சி/எஸ்டி ஆணையக் கிளையில் வள்ளி முருகன் மீது புகார் அளித்துள்ளார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இந்த இருவரின் செயல் இழிவாக இருக்கிறது . மேலும் போலீஸ் இதற்கு துணை போனது அநியாயமானது . நான் மிகவும் ஏழ்மையான நிலையில் இருக்கிறேன். சுரண்டையிலிருந்து வீரகேரள புதூர் செல்லும் வழியில் சாலை ஓரத்தில் மாட்டுக்கறி சாப்பாடு கடை வைத்து எனது வாழ்வாதாரத்தை நடத்தி வந்தேன்.

சுரண்டை நகராட்சித் தலைவரின் செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது! | Facebook

இப்படி இருக்க கடந்த 29ஆம் தேதி அன்று நான் நடத்திவரும் சாலை ஓரம் மாட்டுக்கறி சாப்பாடு கடைக்கு வந்த சுரண்டை நகராட்சி சேர்மன் வள்ளி முருகன் என்னிடம் ஏமா செல்வி நீங்க சாப்பாடு கடை வைத்து நடத்துவது எல்லாம் சரிதான் ஆனால் மாட்டுக்கறி சாப்பாடு உன் கடையில் நீ வச்சிருக்கறது எனக்கு சரியா படல இப்பெல்லாம் எல்லாரும் எல்லா கடைக்கும் சாப்பிட வரான் உன் கடைக்கு எங்க ஆளுங்க கூட சாப்பிட வர தான் செய்றாங்க ஆனால் நாங்கள் சாமி கும்பிடுற மாட்டை கறி வைத்து வைக்கிறது என்னால ஏத்துக்க முடியாது நீ இங்கே இருந்து கடையை காலி பண்ணி விடு இல்லையென்றால் உன் கடை எப்படி எனக்கு காலி பண்ணனும்னு தெரியும் அப்படி காலி பண்ணிக்கிறேன் என்று என்னை வள்ளி முருகன் மிரட்டினார் நான் அவரிடம் ஐயா சாப்பிடுறவங்க எல்லாருமே பீப் சாப்பாடுதான் கேக்குறாங்க ஐயா உங்களுக்கே தெரியும் என் பொழப்பு இந்த கடையை வைத்து தான் ஓடுது என்று நான் கூறியதற்கு இரண்டு நாள் டைம் அதுக்குள்ள இந்த இடத்தை காலி பண்ணிட்டு போயிரணும் இல்லன்னா நான் இன்னொரு தடவை வந்து பேச மாட்டேன் கடையில் போலீசை வைத்து காலி பண்ணிட்டு போயிட்டே இருப்பேன் என்று மிரட்டி விட்டு சென்று விட்டார்.

அவரது மிரட்டலுக்கு நான் பயந்து இருந்த நிலையில் மே ஒன்றாம் தேதி அன்று காலை சுமார் 8:30 மணியளவில் எனது வீட்டிற்கு அத்திமீறி நுழைந்த சுரண்டை காவல் நிலையத்தை சேர்ந்த உதவி காவல் ஆய்வாளர் செல்வம் மற்றும் அதே காவல் நிலையத்தை சேர்ந்த கல்யாண சுந்தர்ராஜ் ஆகியோர் வீட்டில் தனியாக இருந்த என்னை மிரட்டி தாங்கள் கொண்டு வந்திருந்த கடிதத்தில் என்னை படிக்க கூட அனுமதிக்காமல் கையெழுத்து பெற்று சென்றனர்.

நான் எதற்காக கையெழுத்திட வேண்டும் என்று அவரிடம் கேட்டபோது எஸ்பி சார் உன் கடையை காலி பண்ண சொல்லி இருக்கிறார். எங்களுக்கு உத்தரவு வந்திருக்கிறது. நாங்கள் செய்கிறோம் அவ்வளவுதான் எங்களுக்கு தெரியும் என்று கூறினர். நான் இதன் பிற்பாடு காவல் நிலையத்தில் நேரடியாக சென்று எனக்கு இந்த கடையை விட்டால் வேறு வழி இல்லை தயவு செய்து கடையை காலி பண்ண சொல்லாதீங்க என்று அவர்களிடம் கெஞ்சி கேட்டுக் கொண்ட போது என்னிடம் பேசிய சுரண்டை உதவி ஆய்வாளர் செல்வம் அவர்கள் என்னிடம் வள்ளி முருகனுக்கும் உனக்கும் என்ன பிரச்சனை அவருடைய அப்பா பழனி நாடார் இந்த சட்டமன்றத் தொகுதியுடைய எம்எல்ஏ இது எல்லாம் உனக்கு தெரியும் இல்ல அவரை மீறி எங்களால் என்ன செய்ய முடியும் அவரை உன் அவரை அவர் உன் கடையை காலி பண்ண சொல்லி எஸ் பி வர பேசிட்டாரு என்னால உனக்கு ஒன்னும் உதவி செய்ய முடியாது.SP Vallimuruganவேணும்னா ஒயின்ஷாப் பக்கம் கடை வைத்து பிழைச்சுக்கோ அவ்வளவுதான் என்னால உனக்கு உதவி செய்ய முடியும் என்று கூறினால் இதனை அடுத்து  இரண்டாம் தேதி பிற்பகல் 1:30 மணியளவில் என்னை சுரண்டை நகராட்சியில் இருந்து தொடர்பு கொண்ட நகராட்சி பணியாளர் உங்களுடைய தள்ளுவண்டி கடையை மற்றும் அதிலிருந்து பொருட்களை நாங்கள் எடுத்துச் செல்கிறோம். திரும்ப வாங்க வேண்டும் என்றால் அதற்குரிய அபராத தொகையை செலுத்தி விட்டு உங்கள் பொருட்களை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம் இனி நீங்க ரோட்டோரத்தில் கடை போடக்கூடாது என்று கூறினர்.

 

இதை கேட்டு அதிர்ச்சடைந்த நான் நகராட்சியில் சென்று கேட்டபொழுது சுரண்டை காவல் நிலையத்திற்கு செல்ல கூறினர் சுரண்டை காவல் நிலையத்திற்குச் சென்றபோது நீ இங்க வள்ளி முருகன் சாரை பார்த்துட்டு எதுவானாலும் பேசிக்கோங்க என்று கூறினார்கள். இதனை அடுத்து நான் சுமார் மாலை 4:25 மணி அளவில் சுரண்டை நகராட்சி சேர்மன் வள்ளி முருகன் அவர்களை எனது கைபேசியின் மூலமாக தொடர்பு கொண்டேன். எனது கைபேசி எண்ணில் பேசிய வள்ளி முருகன் என்னிடம் அண்ணன் நாம் மாட்டுக்கறி சாப்பிட கடை வைத்து தான் பிழைக்கிறேன். நீங்க சொன்ன மாதிரி காலி பண்ணிட்டீங்க அண்ணன் நான் உங்களுக்கு என்ன பாவம் பண்ணேன் என்று கேட்டதற்கு ஏமா எஸ் பி ஆபிஸ்ல கம்ப்ளைன்ட் ஆகி உன் கடையை எடுத்து இருக்காங்க நீ என்கிட்ட பேசக்கூடாது என்றபடி எனது அழைப்பினை துண்டித்து விட்டார்.

சுரண்டையிலிருந்து வீரகேரளம் புதூர் செல்லும் வழி எங்கும் பல்வேறு சாலை வழக்கடையில் இருந்தும் கூட பட்டியல் சமூகத்தினை சேர்ந்த நான் மாட்டுக்கறி சாப்பாட்டுக்கடை வைத்து நடத்தியதற்காக எனது கடையை மட்டும் தனது அதிகாரத்தினை துஷ்பிரயோகம் செய்து எனது கடையினை அகற்றியும் என்னை மிரட்டியும் மன உளைச்சலுக்கு ஆளாக்கிய பள்ளி முருகன் மற்றும் அதற்கு உடனடியா உடனடியாக இருந்த காவல்துறையினர் மீது சட்ட நடவடிக்கை மேற்கொண்டு எனக்கு நீதி கிடைக்க உதவுமாறு வேண்டி கேட்டுக்கொள்கிறேன் இப்படிக்கு முத்துச்செல்வி என்றே ஒரு கடிதம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Intimidation of Youth Entering Temple: National Commission for Scheduled Tribes Notice to TN Govt | கோவிலுக்குள் நுழைந்த பட்டியலின வாலிபரை மிரட்டிய விவகாரம்: தமிழக அரசுக்கு, தேசிய ...

தமிழக தாழ்த்தப்பட்டோர் ஆணையம்

முத்துச்செல்வி விஷயத்தில் தமிழக தாழ்த்தப்பட்டோர் ஆணையம் உடனடியாக தானாக வழக்கு பதிவு செய்து வள்ளி முருகன் சுரண்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர் செல்வம் அவருடன் சென்ற காவலர் நகராட்சி அதிகாரிகள் என அனைவர் மீதும் வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் கடுமையாக கருத்து பதிவு செய்து வருகின்றனர். நெட்டிசன்கள்.

இன்னும் சிலர் ஆதி காலத்தில் இருந்து நாடார் சமூகத்தை இழி சாதியாக பார்த்திருந்த வரலாறு மறந்து சாணார் சமூகத்தை சேர்ந்த வள்ளி முருகன் வெள்ளை சட்டை போட்டுக்கொண்டு தன்னுடைய சாதியை மறைத்துக் கொண்டு தலித் சமூகத்தின் மீது தாக்குதல் நடத்துவது கண்டனத்திற்குரியது எனவே வள்ளி முருகனை முச்சந்தியில் நிற்க வைத்து படித்த பொதுமக்கள் பகுத்தறிவு உள்ள பொதுமக்கள் ஆறறிவு உள்ள பொதுமக்கள் சுரண்டை நகராட்சி அலுவலகத்தில் வள்ளி முருகனை நிற்க வைத்து காரி முகத்தில் நிமிர்ந்தால் கூட புத்தி வராது இன்னும் திருந்தாத ஜென்மம் என்று குறிப்பிட்டுள்ளனர்.

Share:

இரா. தேவேந்திரன்.

May 6, 2025

Leave a Comment