chennireporters.com

சென்னை பாஜக அலுவலகம் 73வது குடியரசு தின விழா கொண்டாட்டம்.

தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.

மாநில பொதுச்செயலாளர் கரூ நாகராஜன் மற்றும் பாஜகவின் மாநில பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் ஆகியோர் இந்த குடியரசு தின கொடியேற்று விழாவில் கலந்து கொண்டனர், பின்னர் செய்தியாளர்களிடம்பேட்டி அளித்த பாஜக தலைவர்.

நாட்டின் குடியரசு 73ஆண்டுகளை திரும்பிப் பார்க்கும் , வளம் பெற்ற நாடாக இந்தியா உள்ளது.குடியரசு தினவிழாவை முன்னிட்டு பாஜக அலுவலகத்தில் மூவண்ணக் கொடியை ஏற்றி வைத்தேன்.

இந்த ஆண்டு ஏழு நண்பர்களுக்கு தமிழகத்தில் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது மேலும்சாமானிய மனிதர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு பத்ம ஸ்ரீ விருதுகளை இந்த குடியரசு நாளிலே மத்திய அரசு வழங்கியது.

சுதந்திரத்திற்காக பாடுபட்ட பாரதி வேலு நாச்சியார் குயிலி உள்ளிட்ட அனைவரையும் அணிவகுப்பில் காட்சிப்படுத்திய. தமிழக அரசுக்கு நன்றி இதுபோன்றவர்களயை வரலாற்றை பாடப்புத்தகங்களில் சேர்க்க வேண்டும்

தொடர்ச்சியாக இது போன்று காட்சிப்படுத்தும் மூலம் அடுத்த தலைமுறைக்கு அவர்களின் வரலாற்றில் கொண்டு செல்ல வேண்டும்

இந்த ஆண்டு இந்திய குடியரசு பேரணியில் தமிழகத்தின் வாகன பங்கேற்கவில்லை கண்டிப்பாக அடுத்த ஆண்டு அதற்கான முயற்சிகள் நடக்கும்.

பாஜக பொருத்தவரை கட்சியின் தொண்டர்களுக்கும் கருத்து தெரிவிக்க இடம் உண்டு லாவண்யா தற்கொலை வழக்கை பொறுத்தவரை பாஜகவின் நிலைப்பாடு
லாவண்யா வீடியோ பதிவில் பொய் கூறவில்லை என்பது தான்.

வீடியோ உண்மை என்பதை மதுரை உயர்நீதிமன்ற கிளை உறுதி செய்யப்பட்ட பிறகு அந்த வீடியோவை பற்றி பேசுவதற்கு எதுவும் இல்லை.

இந்த வழக்கை சிபிஐ இடம் மாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்
பாஜக வில் இருந்துகொண்டே பாஜக விற்கு எதிராக கருத்துக்களை தெரிவித்தால் திமுக போல நடவடிக்கை எடுக்க மாட்டோம் . பாஜக வில் அனைவருக்கும் கருத்து சுதந்திரம் உண்டு .

அதிமுக பாஜக கூட்டணி இயற்கையான உறவு – இந்த கூட்டணியில் எந்த சலணமும் ஏற்படாமல் பார்த்துக்கொள்வோம் பல இக்கட்டாண சூழ்நிலைகளில் அதிமுக பாஜக விற்கு துணை நின்றுள்ளது என்றும்

பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் கருத்து பாஜவின் நிலைபாடு இல்லை. வார்த்தை தவறுதலாக வந்துவிட்டது. இது குறித்து அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி யிடம் தொடர்பு கொண்டு வருத்தம் தெரிவித்ததாக தெரிவித்தார்.

அதிமுக எதிர் கட்சியாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.பொங்கல் பரிசு தொகுப்பு முறைகேடுகள் விவகாரத்தில் சிறப்பாக அதிமுக போராடி வருகிறது.

இதையும் படிங்க.!