நீதிபதிக்கும் நீதித்துறைக்கும் இது அழகா? அல்லது பெருமையா? கஞ்சா சங்கர் வழக்கில் எழும் கேள்விகள். பெண்களைப் போற்றி மதிக்கும் தமிழ் மண்ணில் ஸ்ரீமதி மற்றும் அவரது தாய் உட்பட கண்ணியமிக்க பெண் காவலர்களை கண்ணிய குறைவாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் கஞ்சா சங்கரின் வழக்கில் புதிய மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு வினாடிகளும் கஞ்சா சங்கர் வழக்கில் என்ன மாற்றங்கள் நடக்கப் போகிறது என்பதை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் தமிழக அரசும் கஞ்சா சங்கரால் பாதிக்கப்பட்டவர்களும்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வில் இன்று 40 ஆட்கொணர்வு மனுக்கள் விசாரணைக்கு வந்தன. அதில் 15-வது வழக்கு கஞ்சா சங்கர் வழக்கு.
நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்
ஒவ்வொரு மனுக்களாக விசாரணை செய்ய ஆரம்பித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் 39 வழக்குகளை 4 வாரம் ஒத்திவைத்தார். ஆனால், கஞ்சா சங்கர் என்ற சவுக்கு சங்கர் வழக்கை மட்டும் விசாரித்த அவர் மதியம் 2.30 மணிக்குள் அரசு ஆவணங்கள் அனைத்தும் தனக்கு வேண்டுமென்று கேட்டதோடு, ஆவணங்கள் வந்ததையடுத்து மதியம் மீண்டும் விசாரணைக்கு எடுத்த ஜி.ஆர்.சுவாமிநாதன் நாளை இந்த வழக்கில் இறுதி விசாரணை நடைபெறும் என்றும் தெரிவித்தார்.
இதில் எழும் கேள்வி என்னவென்றால், கஞ்சா சங்கர் பற்றி ஒன்றும் தெரியாதவர் அல்ல நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன். அவர் தான் நீதித்துறையை அவதூறு செய்த வழக்கில் கஞ்சா சங்கருக்கு ஒராண்டு தண்டனை விதித்தவர். அதில் இன்றுவரை கஞ்சா சங்கர் குற்றவாளிதான்.
இன்னும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டுமென்றால், இன்றைக்கு குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ள கஞ்சா சங்கருக்கு ஜி.ஆர்.சுவாமிநாதன் தண்டனை விதித்தபோது, தற்போது அவன் சீரழிந்ததைப் போல் சீரழிந்திருக்கவில்லை. ஓரளவிற்கு நல்லவன் வேடத்தில், பசுந்தோல் போர்த்திய ஓநாயாகத்தான் சுற்றிக் கொண்டிருந்தான்.
ஆனால், இன்று குண்டாசில் அடைக்கப்பட்டுள்ள கஞ்சா சங்கர், பட்டவர்த்தனமாக பிளாக்மெயில் செய்து கோடி கோடியாக கொள்ளையடித்து, அந்தப் பணத்தில் உல்லாசம் என்ற பெயரில் பொறுக்கித்தனமான ஒரு வாழ்க்கை வாழ்ந்துள்ளான். அது அப்பட்டமாக சந்தி சிரிக்கிறது.
இப்படிப்பட்ட சூழலில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியே களத்தில் இறங்கி, 39 வழக்குகளை 4 வாரத்திற்கு ஒத்தி வைத்துவிட்டு, இந்தப் பொறுக்கியின் வழக்கை மட்டும் நாளையே விசாரித்து முடிப்பேன் ( இறுதி விசாரணை) என்று சொல்லியிருக்கிறார். அதுவும் நாளை அந்த நீதிமன்றம் வழக்கமாக கிடையாது. ஆனால், கஞ்சா சங்கரின் வழக்கை விசாரிப்பதற்காக நாளை அந்த நீதிமன்றம் இயங்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு என்ன பின்னணி? கஞ்சா சங்கர் திமுக-வை எதிர்த்துப் பேசுகிறான்; முதலமைச்சர் குடும்பத்தினரை தனிப்பட்ட முறையில் தாக்குகிறான் என்பது மட்டும்தானே காரணம்.
இல்லையென்றான் விசாரணைக்கு வந்த 39 ஆட்கொணர்வு மனுக்களில் இல்லாத தனிக்காரணம் வேறு என்ன கஞ்சா சங்கர் வழக்கில் உள்ளது என்பதை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தான் சொல்ல வேண்டும்.
ஆக, ஒருவன் எத்தனை பெரிய பிளாக்மெயிலராக இருந்தாலும் எத்தனை மோசமான ஊழல் பேர்வழியாக இருந்தாலும்…
கஞ்சா, பெண்கள் என எவ்வளவு சீரழிந்திருந்தாலும் அதையெல்லாம் கருத்தில் கொள்ளமாட்டோம்; அவன் திமுக-வைத் திட்டினால் போதும் அவனை சிறப்பு கவனத்தில் கொள்வோம் என்று செயல்படுவது ஒரு அதிமுககாரனுக்கு அழகாக இருக்கலாம்; பி.ஜே.பி காரனுக்கும் கூட இனிக்கலாம்; ஆனால், உயர் நீதிமன்றத்திற்க்கும் ஜி.ஆர்.சுவாமிநாதன் போன்ற நீதிபதிக்கும் இது அழகோ பெருமையோ கிடையாது.
இனிமேல் குற்றம் செய்பவர்கள் திமுக-வையும், முதலமைச்சர் குடும்பத்தையும் நாலு வார்த்தை திட்டிவிட்டு தவறு செய்யுங்கள். உங்கள் தவறுக்கு அரசாங்கம் தண்டனை வழங்கும்போது, நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் போன்றவர்கள் சிறப்புக் கவனம் கொடுத்து விசாரித்து உங்களை கெளரவப்படுத்துவார்கள்!