Special story;
இன்று மாலை சுமார் 5.15 மணியளவில் சென்னை மெட்ரோ ரயிலில் திடீரென தீப்பொறி ஏற்பட்டது அதனுடன் பெரும் வெடிச்சத்தம் ஏற்பட்டதால் பயணிகள் அலறி துடித்தனர். சிறிது நேரத்தில் ஏணியும் துண்டிக்கப்பட்டதால் மூச்சு விடமுடியாமல் பயணிகள் அலறி துடித்தனர். இதனால் 350க்கும் மேற்பட்ட பயணிகள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் மெட்ரோ ரயிலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க துவங்கப்பட்ட மெட்ரோ ரயில் சேவை மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அதே நேரத்தில் சில சமயங்களில் மெட்ரோ ரயிலில் அதிர்ச்சி சம்பவங்களும் நடந்து வருகிறது. விம்கோ நகர் பணிமனையிலிருந்து மீனம்பாக்கம் ஏர்போட் வரை மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது. அந்த வகையில் விம்கோ நகரிலிருந்து நீல நிறப்பாதையிலும், செண்ட்ரல் வரை பச்சை நிற பாதை என இரண்டு வழித்தடங்களிலும் இயக்கப்பட்டு வருகிறது. செண்ட்ரல் முதல் ஏர்போர்ட் வரை பல முக்கிய வழித்தடங்களை இணைத்துள்ள மெட்ரோ ரயில் மூலமாக ஏராளமான மக்கள் தினசரி பயணித்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று மாலை சுமார் 5.15 மணிக்கு விம்கோ நகர் பணிமனையிலிருந்து விமான நிலையம் செல்லக்கூடியதடம் எண் C-132 என்ற மெட்ரோ ரயில் நீல நிற வழித்தடத்தில் உயர்நீதிமன்றம் நோக்கி வந்து கொண்டிருந்தபோது உயர்நீதிமன்றம் நிறுத்தத்தில் எந்திர கோளாறு ஏற்பட்டு நடு வழியில் நின்றது. இதனால் ரயிலின் பக்கவாட்டிலிருந்து தீப்பொறிகள் பறந்ததால் உள்ளே இருந்த பயணிகள் பயத்தில் அலறத் தொடங்கினார்கள். உடனடியாக அவசர அறைக்கு பலர் ஃபோன் செய்தனர். உடனே கட்டுப்பாட்டு அறையில் இருந்து பயணிகள் பயப்படத்தேவையில்லை விரைவில் கோளாற் சரி செய்யப்பட்டு ரயில் இயக்கப்படும் என்று தெரிவித்தனர். அதே போல சிறிது நேரத்தில் கோளாறு சரி செய்யப்ட்டு ஐகோர்ட் மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டது. ரயில் பறப்பட்ட சிறிது நேரத்தில் நடுவழியில் அதாவது சுரங்கப்பாதையில் ரயில் மீண்டும் நின்று விட்டது.
ரயில் நின்ற சிறிது நேரத்தில் பெரும் வெடி சத்தத்துடன் தீப்பொறி பறக்கத் தொடங்கியது உடனடியாக ஏசி துண்டிக்கப்பட்டது 150-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் பொதுமக்கள் என 350 க்கு மேற்பட்டோர் மூச்சு திணறி வழியில் இறங்க முடியாமல் திணறல் நின்றனர் செய்வது அறியாத நின்ற பயணிகள் அல்லா என்றும் ஜீசஸ் என்றும் ஐயோ சாமி என்று கத்தினார்கள். சுரங்கப்பாதையில் நின்றதால் கதவுகளும் திறக்கப்படவில்லை.
இதனால் 10 நிமிடத்திற்கு மேல் பயணிகள் ஒரே கட்டுப்பாட்டு அறையில் இருந்து பயணிகள் பயப்பட வேண்டாம் விரைவில் கோளாறு சரி செய்யப்படும் என்று தெரிவித்தனர் ஆனால் மூச்சு விடுவதற்கு பயணிகள் பெரும் சிரமப்பட்டனர் 15 நிமிடங்களுக்குப் பிறகு மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்திற்கும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கும் இடையில் சுரங்கப்பாதையில் நின்ற ரயில் சேவையால் பல ரயில்கள் நிறுத்தப்பட்டன. பின்னர் கோளாறு சரி செய்யப்பட்டு 15 நிமிடங்கள் கால தாமதமாக சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையம் வந்தடைந்தது.
இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் இருந்து சென்ட்ரல் வந்த வழக்கறிஞர் ஜோசப் என்பவர் நம்மிடம் கூறுகையில் சுமார் 5 15 மணி இருக்கும் அந்த நேரத்தில் சி 32 என்ற ரயில் விம்கோ நகரில் இருந்து சென்ட்ரல் நோக்கி வந்து கொண்டிருந்தது அதில் நான் சென்ட்ரல் செல்ல ஏறினேன். சென்ட்ரலுக்கும் ஹைகோர்ட்டுக்கும் இடையில் சுரங்கப்பாதையில் 15 நிமிடங்கள் ரயில் நின்று விட்டது.
இரண்டு முறை வெளிச்சத்தமும் தீப்பொறியும் கிளம்பின கதவுகள் திறக்கப்படவில்லை ஏசி துண்டிக்கப்பட்டது இதனால் பயணிகள் மூச்சு விட துடித்தனர் என்று நம்மிடம் தெரிவித்தார் அவர் அவசர கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்த செல்போன் கிரீன் சாட்டையும் நமக்கு அனுப்பினார். இன்று மாலை மெட்ரோ ரயிலில் சென்ற பயணிகள் பெரும் அச்சத்தில் உறைந்தனர். இனிமேல் நிர்வாகம் உடனடியாக மெட்ரோ ரயிலில் என்ன சேவை குறைபாடு இருக்கிறது என்பதை கண்டறிந்து பயணிகள் செல்லும் வழியில் எந்தவித இயந்திர கோளாறுகளும் ஏற்படாத வகையில் சரி செய்ய வேண்டும் என்று தெரிவித்தார். மேலும் ஒளி பெருக்கி மூலம் எந்த பிரச்சினையாக இருந்தாலும் பயணிகளுக்கு நிர்வாகம் உடனடியாக தெரிவிக்க வேண்டும் என்று நம்மிடம் கூறினார்.