chennireporters.com

சென்னை ஒண்பது மாத கர்ப்பிணி பெண் டாக்டர் கார்த்திகா மரணம்.

டாக்டர் கார்த்திகா

சென்னை:

தமிழகத்தில் மேலும் ஒரு கர்ப்பிணி மருத்துவர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார்.சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கொரோனவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கர்ப்பிணியான 29 வயது மருத்துவர் கார்த்திகா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு மதுரையில் ஆரம்ப சுகாதார நிலை மருத்துவரான 30 வயதான சண்முகப்ரியா உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.அதற்குள் அடுத்தாக ஒரு கர்ப்பிணி மருத்துவர் தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

tvm gh
திருவண்ணாமலை அரசு மருத்துவமனை

திருவண்ணாமலை மாவட்டம் போளூரை சேர்ந்த மருத்துவர் ராமலிங்கம் – மணியம்மாள் தம்பதியினரின் மகள் டாக்டர் கார்த்திகா (28).அவரது கணவர் கார்த்தி திருவண்ணா
மலை அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார்.

மருத்துவர் கார்த்திகாவிற்கு கடந்த வாரம் போளூரிலுள்ள வீட்டில் வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தினர் நிகழ்ச்சியில் நெருங்கிய உறவினர்கள் மட்டும் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில் கார்த்திகாவிற்கு திடீரென உடல்நலககுறைவு ஏற்பட்டிருக்கிறது.

இதையடுத்து டாக்டர் கார்த்திகா திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.மேல்சிகிச்சைக்காக அப்பல்லோ மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார்.சிகிச்சை பலனளிக்காமல் டாக்டர் கார்த்திகா 23ஆம் தேதி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழக அரசு முனைப்புடன் செயல்பட வில்லை என்றும் டாக்டர் கார்த்திகாவுக்கு ஆக்சிஜன் சிலிண்டர் தரவில்லை என்றும் குற்றம் சாட்டி இருக்கிறார் இதுகுறித்து ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க.!