#Chennai Press Club election; சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் 23 ஆண்டுகள் கழித்து நடக்கும் தேர்தல்.

December 15, 2024

By இரா. தேவேந்திரன்.

கடந்த 25 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த சென்னை பத்திரிகையாளர் மன்ற தேர்தலில் தற்போது சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் தேர்தல் நடைபெற்று வருகிறது.

Chennai Press Club in Chepauk,Chennai - Associations near me in Chennai -  Justdial

தேர்தல் அதிகாரியாக ஓய்வு பெற்ற நீதிபதி பாரதிதாசன் தலைமையில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இன்று காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை தேர்தல் நடைபெறும். தேர்தல் நடைபெற்ற பிறகு வாக்கு எண்ணிக்கை தொடங்கி யார் வெற்றி வேட்பாளர்கள் என்று அறிவிக்கப்படும்.

CHENNAI PRESS CLUB

இந்த தேர்தலில் மொத்தம் 11 பதவிக்கான போட்டி நடைபெறுகிறது. தலைவர், துணைத் தலைவர்கள் இரண்டு பேர், பொதுச் செயலாளர் ஒருவர், இணை செயலாளர் இருவர், நிர்வாக குழு உறுப்பினர்கள் ஐந்து பேர் என மொத்தம் 11 பதவிகளுக்கான தேர்தல் தற்போது நடைபெற்று வருகிறது.

 

இந்த தேர்தலில் 1500 க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் வாக்களிக்க உள்ளனர். இந்த தேர்தலை தொடர்ந்து சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் இருந்து அரசினர் தோட்டம் வரையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சென்னை கிழக்கு காவல் ஆணையாளர்  சிபி சக்கரவர்த்தி அவர்கள் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்த தேர்தலில் நீதிக்கான அணி, மாற்றத்துக்கான அணி, ஒற்றுமைக்கான அணி என மூன்று அணிகள் உம்மனைப் போட்டி நிலவி வருகிறது. அது மட்டும் இல்லாமல் சுயேசையாக பலர் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றனர். ஏறக்குறைய 25 ஆண்டு காலம் தேர்தல் நடக்காமல் உள்ள இந்த பத்திரிகையாளர் மன்ற தேர்தல் கொண்டாட்டம், பத்திரிகையாளர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது

ஏற்கனவே இருந்த நிர்வாகிகள் தேர்தல் நடைபெறாமல் காலம் தாழ்த்தி வந்தனர். அது மட்டும் இல்லாமல் சென்னை பத்திரிகையாளர் மன்றத்திற்கு நிதி முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. வங்கியில் வைப்பு நிதியில் வைக்கப்பட்டு இருந்த பணமும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. எனவே இனிமேல் பொறுப்புக்கு வருகிறவர்கள், ஏற்கனவே நிர்வாகத்தில் இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கை தற்போது எழுந்துள்ளது.

அது மட்டும் இல்லாமல் ஊழல் செய்த நிர்வாகிகள் குறைந்தபட்சம் ஐந்தாண்டுகளாவது சங்கத்திலிருந்து நீக்கி வைக்க வேண்டும், இடை நீக்கம் செய்ய வேண்டும் என்கிற கோரிக்கையை அமைந்துள்ளது.

Share:

இரா. தேவேந்திரன்.

December 15, 2024

Leave a Comment