சென்னை பத்திரிகையாளர் மன்ற தேர்தலை சீர்குலைக்க நடை பெற்ற திட்டமிட்ட வன்முறையை மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. வன்முறையில் ஈடுபட்ட மற்றும் அதன் பின்னணியில் உள்ள நபர்கள் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறோம்.
வழிகாட்டுதல் குழுவில் உள்ள மூத்த பத்திரிகையாளர்களுக்கு காவல்துறை பாதுகாப்பு அளிக்கவும் மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் வலியுறுத்துகிறது.
பத்திரிகையாளர்கள் அனைவரின் நலனைக் கருதி, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் தமிழ்நாடு அரசு ஒதுக்கித் தந்த நிலத்தில், எஸ்.ஆர்.எம் குழுமம் பத்திரிகையாளர்களுக்காக கட்டித்தந்த கட்டிடத்தில் சென்னை பத்திரிகையாளர் மன்றம் இயங்கி வருகிறது.
#20-crore property; சென்னை பத்திரிகையாளர் மன்ற ஆபீஸ் மேனேஜருக்கு 20-கோடி சொத்து வந்தது எப்படி? – https://www.chennaireporters.com/news/20-crore-property-how-did-the-office-manager-of-chennai-press-association-get-20-crore-property.
இவ்வாறு, பத்திரிகையாளர்கள் அனைவரின் நலன் கருதி உருவாக்கப்பட்ட சென்னை பத்திரிகையாளர் மன்றத்திற்குள், குறுக்கு வழியில் நுழைந்த சில நபர்கள், தங்கள் சொந்த சொத்தைப்போல கடந்த 20 ஆண்டுகளுக்கு மேல் மன்றத்தை நடத்தி வருகின்றனர். மன்ற விதிகளின் படி, புதிய உறுப்பினர்களை சேர்க்காமல், மன்றத்தின் நடவடிக்கைகளை யாருக்கும் தெரிவிக்காமல், வரவு-செலவு கணக்குகளைக் கூட தாக்கல் செய்யாமல், சட்டத்திற்குப் புறம்பாக செயல்பட்டு வந்த இந்தக் கூட்டம், மன்றத்தை பயன்படுத்தி பல குறுக்கு வழிகளிலும் வருமானம் ஈட்டியது.
இந்நிலையில், மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் மற்றும் பல மூத்த பத்திரிகையாளர்களின் முயற்சியின் காரணமாக, தற்போது மன்றத்திற்கு விடிவுகாலம் பிறந்துள்ளது. பத்திரிகையாளர் மன்றத்திற்கு ஜனநாயகப்பூர்வமாக தேர்தலை நடத்தி முடிக்க மூத்த பத்திரிகையாளர்கள் திரு.என்.ராம். திரு.பகவான் சிங், திரு.நக்கீரன் கோபால், திரு.சாவித்ரிகண்ணன், திரு.டி.சுரேஷ்குமார் உட்பட12 பேர் அடங்கிய வழிகாட்டுதல் அமைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, நிர்வாக வசதிக்காக வழிகாட்டுதல் குழுவால் அமைக்கப்பட்ட துணைக் குழு, புதிய உறுப்பினர்களை சேர்த்து தேர்தல் நடத்தும் பணிகளை அர்ப்பணிப்புடனும், மிகவும் வெளிப்படையாகவும் செய்து வருகின்றது.
மன்றத்தை இதுநாள் வரை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த நபர்கள், வழிகாட்டுதல் குழுவின் இந்த நேர்மையான நடவடிக்கையை பொறுத்துக்கொள்ள முடியாமல், பல்வேறு வழிகளில் தொடர்ந்து இடையூறு விளைவித்து வருகின்றனர். பத்திரிகையாளர் மன்றத்தை குடிகார மடமாக மாற்றி வைத்திருந்த நபர்கள், தங்கள் ஆதரவாளர்களை வைத்து வழிகாட்டுதல் குழுவிற்கு எதிராக அவதூறுகளை பரப்பி வருகின்றனர்.
இந்து ராம்.
மூன்று மாதமாக, பழைய உறுப்பினர் பட்டியலை சரிபார்த்தல், அவர்களுக்கு அடையாள அட்டை தயார் செய்தல், புதிய உறுப்பினர்களை சேர்க்கும் முன் பணிகளை தொடங்குதல், மன்றத்தின் நிர்வாகப் பணிகளை மேற்கொள்ளுதல் போன்ற மிக முக்கியமான பணிகளில் ஈடுபட்டு வரும் மூத்த பத்திரிகையாளர்கள், தங்கள் பொன்னான நேரத்தையும், தங்கள் சொந்த பணத்தையும் இதற்காக செலவிட்டு வருகின்றனர்.
இவ்வாறு, பத்திரிகையாளர்களின் நலன்கருதி தங்கள் சொந்தப் பணிகளைக் கூடி ஒதுக்கி வைத்துவிட்டு, மன்றத்திற்கான தேர்தல் பணிகளை மிகுந்த பொறுப்புடன் செய்து வரும் மூத்த பத்திரிகையாளர்களை அவமதிக்கும் செயல்களில் ஒரு கும்பல் ஈடுபட்டு வருகிறது.
நக்கீரன் கோபால்.
இதன் தொடர்ச்சியாக, கடந்த ஞாயிற்றுக்கிழமை (01.09.24), சென்னை பத்திரிகையாளர் மன்றத்திற்குள் மதுபோதையில் நுழைந்த நிலாவேந்தன் என்ற நபர், வழிகாட்டுதல் குழுவில் இடம்பெற்றுள்ள மூத்த பத்திரிகையாளர்களை மிகவும் தரக்குறைவாக பேசியுள்ளார். அத்துடன், வழிகாட்டுதல் குழுவால் அவ்வப்போது வெளியான அறிவிப்புகள் ஒட்டப்பட்டுள்ள தகவல் பலகையிலிருந்து, அந்த அறிவிப்புகளை கிழித்து எறிந்து வன்முறையில் ஈடுபட்டுள்ளார்.
நிலாவேந்தன் நிகழ்த்திய இந்த வன்முறையை அவருடைய தனிப்பட்ட நடவடிக்கையாக கருத முடியாது. பத்திரிகயாளர் மன்றத்திற்கு தேர்தல் நடைபெறக் கூடாது என்ற எண்ணத்தில் பலரையும் தூண்டி விட்டு, வழிகாட்டுதல் குழுவிற்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபடுத்திவரும் கும்பலே இதற்கும் காரணம் என்று மாற்றத்திற்கான ஊடகவியலளார்கள் சங்கம் கருதுகிறது.
குடிபோதையில் பத்திரிகையாளர் மன்றத்தில் சண்டை
போட்ட நிலா வேந்தன்.
இந்த நேரத்தில், சென்னை பத்திரிகையாளர் மன்றத்திற்கு புதிய உறுப்பினர்களை சேர்த்து ஜனநாயகப்பூவர்மாக தேர்தலை நடத்தி முடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள வழிகாட்டுதல் குழுவிற்கு மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் அனைத்து வகையிலும் உறுதுணையாக இருக்கும் என்று உறுதியளிக்கிறோம்.
சென்னை பத்திரிகையாளர் மன்றத்திற்குள் அத்துமீறிப் புகுந்து வன்முறையில் ஈடுபட்ட நபர் மீதும், இதன் பின்னணியில் செயல்பட்ட நபர்கள் மீதும் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறோம்.
சென்னை பத்திரிகையாளர் மன்றத்திற்கான தேர்தல் பணியில் ஈடுபட்டு வரும் வழிகாட்டுதல் குழுவிற்கு காவல்துறை உரிய பாதுகாப்பு அளிக்கவும் மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் வலியுறுத்துகிறது.
சென்னை பத்திரிகையாளர் மன்ற மூத்த உறுப்பினர் நிலாவேந்தன் கைது.மன்றத்தின் சுவற்றில் ஒட்டப்பட்டிருந்த அறிவிப்புக் காகிதங்களை அகற்றியதாக அலுவலக உதவியாளர் கொடுத்த புகாரின் அடிப்படையில் இன்று காலை திருவல்லிக்கேணி காவல் துறையினரால் அழைத்து செல்லப்பட்டு கைது செய்யப்பட்டார். பத்திரிகையாளர்கள் மத்தியில் இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே போலி ஐடி கார்டு போட்டதில் மட்டும் ஜேக்கப், பெருமாள் என்கிற பாரதி தமிழன் மற்றும் குடிப்பதையே தொழிலாக கொண்ட நாகரீக கோமாளி அசதுல்லா போன்ற ஃபிராடுகள் அடித்த கொள்ளை பல கோடிகளை தாண்டிம் என்கின்றனர். அது குறித்து நாம் நமது இணையதளத்தில் ஏற்கனவே செய்தி வெளியிட்டுள்ளோம். அது தவிற இந்த பத்திரிகையாளர் மன்றத்தில் நடந்த ஊழல் பற்றி ஒரு மெகா சீரியலும் சினிமா படமும் எடுக்கலாம் என்கின்றனர் மூத்த உறுப்பினர்கள் சிலர்.
சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் சுவற்றில் ஒட்டப்பட்டிருந்த அறிவிப்புக் காகிதங்களை அகற்றியதாக அலுவலக உதவியாளர் கொடுத்த புகாரின் அடிப்படையில் நிலா வேந்தன் திருவல்லிக்கேணி காவல் துறையினரால் அழைத்து செல்லப்பட்டு கைது செய்யப்பட்டார்.
இந்த கைது ஃபிராடுகள் மத்தியில் அனைவருக்கும் ஃபுல் பாட்டில் சரக்கை (FULL BOTTLE) தாண்டிய பயம் ஏற்படுள்ளது. என்றே சொல்லலாம் என்கிறார் முழு நேர குடிமகன் ஒருவர்.