chennireporters.com

நான்காவது முறையாக கோப்பையை வென்றது சென்னை சூப்பர் கிங்ஸ்.

துபாயில் இன்று நடைபெற்ற ஐபிஎல் 20 20 போட்டியில் நான்காவது முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை வென்று சாதனை படைத்தது.

முதலில் பேட் செய்ய களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் முதல் ஆட்டக்காரராக ருத்ராஜம் டூப்ளசியும் களமிறங்கினார்கள்.

ஆட்டத்தின் தொடக்கத்தின் முதலே சிறப்பாக விளையாடினார் கள். ருதுராஜ் நரைன் பந்தியில் அவுட்டானார்.

அவுட்டானாலும் அதன்பிறகு ஆட்டம் சூடு பிடிக்க தொடங்கியது.ஐ.பி.எல். 20-20 ஓவர்  கிரிக்கெட் போட்டி இன்று கடைசி ஆட்டம் சி.எஸ்.கே.வும் , கே.கே. ஆர். அணியும் விளையாடி வருகின்றன.

கடைசி போட்டி இன்று துபாயில் நடைபெற்று வருகிறது. மைதானத்தில் பார்வையாளர்களாக சி.எஸ்.கே.வை ஆதரிக்கும் ரசிகர்களே அதிக உற்சாகத்துடன் விளையாட்டை ரசித்து வருகிறார்கள்.

20 ஓவர் முடிந்த நிலையில் மூன்று விக்கெட் இழப்பிற்கு சி.எஸ்.கே.192 ரன் கள் அடித்து ஆட்டத்தை நிறைவு செய்தனர்.

193 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்குடன் ஆடத் தொடங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி யினர் சார்பில் களமிறங்கிய வெங்கடேஷ், கில் ஜோடி கவனத்துடனும் பொறுமையாகவும் ஆடத்தொடங்கினார்கள்.

பத்து ஓவர் வரை நல்ல ரன் ரேட் எடுத்தது K.KR. அணி. ஜடேஜாவின் பந்தில் கில் முதலில் அவுட் ஆனார்.அதன் பிறகு மளமளவென விக்கெட்டுகள் சாய்ந்தது.

இருபது ஓவர் முடிவில் K.K.R. அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த நிலையில் ஐ.பி.எல். 20-20  கிரிக்கெட் போட்டியில் சி.எஸ்.கே. நான்காவது முறையாக வெற்றி பெற்று கோப்பையை தட்டிச் சென்றது.

ஐ.பி.எல் .20-20 கடைசி ஆட்டத்தில் சி.எஸ்.கே. தான் வெற்றி பெறும் என்று முதலில் Chennai reporters.com இந்த தளம் தான் சி.எஸ்.கே.கோப்பையை வெல்வார்கள் செய்தி வெளியிட்டிருந்தோம். நாம் குறிப்பிட்டதைப் போல நான்காவது முறையாக சிஎஸ்கே கப்பை வென்றிருக்கிறார்கள். தல தோனிக்கு ஒரு சல்யூட்…

இதையும் படிங்க.!