chennireporters.com

இளம் பெண் பாலியல் பலாத்காரம் கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவு.

இளம் பெண் ஒருவரை தொடர்ந்து பலமுறை கூட்டு வன்புணர்ச்சியில் ஈடுப்பட்ட காம வெறிப்பிடித்த இளைஞர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்க தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

விருதுநகர் மாவட்டம், விருதுநகர் ஊரக காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஹரிஹரன் என்பவர், தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் 22 வயது இளம் பெண்ணை காதலிப்பதாக ஏமாற்றி அப்பெண்ணை வற்புறுத்தி பல முறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

ஹரிஹரன்

அப்பெண்ணுக்கு தெரியாமல் அதை தன் செல்போனில் வீடியோ பதிவு செய்து,
அதை தன் நண்பர்களுக்கு அனுப்பி வைத்துள்ளார்.அந்த வீடியோவை பார்த்த அவரது நண்பர்கள் தொடர்ச்சியாக அப்பெண்ணை மிரட்டி தொடர்ந்து பலமுறை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

ஜீனைத்அகமது

இந்நிலையில், பாதிக்கப்பட்ட அந்த பெண் அளித்த எழுத்துப் பூர்வமான புகாரின் அடிப்படையில், விருதுநகர் ஊரக காவல் நிலைய போலிசார் வழக்கு பதிவு செய்து திமுக நிர்வாகி ஜீனைத் அகமது , ஹரிஹரன், பிரவீன், மாடசாமி ஆகிய 4 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

நீதிமன்ற உத்தரவுக்கு பின் அவர்கள் நான்கு பேரையும் சிறையில் அடைத்தனர்.மேலும், இதே குற்றத்தில் ஈடுப்பட்ட 4 சிறுவர்களை காவல் துறையினர் கைது செய்து அவர்களை சிறுவர்கள் காப்பகத்திற்கு அனுப்பியுள்ளனர்.

பிரவீன்

இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில், பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் கைது செய்யப்பட்டுள்ள ஜுனைத் அகமது திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக நிர்வாகி ஜீனைத் அகமதுவிருதுநகர் வடக்கு மாவட்டம், விருதுநகர் நகரத்தைச் சேர்ந்த ஜுனைத் அகமது கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால்.

மாடசாமி

அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்’என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காம வெறிப்பிடித்த கயவர்களை எந்தவித சமரசத்திற்கும் இடம் கொடுக்காமல், இவர்கள் ஜாமீனில் வெளிவருவதற்கு முன்பாகவே, குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து, சட்டப்படி கடும் தண்டனை கிடைக்க தமிழக அரசு முழு மூச்சுடன் முனைப்பு காட்ட வேண்டும்.

அரசு எடுக்கும் முடிவும் நீதிமன்றம் தரும் தண்டனையும் வருங்கால தலைமுறையினருக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும்.

அப்போது தான் காவல் துறை மற்றும் நீதித்துறை மீதும் மற்றும் அரசு மீதும் மக்களுக்கு நம்பிக்கை உண்டாகும். இந்த வழக்கில் எந்தவித குறுக்கீடும் இல்லாமல் உடனடியாக தீவிர விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க.!