முதல்வர் வேட்பாளர் செங்கோட்டையன். அதிமுக – பாஜக கூட்டணி இறுதி செய்யப்பட்டுவிட்டது. தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக செங்கோட்டையினை முன்னிறுத்த பாஜக முடிவு.தமிழகத்தின் சீனியர் அரசியல் தலைவரான செங்கோட்டையனை, முதல்வர் வேட்பாளராக ஏற்கவும், அவருக்காக பிரசாரம் செய்யவும் அண்ணாமலை சம்மதம்.
அதிமுக, பாஜக, பாமக, அமமுக, ஓபிஎஸ் அணி, தேமுதிக, புதிய தமிழகம், ஐஜேகே, தமாகா, ஜான் பாண்டியன், ஏ.சி.சண்முகம் என ஒரு பிரமாண்டமான அணியை அமைத்து, திமுக கூட்டணியை வீழ்த்த டெல்லி வியூகம்.இந்த பிரம்மாண்ட கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் பட்சத்தில் மூன்று வருட காலத்திற்கு செங்கோட்டையன் முதல்வராக இருப்பார். 2029-ல், ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டம் அமலுக்கு வருமானால், அந்தத் தேர்தலுக்கு முதல்வர் வேட்பாளராக அண்ணாமலை முன் நிறுத்தப்படுவார். இறுதி காட்சிகள் நெருங்கிக் கொண்டிருக்கின்றன! இப்படீன்னு இந்த செய்தி உலா வருகிறது.
முன்னதாக நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீது அதிமுகவினர் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து சட்டமன்றத்தில் உள்ள எடப்பாடி அறையில் அதிமுக உறுப்பினர்கள் கூடி ஆலோசனை நடத்தினர்.
இந்த கூட்டத்தில் அதிமுக மூத்த உறுப்பினர் செங்கோட்டையன் கலந்து கொள்ளவில்லை. பட் ஜெட் தாக்கல் செய்யப்பட்ட கடந்த 14ம் தேதி எடப்பாடி அறையில் நடந்த ஆலோசனை கூட்டத்தையும் செங்கோட்டையன் புறக்கணித்தார். இன்று 2ம் நாளாக புறக்கணித்தார்.
அரே நேரம் சட்டமன்றத்தில் செங்கோட்டையனும், முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜுவும் நீண்டநேரம் பேசிக்கொண்டு இருந்தனர். செங்கோட்டையனுக்கு இன்னொரு புறம் ஓபிஎஸ் அமர்ந்திருந்தார்