திருவள்ளூர் அருகே உள்ள புட்லூர்கிராமத்தில் பிறந்தநாள் கொண்டாட தான் சேமித்து வைத்திருந்த 1000 ரூபாய் பணத்தை முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு அனுப்பிய சிறுவன்
திருவள்ளூர் அடுத்த புட்லூர் கிராமத்தை சேர்ந்தவர் தீபன் சூர்யா தம்பதியின் நான்கு வயது மகன் ஸ்ரீ விகாஸ்.அந்த பகுதியில் உள்ள ஞான சௌந்தரி பிரைமரிபள்ளியில் யு.கே.ஜி படித்து வருகிறார்.
இவர் தனது பிறந்த நாளுக்காக தான் உண்டியலில் சேர்த்து வைத்திருந்த ஆயிரம் ரூபாய் பணத்தை முதல்வரின் கொரோனா பொது நிவாரண நிதிக்கு ஆன்லைன் மூலம் அனுப்பி வைத்தார்.அவர் பேசும் வீடியோ காட்சி ஒன்று வெளியாகியுள்ளது.
அதில் அவர் யாரும் பயப்படாதீங்க எல்லோரும் உதவி செய்யுங்கள் கொரோனா பாதித்தவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுங்கள் என்றும் நாம் என்ன நினைக்கிறோமோ அதுவாகவே மாறுவோம் என்ற புத்தரின் போதனையை தனது மழலை குரலில் பேசி வீடியோ வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.சிறுவர் களிடத்தில் மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் அதிகரித்து வருவது பாராட்டத்தக்கது.