ஒன்றிய அரசின் தேசிய கல்விக் கொள்கையை ஆதரித்தால் மட்டுமே தமிழக அரசுக்கு வழங்கக் கூடிய 2 ஆயிரம் கோடி வழங்கப்படும். என்று ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இதற்கு தமிழகம் முழுவதும் பா.ஜ.க அரசுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இது குறித்து கடலூரில் அரசின் பத்து நல திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைப்பெற்றது. அதில் முதலமைச்சர் தமிழகத்தை வஞ்சிக்கும் பாஜகவின் அட்டூழியங்களை பற்றி பேசினார். தமிழகத்திற்கு தர வேண்டிய நிதியை தராமல் மறுக்கிறது எந்த வகையில் ஞாயம் என்று கேள்வி எழுப்பினார். முதலமைச்சரின் பேச்சை கேட்ட சிறுமி நிதி வழங்கினார். இது தொடர்பாக வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
எல்.கே.ஜி படிக்கும் சிறுமி நன்முகை.
கடலூர் மாவட்டம் வேப்பூரில் பெற்றோர்களை கொண்டாடுவோம் என்ற விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மாணவர்களுக்கு சீர்வரிசை கொண்டு வந்து வழங்கி சிறப்புரை ஆற்றினார்.
அப்போது மத்திய அரசு தேசிய கல்விக் கொள்கையை ஆதரித்தால் மட்டுமே தமிழக அரசுக்கு வழங்கக் கூடிய 2 ஆயிரம் கோடி வழங்கப்படும். இதன் மூலம் பல லட்சம் மாணவர்கள் பாதிக்கப்படும் நிலையில், தமிழக அரசு நிதி மூலம் யாருக்கும் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கப்படும் என தெரிவித்தார்
இந்த நிலையில் கடலூரை சேர்ந்த எல்.கே.ஜி படித்து வரும் நன்முகை என்ற சிறுமி தான் சேர்த்து வைத்திருந்த பணத்திலிருந்து ரூபாய் 10 ஆயிரத்தை தமிழ்நாடு முதலமைச்சர் சிறப்பு திட்டத்திற்காக நிதி வழங்கி உள்ளார். மேலும் சிறுமி நிதி வழங்கிய தொடர்பாக வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதற்கு ஆதரவாக கடலூரை சேர்ந்த எல்.கே.ஜி படிக்கும் சிறுமி 10 ஆயிரம் ரூபாய் வழங்கிய சம்பவம் நெகழ்ச்சியை ஏற்படுத்தஉள்ளது.
தமிழகத்தை பாஜக எந்த வகையில் வஞ்சித்தாலும் ஒருபோதும் திமுகவோ அல்லது தமிழக மக்களோ பாஜகவின் நிர்பந்தத்திற்கு அடிபணிய மாட்டார்கள் என்பதற்கு சிறுமி நன்முகை வழங்கிய நிதி சாட்சி என்று சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.