சுருதிஹாசனுக்கு கை கொடுப்பாரா சிரஞ்சீவி

March 11, 2022

By லீமா ஷாலினி கோரிய

ஸ்ருதிஹாசன் நடிப்பில் கடந்த வருடம் லாபம் என்ற படம் வெளியானது.மேலும் அவர் நடித்த 3 தெலுங்கு படங்கள் ஒரு இந்திப் படம் ஆகியவையும் ரிலீஸ் ஆனது.

தற்போது பிரபாஸ் ஜோடியாக தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாள மொழிகளில் தயாராகும் படத்தில் நடித்து வருகிறார் ரூபாய் 150 கோடி மதிப்பில் செலவாகும் இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாகிறது.

அடுத்து தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா ஜோடியாக புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமா
கியுள்ளார் சுருதிஹாசன்.இது பாலகிருஷ்ணாவுக்கு 107 வது படம். படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

இந்த நிலையில் சிரஞ்சீவியின் 150வது படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க சுருதி ஹாசனுடன் பேசி வந்தனர்.வயதான நடிகரான சிரஞ்சீவியுடன் ஜோடி சேர சுருதிஹாசன் சம்மதிப்பாரா என்று தெலுங்கு பட திரையுலகம் சந்தேகத்தை கிளப்பியது.

இந்த நிலையில் சுருதிஹாசன் தனக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக சிரஞ்சீவி தனது சமூக வலை தளப் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

இருவரும் ஜோடியாக இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார் சிரஞ்சீவி. சுருதிஹாசனின் திரைப்பட வாழ்க்கைக்கு சிரஞ்சீவி கைகொடுப்பாரா என்று எதிர்பார்த்து கிடக்கிறது தெலுங்கு திரைப்பட உலகம்.

Share:

லீமா ஷாலினி கோரிய

March 11, 2022

Leave a Comment