chennireporters.com

மக்களை முட்டாளாக்கும் மூட பழக்க வழக்கங்கள்…

அட்சய திரிதியை அன்று தங்கம் வாங்கினால் வீட்டில் செல்வம் கொழிக்கும் என்று மூடத்தனமான பழக்கவழக்கங்களை சில தனியார் தங்க நகை கடை நிறுவனங்கள்
விளம்பரம் செய்து அடித்தட்டு மக்களில் இருந்து மேல்தட்டு மக்கள் வரையில் உள்ள குடும்பப் பெண்களை குறி வைத்து எப்படியாவது.

இந்த நாளில் தங்கம் வாங்கி விட வேண்டும் என்று பெண்கள் சிறுகச்சிறுக சேமித்த பணத்தில் நகை வாங்கி விட வேண்டும் என்று சர்வ சாதாரண மக்களின் மனதை குழப்பி நகை கடையின் கூட்டத்தில் போய் வரிசையில் நின்று தங்கம் வாங்குகிற போது தன் கழுத்தில் இருந்த தாலி செயினை பறிகொடுத்து விட்டு வருகிறவர்கள் பலர்.

அட்சயதிருதியை என்றால் என்ன என்பதை தமிழ் இலக்கியமான சிலப்பதிகாரம்
மாதவியின் மகளான மணிமேகலை கையிலுள்ள அட்சய பாத்திரத்தில் பசி என்று வருகிறவர்களுக்கு அள்ளி அள்ளி அன்னத்தை வழங்கினாலும் குறையாமல் அந்த அட்சய பாத்திரத்தில் அன்னம் நிறைந்திருக்கும் என்பது தான் பொருள் .

அதன் அடிப்படையில் அட்சய திரிதியை அன்று பொதுமக்கள் தங்கம் வாங்குவதற்குபதிலாக தன் வீட்டில் அன்றைக்கு சமைத்து நம் முன்னோர்களுக்கு படையில் போட்டுவிட்டு ஏழை மக்களுக்கு உணவளிக்க வேண்டும்.

அவர்களுக்கு வயிறு நிறைய சோறு போட்டால் தங்கள் வீட்டில் என்றைக்கும் அன்னம் குறையாமல் பசி என்கிற வார்த்தை இல்லாமல் இருக்கும்.

அட்சய திரிதியை அன்று நகை வாங்குவதை விட பசி என்று வருபவருக்கு தங்களால் முடிந்த அளவுக்கு உணவு அளித்தால் இறைவன் எப்போதும் உங்கள் இல்லத்தில் நிலைத்து இருப்பார் என்பதை விளக்குகிறது இந்த வீடியோ.

இதையும் படிங்க.!