chennireporters.com

திருவள்ளூர் மாவட்ட செயலாளரை பாராட்டிய தி.மு.க தலைவர்.

boopathy
திருத்தணி எம் பூபதி

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி மற்றும் திருவள்ளூர் ஆகிய இரண்டு தொகுதிகளில் தி.மு.க வெற்றி பெற்றதற்கு காரணம் திருவள்ளூர் மேற்கு தி.மு.க மாவட்ட செயலாளர் பூபதி வகுத்த வியூகம் தான் என்கிறார்கள் உடன் பிறப்புகள்.

25 ஆண்டுகளுக்குப் பிறகு திருத்தணி தொகுதியில் போட்டியிட்டது.அங்கு ஏற்கனவே நகராட்சி தலைவராக இருந்த வழக்கறிஞர் சந்திரன் என்பவர் போட்டியிட்டார்.அவரை வெற்றி பெறச் செய்ய வைப்பதற்கு மாவட்ட செயலாளர் பூபதி வகுத்த வியூகம் தான் திமுக வெற்றி பெற்றதற்கு காரணம் என்கிறார்கள்.

chandran
எஸ் சந்திரன்.MLA

தி.மு.க திருத்தணி மூத்த நிர்வாகிகள்.பிரச்சாரத்திற்குவேட்பாளர் எந்த பகுதிக்கு எப்போது போக வேண்டும்.பொதுமக்களுக்கு கொடுக்க படவேண்டியவாக்குறுதிகள் என்ன?அதை எப்படி பத்திரிகையாளர்களுக்கு செய்தியாக தருவதுகூட்டணி கட்சி தலைவர்களை அரவணைப்பது போன்ற எல்லா வேலைகளையும் பூபதி சிறப்பாக செயல்பட்டு கட்சியினரை வழிநடத்தினார் என்கிறார்கள் திருத்தணி தி.மு.க வினர்.

திருத்தணி முழுக்க உள்ள மலைப் பகுதியான கிராமங்களுக்குச்   செல்வது கட்சியின் மூத்த உறுப்பினர்களை சந்தித்து ஆதரவு திரட்டுவது கூட்டணிக் கட்சிகளை ஒருங்கிணைத்து தேர்தல் வேலை செய்ய அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுப்பது தேர்தல் நேரத்தில் எந்த வித மனக்கசப்பும் இல்லாமல் அவர்களை தேர்தல் வேலை செய்ய ஊக்கப்படுத்தி தட்டிக் கொடுத்தது தான் தி.மு.க.வின் மாபெரும் வெற்றிக்கு காரணமாக அமைந்தது என்கிறார்கள் கட்சியின் சீனியர்கள்.

ஏற்கனவே அந்த தொகுதியில் எம்.எல்.ஏ வாகவும் அரக்கோணம் நாடாளுமன்ற அதிமுக எம்.பி யாகவும் இருந்த அரியை எதிர்த்து வெற்றி பெற்றிருப்பது சாதாரண காரியம் இல்லை என்கிறார்கள் கூட்டணிக் கட்சித் தலைவர்கள்.

சந்திரனும் அரியும் ஒரே சமூகம்  என்பதால்  இரு தரப்புக்கும்  சமமான  ஓட்டு கிடைக்கும் என்றார்கள்.ஆனால் பள்ளிப்பட்டு, பொதட்டூர் பேட்டை, ஆர்கே பேட்டை, போன்ற பகுதிகளில் முதலியார் சமூகத்தினர் அளித்த வாக்கு தான் சந்திரன் வெற்றிக்கு காரணமாய் அமைந்தது.

அந்த பகுதியில் ஏற்கனவே கைத்தறி தொழில்கள் நசுங்கி இருக்கிற நிலையில் அந்த மக்களுக்கு என்னென்ன தேவை என்பதை புரிந்து கொண்டு ஏற்கனவே நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கட்சி தலைமை இடத்தில் பூபதி வலியுறுத்தியிருந்தார்.

அதையே தேர்தல் வாக்குறுதியாகவும் அளிக்கப்பட்டது.எனவே அந்த மக்களும் 25 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்த சின்னமான உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு அளிப்பதற்கு அவர்கள் காட்டிய ஆர்வம் வேகம் முனைப்பு அவர்கள் எப்படி தேர்தல் பணியாற்ற வேண்டும் என்பது குறித்து பூபதி வழி நடத்திச் சென்ற அந்த வேகம் பாராட்டுதலுக்குரியது என்கிறார்கள் கூட்டணி கட்சி தலைவர்கள்.

திருத்தணி தொகுதியில் தி.மு.க.வின் நிலை என்பது நிலை என்ன என்பது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் இடத்தில் பூபதி சென்று சந்தித்தபோது 25ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தொகுதியில் நாம் கண்டிப்பாக வெற்றி பெறுவது உறுது என்று ஆணித்தரமாக சொன்னாராம்.சொன்னதைக் போலவே 28301 வாக்கு வித்தியாசத்தில் சந்திரன் வெற்றி பெற்றார்.அவர் வாங்கி மொத்த வாக்குகள் 1,18,005. முதல் முறையாக சட்டமன்றத்திற்கு செல்கிறார் சந்திரன்.திருத்தணியில் வெற்றியை உறுதி செய்தது மாவட்ட செயலாளர் பூபதியின் வியூகம் தான் என்றே சொல்லலாம்.திருவள்ளூர்.

கடந்த ஐந்து ஆண்டுகளாக திருவள்ளூரில் தி.மு.க எம்.எல்.ஏ வாக இருந்த வி.ஜி. ராஜேந்திரனுக்கு மீண்டும் திருவள்ளூரில் போட்டியிட திமுக தலைமை வாய்ப்பு வழங்கியது.ஆனால் இவரை எதிர்த்து களம் கண்ட அதிமுக பிரமுகர் முன்னாள் அமைச்சர் ரமணாவின் தனது சொந்தத் தொகுதி.ஏற்கனவே இந்த தொகுதியில் வெற்றி பெற்று அமைச்சராக இருந்தவர்.ரமணாவை தோற்கடிக்க முடியாது.

ரமணா தான் வெற்றி பெறுவார் என்ற பேச்சு பரவலாக பேசப்பட்டது.அதையும் மீறி பூபதி எடுத்த தேர்தல் வியூகம் தான் இங்கும் வெற்றி பெற காரணமாக அமைந்தது.பூண்டி ஒன்றியத்தில் உள்ள பல கிராமங்களில்அல்லிக்குழி, பிளேஸ் பாளையம், சென்றாயன் பாளையம், திருப்பாக்கம், பப்பிரெட்டி கண்டிகை, நம்பாக்கம் போன்ற காடுகளை ஒட்டியுள்ள கிராமப் பகுதிகளில்தி.மு.க.வினர் எப்படி பணியாற்ற வேண்டும் என்று மாவட்ட செயலாளர் அறிவுரை வழங்கி யிருந்தார்.

vgr 1
வி. ஜி. ராஜேந்திரன்.MLA

அதைத்தவிர பூத் கமிட்டிகள் அமைப்பது என பல யுத்திகளை பூபதி சாணக்கியத்தனமாக கையாண்டதால்தான் திருவள்ளூரில் வி. ஜி. ராஜேந்திரன் வெற்றி பெறுவதற்கு காரணமாக அமைந்தது என்று சொல்லலாம். வி.ஜி.ராஜேந்திரன் 22,701 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

அவர் வாங்கிய மொத்த வாக்குகள் 10,77,09தேர்தல் வெற்றிக்கு பிறகு தி.மு.க தலைவரும் முதலமை ச்சருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து சொல்ல சென்ற போது திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் பூபதியை தி.மு.க. தலைவர் வெகுவாக பாராட்டினாராம்.

இதையும் படிங்க.!