chennireporters.com

நெகிழ்ந்த இளம்பெண் கனிவுடன் பேசிய முதல்வர் ஸ்டாலின்.

archana and cm
அர்ச்சனாவுடன் பேசும் முதல்வர்

கொரானாவின் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது இந்நிலையில் சென்னை நந்தனத்தில் உள்ள டி.எம்.எஸ் வளாகத்தில் இயங்கி வரும் கட்டணமில்லா தொலைபேசி 104 என்ற இலவச கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது.இந்த கட்டுப்பாட்டு அறை24 மணி நேரமும் செயல்படும்.அதிகாரிகள் தொடர்ந்து சுழன்று பணியாற்றி வருகிறார்கள்.

சென்னையில் உள்ள மக்களுக்கு தேவையான மருத்துவ உதவிகள் தேவைப்படும் ஆக்சிஜன் எந்த மருத்துவ மனையில்இடம் காலியாக இருக்கிறது என்ற ஆலோசனை களை தருவார்கள்.இந்த அலுவலகத்தில் நேற்று இரவு சுமார்11.30 மணியளவில் திடீரென அந்த அலுவலகத்திற்குள் நுழைந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எப்படி அந்த அலுவலகம் செயல்படுகிறது என்று ஆய்வு நடத்தினார்.

அப்போது அதிகாரிகளிடம் பேசிக்கொண்டிருக்கும்போதே சென்னை நுங்கம்பாக்கத்தில் இருந்து அர்ச்சனா என்ற இளம்பெண் அந்த அலுவலகத்திற்கு ஃபோன் செய்தார்.மறு முனையில் ஃபோனை எடுத்த முதல்வர் ஸ்டாலின் உங்கள் பெயர் என்ன என்ன உதவித்தேவை என்று கேட்டார்.

அந்த பெண் தனது உறவினருக்கு உடல்நலம் சரியில்லை ஆம்புலன்ஸ் தேவை.எந்த மருத்துவமனையில் சேர்க்க இடம் இருக்கிறது என்று கேட்டார்.அதற்கு முதல்வர் ஸ்டாலின் ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு செல்லுங்கள் ஆம்புலன்ஸ் உங்கள் வீட்டிற்கு வரும் என்று பதில் சொன்னார்.பின்னர் அந்த பெண்ணுக்கு தேவையான உதவிகளை செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அதனைத் தொடர்ந்து அர்ச்சனாவின் வீட்டிற்கு சென்ற அதிகாரிகள் அவரது உறவினருக்கு தேவையான மருத்துவ வசதிகளை செய்து தர ஆம்புலன்ஸ் அனுப்பி சிகிச்சை அளித்தனர்.இது குறித்து செய்திகள் வெளியானதும் தான் தமிழக முதல்வர் இடத்தில்தான் பேசினோம் என்று தெரியாத அந்த இளம்பெண் இன்று பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பிய போது எனக்கு உதவி கேட்டு நான் ஃபோன் செய்தேன்.

அப்போது எதிர் முனையில் ஃபோனை எடுத்த து மு.க.ஸ்டாலின் பேசுகிறேன் என்று சொன்னார் எனக்கு யாரென்று தெரியவில்லை.சரியாக காதில் விழவில்லை இரண்டு முறை அவர் சொன்னது எங்கேயோ கேட்ட குரல் மாதிரி இருக்கிறது என்று யோசித்தேன்.பிறகு தான் தெரிந்தது. அது முதலமைச்சர் என்று மகிழ்ச்சி அடைந்தேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஒரு முதல்வர் என்கிற பந்தா இல்லாமல் தான் கேட்ட குறைகளை கேட்டறிந்து உடனடியாக செய்து கொடுத்தார் என்று கண்ணீர் மல்க நெகிழ்ந்து பேசினார் அர்ச்சனா.முதல்வரின் இந்த செயல்பாடு அங்கிருந்த அதிகாரிகளை நெகிழச் செய்தது.சற்று தோய்வுயுற்ற நிலையில் வேலைபார்த்த ஊழியர்களுக்கும் முதல்வரின் செயல்பாடு பெரும் மகிழ்ச்சி அளித்தது.

இதையும் படிங்க.!