“ஆம் ஆத்மி ஒரு சிறிய கட்சி – தொடங்கி 10 ஆண்டுகள் தான் ஆகின்றன””இந்த சிறிய கட்சியை தீர்த்து கட்டும் முயற்சியை பிரதமர் மோடி நிறுத்தவில்லை””ஒரே நேரத்தில் ஆம் ஆத்மி கட்சியின் 4 முக்கிய தலைவர்களை சிறையில் அடைத்துள்ளனர்”
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்
“ஆனால் ஆம் ஆத்மி கட்சியின் பலம் பல மடங்கு அதிகரித்து உள்ளது””தேசத்தின் மிகப்பெரிய ஊழல்வாதிகளை பாஜகவில் இணைத்து வருகின்றனர்””ஆனால் தான் ஊழலுக்கு எதிராக போராடி வருவதாக பிரதமர் மோடி பேசி வருகிறார்””நாட்டையும், மக்களையும் காப்பாற்ற வேண்டும் என பிச்சை எடுக்க வந்திருக்கிறேன்”
“எனக்கு கிடைத்துள்ள நேரத்தில் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வேன்””என் ஒவ்வொரு துளி ரத்தத்தையும் நாட்டு மக்களுக்கு சிந்தத் தயார்””இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார்? என்று கேட்கிறார்கள்””பாஜக கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார்? என்று நான் கேட்கிறேன்”
“பிரதமர் மோடியும் அரசியலில் இருந்து ஓய்வுபெற உள்ளார்””மோடி ஓய்வு பெற்றால் அவரது உத்தரவாதத்தை பூர்த்தி செய்யப் போவது யார்?””ஜூன் 4ஆம் தேதிக்கு பிறகு பாஜக ஆட்சி இருக்கப் போவதில்லை””முதலமைச்சர் பதவி மீதும், பிரதமர் பதவி மீதும் எனக்கு ஆசை இல்லை” என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். மேலும் அவர் பாஜகவைப்பற்றி பேசிய அவர் 75 வயதானால் ஓய்வு என்ற விதி இருப்பதாக தெரிவித்தார். அதற்கு அமித்ஷா 75 வயதானால் ஓய்வு என்ற விதி பாஜகவில் இல்லை என கெஜ்ரிவாலுவின் எஏள்விக்கு அமித் ஷா பதில் அளித்துள்ளார்.
பிரதமர் மோடிக்கு அடுத்த ஆண்டு 75 வயது ஆவதால் பிரதமர் ஆகமாட்டார் என கெஜ்ரிவால் கருத்து தெரிவித்தார். பாஜகவே மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அமித்ஷாவே அடுத்த பிரதமர் என்றும் கெஜ்ரிவால் பேசினார்
சிறையிலிருந்து வெளியே வந்த டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அந்தப் பகுதியில் உள்ள அனுமன் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்துவிட்டு வீட்டிற்கு வந்தார் வீட்டில் தனது தாயைப் பார்த்ததும் கட்டி அணைத்து ஆற தழுவி முத்தமிட்டார் அவரும் தனது மகனை கட்டித்தழுவி முத்தமிட்டு அவருக்கு மாலை அணிவித்தார் அரவிந்த் கெஜ்ரிவால் தனது தாய் தந்தையரின் காலில் விழுந்து ஆசி வழங்கி வாங்கினார் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.