chennireporters.com

“இது தான் இவர்களின் சிறப்பு”

cm.mks

யார் இந்த நால்வர் அணி..?

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் முதன்மை செயலாளர்களாக
த.உதயசந்திரன்,
டாக்டர் பி.உமாநாத்,
எம்.எஸ்.சண்முகம்,
அனு ஜார்ஜ் ஆகிய நான்கு IAS அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
யார் இந்த ஐஏஎஸ்.கள்..?

உதயசந்திரன் IAS

* தமிழகத்திற்கே அவமான சின்னமாக இருந்த பாப்பாபட்டி கீரிப்பட்டி தேர்தல்களை முன்னின்று நடத்தி வெற்றி கண்டவர்.

டாக்டர் பி.உமாநாத் IAS

* கல்லூரி மாணவர்களுக்கு பல நூறு கோடி ரூபாய் கல்விக்கடனாக வழங்க ஏற்பாடு செய்தவர். நிதி நிர்வாகத்தை திறம்பட கையாண்டவர்.

எம்.எஸ்.சண்முகம் IAS

* இடஒதுக்கீடு குறித்து சரியான புரிதலை தரும் வகையில் பாடத்திட்டத்தை உருவாக்கியவர். “பாரத் நெட்” டெண்டரில் முறைகேடு என கையெழுத்து போட மறுத்து கோப்பை திருப்பி அனுப்பியவர்.

அனு ஜார்ஜ் IAS

அதிமுக ஆட்சியின் அதிகார மிரட்டலுக்கு அடிபணியாமல் அங்கன்வாடி ஊழியர் பணி நியமனங்களில் தகுதி அடிப்படையில் ஊழியர் நியமனம் செய்தவர். இதனாலயே பழி வாங்கப்பட்டு, ஓரங்கட்டப்பட்டவர்.

** பணம் குவிக்க தடையாக இருந்ததால், குப்பையில் வீசப்பட்ட இந்த மாணிக்க கற்களை தேடிக்கண்டு பிடித்து, சரியான இடத்தில் அமர வைத்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
இனி, தமிழகத்துக்கு ஏறுமுகம்தான்.

தன்னோட டீம் சரியாக இருந்தால் வெற்றிக்கோப்பை மடியில் வந்து விழுவதை யாராலும் தடுக்க முடியாது.

கிரேட் சல்யூட்..!!

இதையும் படிங்க.!