chennireporters.com

எஸ்.பி ரச்சனா சிங் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எஸ்.பி.ரச்சனா சிங்

புதுச்சேரியில் சன் டிவி செய்தியாளரை மிரட்டிய பெண் எஸ்பி ரச்சனா சிங் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்திபொது நல அமைப்புகளின் சார்பில் கூட்டறிக்கை வெளிடப்பட்டுள்ளது.

குற்றப் பின்னணி உடையவர்களோடு தொடர்பு வைத்துக் கொண்டு பணியில் ஒழுங்கீனமாக நடந்துகொண்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ரச்சனாசிங் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுநல அமைப்புகள் சார்பில் புதுச்சேரி அரசை வலியுறுத்துகிறோம்.

புதுச்சேரி காவல்துறையில் கண்காணிப்பாளராக பணியாற்றி வரும் திருமதி ரச்சனாசிங் அவர்கள் திருமண விழா ஒன்றில் குத்தாட்டம் போட்ட செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கண்ணியமிக்க சீருடை பணியாளர்களான காவல்துறையைச் சேர்ந்த ஓர் உயரதிகாரி குற்றப் பின்னணி உள்ள நபரின் குடும்ப விழாவில் குத்தாட்டம் போடுள்ள காணொளி வெளியாகி உள்ளது.

இச்செயல் சட்டத்தின் மீதும், காவல்துறை மீதும் பொது மக்களுக்கு அவமதிப்பை ஏற்படுத்தும்.

புதுச்சேரியில் கண்காணிப்பாளர் திருமதி ரச்சனாசிங் பணியமர்த்தப்பட்டு ஒன்பது ஆண்டுகள் கடந்த நிலையில் அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சொல்லப்படுகிறது.

அவர் அதிகாரத்தை கையில் வைத்துக் கொண்டு சட்டத்துக்குப் புறம்பாக குற்றப் பின்னணி உள்ள நபர்களுக்கு சாதகமாக செயல்படுவதாகவும்,அவர்களால் பல அனுகூலங்களை அடைவதாகவும் பரவலாக பேசப்படுகிறது.

மன்மத ராசா பாடலுக்கு குத்தாட்டம் போடும் எஸ்.பி.ரச்சனா சிங்.

மேலும், குத்தாட்ட செய்தியை வெளியிட்ட நாட்டின் நான்காவது தூணான ஊடகவியலாளர்களை மிரட்டியுள்ளார். இதுகுறித்து அவர் மீது நடவடிக்கை எடுக்க பத்திரிகையாளர் சங்கத்தினர் காவல்துறை உயரதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர்.

எனவே, புதுச்சேரி அரசும், காவல்துறையும் காவல் கண்காணிப்பாளர் திருமதி ரச்சனாசிங் மீது துறை ரீதியான விசாரணை நடத்தி, பணியில் ஒழுங்கீனமாக நடந்துகொண்ட
தற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதோடு அவரை புதுச்சேரி காவல்துறையிலிருந்து பணியிடமாற்றம் செய்து,
காவல்துறை மீது படிந்த கலங்கத்தைப் போக்க வேண்டும்.

இல்லையேல், பொதுநல அமைப்புகள் ஒன்றிணைந்து போராட்டம் நடத்துவோம் என அரசுக்கும், காவல்துறை தலைமைக்கும் தெரிவித்துக்கொள்கிறோம்.

திராவிடர் விடுதலை கழகம் லோகு.ஐய்யப்பன் மீனவர் விடுதலை வேங்கைகள் இரா.மங்கையர் செல்வம்

மக்கள் உரிமை கூட்டமைப்பு கோ.சுகுமாரன்தந்தை பெரியார் திராவிடர் கழகம்
ம.இளங்கோமக்கள் வாழ்வுரிமை இயக்கம் கோ.அ.ஜெகன்நாதன் தமிழர்களம்
கோ.அழகர் புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர் படை ஆ.பாவாடைராயர் தமிழக வாழ்வுரிமை கட்சி சி. ஸ்ரீதர நகர தலித் பாதுகாப்பு இயக்கம் பி.பிரகாஷ்

இதையும் படிங்க.!