chennireporters.com

கோவை சின்மயா வித்யாலயா பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் பெங்களூரில் கைது .

பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன்

கோவை பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் சின்மயா பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனை தனிப்படை போலீசார் பெங்களூரில் கைது செய்தனர்.

மிதுன் சக்கரவர்த்தி

கோவை மாவட்டத்தில் உள்ள சின்மயா வித்யாலயா பள்ளியில் படித்து வந்த 12ஆம் வகுப்பு மாணவி ஒருவர் அந்தப் பள்ளியில் பணியாற்றிய இயற்பியல் ஆசிரியர் மிதுன்சக்கரவர்த்தி பாலியல் தொல்லை கொடுத்ததாக இரண்டு தினங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார்.

மிதுன் பாலியல் தொல்லை செய்ததால் தான் மாணவி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.மாணவி தனது கைப்பட ஒரு கடிதத்தை எழுதி வைத்திருந்தார்.

அந்த கடிதத்தில் யாரையும் சும்மா விடக்கூடாது என்று மூன்று பெயர்களை குறிப்பிட்டு இருந்தார்.அதை முக்கிய ஆதாரமாக வைத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உடனடியாக ஆசிரியர் மீது சக்கரவர்த்தியை போலீசார் கைது செய்தனர்.இதையடுத்து சம்பந்தப்பட்ட பள்ளியின் பிரின்சிபல் மீரா ஜாக்சன் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர் .

அந்த மாணவி தனக்கு நடந்த கொடுமைகளை முதல்வரிடம் பலமுறை சொல்லியிருக்கிறார்.அந்த மாணவியை பிரின்ஸிபல் மீராஜாக்சன் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவ சிகிச்சை அளித்துள்ளார் என்று கூறப்படுகிறது.

எனவே அவரையும் கைது செய்ய வேண்டும் என்று போராட்டம் நடத்தினர்.அதுவரை இறந்த மாணவியின் உடலை வாங்க முடியாது என்று மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் கோவையில் சின்மயா வித்யாலயா பள்ளி நிர்வாகத்தை கண்டித்து இறந்துபோன மாணவியின் உறவினர்கள் பொதுமக்கள் மகளிர் அமைப்புகள் மாணவர் அமைப்புகள் என பல அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தற்போது மிதுன் சக்கரவர்த்தி மாணவியுடன் வாட்ஸ்அப் பின் பேசிய ஆடியோக் களும் வாட்ஸ்அப் மெசேஜ்களும் தற்போது வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் மீரா ஜாக்சனை தேடும் பணி தீவிரம் அடைந்தது.மீரா பெங்களூரில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதனை அடுத்து பெங்களூருக்கு சென்ற தனிப்படை போலீசார் மீரா ஜாக்சனை கைது செய்தனர். பின்னர் அவரை கோவை அழைத்து வந்து நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

பள்ளி முதல்வர் கைது செய்யப்பட்டதை அடுத்து மாணவியின் உடலை பெற்றோர்கள் பெற்றுக் கொள்ள சம்மதம் தெரிவித்தனர்.

மிதுன் சக்கரவர்த்தி க்கும் அந்த பள்ளியில் உள்ள பல பெண் ஆசிரியர்களுக்கும் இன்னும் பல மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து இருக்கலாம் என்றும் பலர் சொல்வதற்கு வெட்கப்பட்டு மறைப்பதாக மாணவர்கள் பலர் கூறுகிறார்கள்.

அது தவிர பள்ளியின் நிர்வாகத்திற்கு தனித்தனியாக மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் புகார் அளித்து வருவதாக கூறப்படுகிறது.

முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்கள் தனி கவனம் செலுத்தி சின்மயா பள்ளியின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க.!