chennireporters.com

#Coimbatore college student gang-raped; கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்முறை. மூன்று பேர் கைது. துணை ஜனாதிபதி வேதனை..

கோயம்புத்தூர் மாவட்டம் ஒண்டிப்புதூர் அருகே தனது நண்பருடன் காரில் பேசிக் கொண்டிருந்த இளம் பெண்ணை மூன்று இளைஞர்கள் கடத்திச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது தமிழகத்தையே அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

கோவை மாவட்டம் ஒண்டிப்புதூர் அருகே வினித் என்கிற இளைஞர் செல்போன் கடை நடத்தி வருகிறார். இவருக்கும் தனியார் கல்லூரியை சேர்ந்த 20 வயது மாணவிக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. 2-ம் தேதி இரவு 11 மணி அளவில் அந்த மாணவி கோவை விமான நிலையம் பிருந்தாவன் நகர் பின்புறம் உள்ள பகுதியில் வினித்துடன் காரில் தனியாக பேசிக் கொண்டிருந்தார்.

வினித்துடன் காரில் அமர்ந்து இருவரும் பேசிக் கொண்டிருந்தபோது அங்கு மூன்று பேர் கொண்ட கும்பல் மோட்டார் பைக்கில் வந்துள்ளனர். அவர்கள் காரை அடித்து நொறுக்கி வினித்தை தாக்கி விட்டு காரில் இருந்த கல்லூரி மாணவியை தூக்கிச் சென்றனர். தொடர்ந்து மாணவியை 3 பேரும் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பி ஓடியுள்ளனர்.

வினித் கொடுத்த தகவலின் பேரில் பீளமேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த மாணவியை மீட்டு வினித்தையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். தப்பி ஓடியவர்களை பிடிக்க ஏழு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

முதல் கட்ட 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் கட்டணமாக சம்பவத்தில் ஈடுபட்டதில் இரண்டு பேர் 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் என்றும் ஒருவர் சுமார் 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் என்றும் முதல் கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளது.

அவர்கள் கோவில் பாளையத்தில் ஒரு டிவிஎஸ் வண்டியை திருடி வரும் வழியில் இச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் கோவை மட்டுமல்ல தமிழ்நாட்டையே அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.கோவை மாணவி பாலியல் வன்கொடுமை: 3 பேரை சுட்டுப் பிடித்த போலீஸார் - நடந்தது  என்ன? | coimbatore girl student sexual assault police catches three men by  gun shot - hindutamil.in

இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட வினித் மற்றும் மாணவி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பான பகுதிகளில் போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் . வட மாநிலத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

கோயம்புத்தூர் வந்த இந்திய துணை ஜனாதிபதி சிபி ராதாகிருஷ்ணன் எந்த பெண்ணுக்கும் நடக்க கூடாத ஒரு கொடூரம் என்று வேதனை தெரிவித்துள்ளார்.

துணை ஜனாதிபதி சி பி ராதாகிருஷ்ணன்.

சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த சதீஷ், குணா, கார்த்தி ஆகிய மூன்று இளைஞர்களை வெள்ளக்கிணறு பகுதியில் நேற்று நள்ளிரவு போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்து கைது செய்தனர். அவர்க ளிடத்தில் வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

இதையும் படிங்க.!