chennireporters.com

கோவை தி.மு.க. பொறுப்பாளர் குறித்து பொய்ச் செய்தி வெளியிட்ட மாத இதழ் மீது காவல் நிலையத்தில் புகார்.

கோவை எட்டிமடை பேரூராட்சி தி.மு.க பொறுப்பாளராக இருப்பவர் ஆனந்தக்குமார் இவரைப்பற்றி சென்னையிலிருந்து வெளியாகும் மாத இதழ் நல்லாட்சி என்ற பத்திரிகையில் உண்மை தன்மையை விசாரிக்காமலும், தன்னுடைய விளக்கத்தை பெறாமல்.

தன்னுடைய நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பொய்ச்செய்தி வெளியிட்ட நல்லாட்சி பத்திரிகை மீது கோயம்புத்தூர் மாவட்டம் கே.ஜி.சாவடி ஆர்.8 காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

நல்லாட்சி பத்திரிகை மீது காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகாருக்கு வழங்கப்பட்ட சிஎஸ்ஆர் காப்பி

இது குறித்து ஆனந்த குமார் நம்மிடம் கோவை மாவட்டம், எட்டிமடை பேரூராட்சி தி.மு.க பொறுப்பாளராக நான் இருந்து வருகிறேன் தி.மு.கவை தனது உயிருக்கு மேலாக மதித்து கட்சியின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு செயலாற்றி வருகிறேன்.

கலைஞர் மீதும் தற்போதைய தி.மு.க தலைவரும் முதலமைச்சருமான மு.க ஸ்டாலின் மீதும் தீவிர விசுவாசம் வைத்திருப்பவன் என் மீது மறை முகமான காழ்ப்புணர்ச்சியும் வெறுப்பும் சிலரிடம் நிலவி வருகிறது.

இந்நிலையில் சென்னையில் இருந்து வெளிவரும் நல்லாட்சி மாத பத்திரிக்கையில்,
என்னை பற்றி ஆதாரம் இல்லாத, வெறும் வாய்மொழிச் செய்தி அடிப்படையில் தவறான செய்தியை வெளியிட்டிருக்கிறார்கள்.

திமுக தலைவர் ஸ்டாலினுடன் ஆனந்தகுமார்

இது தொடர்பாக சட்டப்பூர்வமாக நல்லாட்சி இதழுக்கு தமது கண்டனத்தை தெரியப்படுத்தினேன் கே.ஜி சாவடி ஆர் 8 காவல்நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளேன்.

இதையடுத்து காவல்துறையினர், நல்லாட்சி பத்திரிக்கை வெளியீட்டாளர் ஜெ.கதிர்வேல், நிர்வாக ஆசிரியர் ஜெ.கிஷோர் நாத், செய்தி ஆசிரியர் ரங்கபாஷ்யம் ஆகியோர் மீது அவதூறு வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ஆகஸ்ட் மாதம் வெளியாக இருக்கும் இதழில் முன்னதாக PDF காப்பியை சமூக வலைதளங்களிலும் மற்றும் பல வாட்சப் குழுக்கள் மூலம் பகிர்ந்துள்ளனர்.

அதில் என்னை பற்றி உண்மைக்கும் புறம்பாக செய்தி பதிவிடபட்டுள்ளதை அறிந்து அதிர்ச்சியடைந்தேன் எனவே நான் நல்லாட்சி பத்திரிக்கையின் அலுவலர்களை தொடர்புகொன்டு பேசியபோது அவர்கள் எனக்கு சரியான விளக்கத்தை கொடுக்கவில்லை.

எனவே ஜுலை 25 ம் தேதி காலை கோவை, கே.ஜி சாவடி, R8 காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளேன் அவர்களும் இதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்து CSR காப்பி கொடுத்துள்ளனர்.

இதே போல் என்னை பற்றி போலி செய்திகளையும், வதந்திகளையும் பதிவிடுபவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என எட்டிமடை தி.மு.க பேரூர் கழக பொறுப்பாளர் ந.ஆனந்தகுமார் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து நல்லாட்சி மாத இதழின் வெளியீட்டாளர் கதிர்வேல் நம்மிடம் நாங்கள் விசாரித்து தான் செய்தி வெளியிட்டுள்ளோம் எல்லா செய்திகளிலும் கருத்து கேட்டு எழுத வேண்டும் என்று சட்டமில்லை.

எங்களிடம் ஆனந்த குமார் பற்றி ஆதாரம் இருக்கிறது. நாங்கள் வழக்கை சந்திக்க தயாராக இருக்கிறோம் என்று தெரிவித்தார் ஆகஸ்ட் மாத இதழில் வெளியிடப் போகும் செய்தியை முன்னதாக ஏன் சமூக வலைதளங்களில் பரப்பினார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதுதவிர சர்ச்சைக்குரிய செய்திகளை வெளியிடும் போது அது தொடர்பாக இரு தரப்பிலும் விளக்கத்தைக் கேட்டு எழுதவேண்டும் என்பதே சரி.

இதையும் படிங்க.!