chennireporters.com

ஊரடங்கில் சாதித்த கோவை குருகுலம் பள்ளி மாணவன்…!! குவியும் பாராட்டுகள் !!

உலகத்தையே உலுக்கிய கொரோனா காலத்தில் பள்ளி விடுமுறையை பயனுள்ள வகையில் பயன்படுத்தி கோவை மாணவன் ஒருவன் சாதனைச் சிறுவன் என பெயர் எடுத்துள்ளார்.

அந்த சிறுவனுக்கு சமூக ஆர்வலர்கள், காவல்துறை அதிகாரிகள் தரப்பில் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகிறது!

கோவை நகரத்தை ஒட்டியுள்ள கோவைப்புதூர் பகுதியை சேர்ந்த சாதனைச் சிறுவன் ம.பாரத் 13 வயதான இந்த சிறுவனுக்கு சாதிக்க வேண்டும் என்கிற உணர்வு பிஞ்சு உள்ளத்திலேயே எப்படியோ ஆழமாக பதிந்து விட்டது.

அதற்கு காரணம், சிறுவனின் தந்தை மணிகண்டன், தாய் பத்மா ஆகியோர் அளிக்கும் உற்சாகமும ஆதரவும் தான்! மேலும் மொபைலை கையாளும் சுதந்திரத்தையும் அளித்துள்ளனர்.

பாரத்தின் ஒரே அண்ணன் விக்னேஷ் கோவைப்புதூரில் உள்ள பிரபலமான குருகுலம் பள்ளியில் ஏழாவது படிக்கும் சிறுவன் பாரத்துக்கு சிறுவயது முதல் எதையும் ஆராய்ந்து கேள்வி கேட்கும் பழக்கமும் வழக்கமும் உடைய குணம்.

தனக்கு உலகத் தலைவர்களில் மகாத்மா காந்தியையும் இந்திய அளவில் விஞ்ஞானியும் முன்னாள் குடியரசுத் தலைவருமான அப்துல்கலாமையும் மிகவும் என்கிறார்.

அடுத்தபடியாக குருகுலம் பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள், அனைவரையும் பிடிக்கும் எனக் கூறி நம்மை ஆச்சரியப்படுத்துகிறார், சாதனை சிறுவன் பாரத்..!

பிடித்த நண்பர்கள் இந்தியர்கள் எனக் கூறுகிறார், இந்த தேசப்பற்று மிக்க சிறுவன் !வருங்காலத்தில் நேர்மையான கலெக்டர் ஆவதே லட்சியம் எனவும் சொல்லும் பாரத்,
இரண்டு யூடியூப் சேனல் நடத்தி வருகிறார் Bharath Vignesh Sai channel மற்றும் BVS Editing என அதற்கு பெயர்கள் வைத்துள்ளார்.

சிலம்பம் ஆடுவது, கட்டுரை எழுதுவது மற்றும் பேச்சுத்திறமை மிகுந்த சாதனைச் சிறுவன் பாரத், தான் படிக்கும் பள்ளிக்கும் பெற்றோருக்கும் பெருமை சேர்ப்பார் என்பதில் ஐயமில்லை !

இதையும் படிங்க.!