நகைச்சுவை நடிகர் லிட்டில் ஜான் காலமானார்.

April 7, 2022

By குணசேகரன் வே

நகைச்சுவை நடிகர் லிட்டில் ஜான் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

நாமக்கல் மாவட்டம் அல்லிநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்தவர் தனசேகரன் என்கிற லிட்டில் ஜான்(43) 3 அடி உயரம் கொண்ட இவர்தமிழில் நகைச்சுவை நடிகராக வெங்காயம், ஜம்புலன் ஆகிய திரைப்படங்களில்நடித்துள்ளார்.

பின்,சினிமாவில் அதிக வாய்ப்புகள் இல்லாததால் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார்.இந்நிலையில், திருச்செங்கோடு பகுதியில் நடை பெற்ற கோயில் திருவிழா கலை நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

பின்னர் வீட்டிற்கு வந்த அவர் மறு நாள் காலை எழுந்திருக்கவில்லை.காலை நீண்ட நேரம் ஆனதால் வீட்டில் இருந்தவர்கள் அவரை எழுப்பினர்.ஆனால் அவர் நெடு நேரமாகியும் எழுந்திருக்கவில்லை.மருத்துவர்கள் வந்து பரிசோதித்ததில்அவர் மாரடைப்பால் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.

Share:

குணசேகரன் வே

April 7, 2022

Leave a Comment