கோவை மாவட்டத்தில் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஸ்பா மசாஜ் சென்டர்கள் இயங்கி வருகிறது. அதில் மசாஜ் செய்யாப்படாமல் மறை முகமாக விபச்சாரம் நடந்து வருகிறது. கோவை கமிஷனர் பாலகிருஷ்ணனின் அதிரடி நடவடிக்கையால் பல மசாஜ் சென்டர்கள் தற்போது மூடப்பட்டுள்ளன. இருப்பினும் சில இடங்களில் மறைமுகமாக இந்த ஸ்பா மையங்களில் விபச்சாரம் நடை பெற்று வருகிறது.
கோவை மாநகரில் மூடப்பட்ட ஸ்பா மையங்களை நடத்தி வந்தவர்கள் போலீஸ் கெடுபிடியால் அவர்கள் தற்போது மொபைல் விபச்சாரம் செய்து வருகின்றனர். இந்த மசாஜ் சென்டர்களில் ஆயில் மசாஜ் , பவுடர் மசாஜ் , கிரீம் மசாஜ் போன்ற மசாஜ்கள் செய்வார்கள். ஆனால் பல மசாஜ் சென்டர்களில் மறைமுகமாக விபச்சாரம் நடைபெற்று வருகிறது. இதற்கு சில காக்கிகளின் துனை உடன் நடந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த இடங்களில் வெளிமாநில மற்றும் கேரளா பெண்களை வைத்து விபச்சாரம் நடைபெற்று வருகிறது.
இதை காவல்துறை தடுக்க முடியாமல் விட்டு விடுகின்றனர். ஸ்பா மையம் நடத்தும் உரிமையாளர்களிடம் சில டுபாக்கூர் பத்திரிகையாளர்கள் கூகுள் பே (google pay) மூலம் மிரட்டி பணம் பெற்று வந்தனர். அது குறித்து நாம் நமது இணையதளத்தில் (Chennai reporters.com) செய்தி வெளியிட்டவுடன் கூகுள் பே மூலம் பணம் பெறாமல் சம்பந்தப்பட்ட நபரிடம் நேரடியாக சென்று சிசிடிவி இல்லாத இடமாக பார்த்து லஞ்சப்பணத்தை வாங்கி வருகின்றனர்.
டிஜிபி சங்கர் ஜிவால்
இந்த ஸ்பா மையங்களால் கோவை மாநகரில் பல பிரச்சனையும் பொருளாதார நெருக்கடிகளும் அதிக அளவில் ஏற்படுவதாக கோயம்புத்தூர் மாநகரை சேர்ந்த சில சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர். மேலும் அவர்கள் அடிக்கடி போலீசாருக்கு பல முகவரி இல்லாத மொட்டை கடிதங்கள் எழுதி அனுப்பி வருகின்றனர். நேரடியாக புகார் அளித்தால் டுபாக்கூர் பத்திரிகையாளர்கள் தனக்கு வேண்டப்பட்ட போலீசாரிடம், அதாவது சைபர் கிரைமில் பணியாற்றும் போலீசாரிடம் சம்பந்தப்பட்ட புகார் அனுப்பியவரின் செல் நம்பரை கொடுத்து சி டி ஆர் எனப்படும் போன் கால் தரவுகளை ரெக்கார்டுகளை எடுத்து நேரடியாகவே சென்று அவரை மிரட்டி வருகின்றனர், அல்லது போன் மூலம் மிரட்டுகின்றனர்.
ADGP டேவிட்சன் தேவாசீர்வாதம்
இதனால் யாரும் நேரடியாக புகார் கொடுக்க பொதுமக்கள் விரும்புவதில்லை. பல குடியிருப்பு பகுதிகளில், அப்பார்ட்மெண்ட்களிலும் தனியாக உள்ள வீடுகளிலும் வாடகைக்கு எடுத்து வெளி மாநில பெண்களை வைத்து விபச்சாரம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் போலீசார் கோவை மாநகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள சில டுபாக்கூர் பத்திரிகையாளர்களின் பின்னணிகளை ஆய்வு செய்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நாம் அனுப்பிய செய்தியை கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் அனைத்து காவல் நிலையங்களும் அனுப்பி நடவடிக்கை எடுத்து வருகிறார்.
கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன்
இதனால் கமிஷனரின் உத்தரவால் டுபாக்கூர் பத்திரிகையாளர்கள் தலை தெரிக்க ஓடி தலைமறைவாகி விட்டனர். இருப்பினும் தொடர்ந்து இந்த ஸ்பா மையங்கள் சில காக்கி சட்டை அணிந்த கருப்பு ஆடுகள் உதவியுடன் இந்த ஸ்பா மையங்கள் இயங்கி வருகிறது.
எனவே, போலீஸ் கமிஷனர் அவர்கள் பொதுமக்கள் நலன் கருதி காவல்துறைக்கு மரியாதை கூடும் வகையில் அனைத்து ஸ்பா மையங்களையும் மூட வேண்டும் இல்லை என்றால் அந்த ஸ்பா மையங்களில் விபச்சாரம் நடக்காத வகையில் யார் எந்த மஸாஜ் செய்து கொள்ள வந்தாளோ அல்லது எதற்காக வருகிறார்கள் என்கிற தகவலை ரிஜிஸ்டர் மூலம் பதிவு செய்ய வேண்டும்.
அதேபோல வெளியிலும் ஸ்பா மையத்தின் உள்பகுதிகளிலும் கண்டிப்பாக சிசிடிவி செலுத்தப்பட வேண்டும். இரவு நேரங்களில் எப்படி போலீசார் பீட்டு செல்கிறார்களோ, அதுபோல இந்த ஸ்பா மையங்களில் விபச்சாரம் நடக்கிறதா என்பதை போலீசார் அடிக்கடி கண்காணிக்க வேண்டும் என்கின்றனர் பொதுமக்கள்.
டுபாக்கூர்கள் எனவே, தனக்கு வேண்டப்பட்ட சைபர் கிரைமில் பணியாற்றும் காவலர்களிடம் மற்றவர்களின் செல் நம்பரை கொடுத்து சி.டி.ஆர் போடப்படும். இந்த பிராடு டுபாக்கூர் பத்திரிகையாளர்களின் செல் நம்பரை வைத்து அவர்கள் மீது சிடி ஆர் போட்டால் காக்கிச்சட்டையில் ஒளிந்திருக்கும் கருப்பாடுகளும் எழுதத் தெரியாத டுபாக்கூர்கள் மீது சாட்டையை சுழற்றி விடலாம் என்கின்றனர் சீனியர் பத்திரிகையாளர்கள்.
கோவை மாநகரத்திற்கு போலீஸ் கமிஷனர் ஆக பாலகிருஷ்ணன் பதவி ஏற்ற பிறகு மசாஜ் சென்டர்களில் விபச்சாரம் நடப்பதை கண்டறிந்து தனிப்படைகள் அமைத்து அவைகளை மூடினார்.
போலீசுக்கு தெரியாமல் சில இடங்களில் மசாஜ் சென்டரில் விபச்சாரம் நடந்து வருவது குறித்து கமிஷனர் பார்வைக்கு எடுத்துச் சென்றதும், மீண்டும் அவைகளை மூடும் படியும் விபச்சாரம் நடத்துபவர்கள் மீது குற்ற வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும் படியும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறார். இதனால் கமிஷனர் பாலகிருஷ்ணனின் நடவடிக்கையால் டுபாக்கூர்களும் விபச்சார புரோக்கர்களும் தலைமறைவாகியுள்ளனர்.