chennireporters.com

சட்ட பல்கலை கழக மாணவரை தாக்கிய போலீசார் பணியிடை நீக்கம் கமிஷனர் உத்தரவு.

காவல் ஆணையர் சங்கர் ஜிவால்

சென்னை தரமணியில் உள்ள சட்டப் பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் வியாசர்பாடி புது நகர் பகுதியை சேர்ந்தவர் மாணவர் அப்துல்ரஹீம்.இவர் படித்துக்கொண்டே பகுதி நேரத்தில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார் .

இவர் கடந்த 14ம் தேதி நள்ளிரவு சுமார் 12 .15 மணிக்கு தனது சைக்கிளில் கொடுங்கையூரில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

மாணவர் அப்துல்ரஹீம்.

அப்போது கொடுங்கையூர் எம்.ஆர்.நகர் சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த தலைமை காவலர் பூமிநாதன் காவலர் உத்திர குமார் ஆகியோர்.

அப்துல் ரஹீமை வழி மடக்கி முகக் கவசம் ஏன் அணியவில்லை என்று கேட்டு அபராதம் கட்ட சொல்லுமாறு மிரட்டியுள்ளனர்.அப்போது அப்துல் ரஹீம் நான் சட்டக்கல்லூரி மாணவன்.நான் முககவசம் அணிந்து தான் வந்தேன்.

நான் ஏன் அபராதம் கட்ட வேண்டும் என்று கேட்டுள்ளார்.அப்போது இரு தரப்புக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு அப்துல் ரஹீமை அடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்று கடுமையாக தாக்கியுள்ளனர்.

அது தவிர காவலர்களின் ஷூக்களை சுத்தம் செய்யுமாறும் மிரட்டியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அப்துல் ரஹீம் தனது பெற்றோர்களுக்கு தகவல் அளித்துள்ளார்.

அதன் பிறகு அவர்கள் வந்து கேட்டதற்கு காவலர்கள் பதிலேதும் சொல்லாமல் எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பியுள்ளனர்.

இது தொடர்பாக சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் புகார் அளித்துள்ளனர்.இது தொடர்பாக சென்னை ரிப்போர்ட்டர்.காம்இணைய தளத்தில் கடந்த 17ஆம் தேதி எக்ஸ்குளூசிவாக செய்தி வெளியிடப்பட்டிருந்தது.Link here: https://www.chennaireporters.com/crime/police-brutally-assault-a-law-college-student/

அது தொடர்பாக இன்று சட்டக்கல்லூரி மாணவர் அப்துல் ரஹீமை தாக்கிய தலைமை காவலர் பூமிநாதன் காவலர் உருத்திரகுமார் ஆகிய 2 பேரையும் கமிஷனர் சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டுள்ளார்.

இந்த செய்தி தற்போது தான் ஊடகங்களில் வெளியாகி வருகிறது.

இதையும் படிங்க.!