தொழிலாளர் நலத்துறை துணை ஆணையர் பணி குழு மற்றும் பொது விஷயங்களை கவனித்து வந்த விமலநாதன் தற்போது பதவி உயர்வு பெற்று தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர் -1 ஆக பதவி ஏற்றுள்ளார் இவர் தான் தற்போது அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் விவகாரங்கள் குறித்து நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 20.08.2025 ஆம் தேதியன்று MADRAS UNION OF JOURNALISTS ( MUJ ) அமைப்பை சேர்ந்த உறுப்பினரும், பத்திரிகையாளருமான தேவேந்திரன் என்பவர் தொழிலாளர் நலத்துறை இணை ஆணையரான தே.விமலநாதனிடம் புகார் ஒன்றை அளித்திருந்தார் அந்த புகாரில் மேற்படி சங்கம் பதிவு எண் மற்றும் இ ஃபைலிங் போன்ற ஆவணங்கள் எதுவும் இல்லாமல் செயல்பட்டு வருகின்றது. இது தொடர்பாக நிர்வாகிகளிடம் கேட்டால் எந்தவித பதிலும் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார்கள். எனவே, தொழிலாளர் நலத்துறை சட்டங்களின்படி இயங்கி வருவதாக சொல்லப்படும் எம்.யு.ஜெ அமைப்பு தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்தி இருந்தார்.
ஆனால் தே.விமலநாதன் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் தேவந்திரன் அளித்திருந்த புகாரை கிடப்பில் போட்டுள்ளார். இந்நிலையி்ல் மீண்டும் இன்று நேரில் சென்று செப்டம்பர் 10.10.2025 அன்று தான் அளித்த புகாரின் மீது எடுக்கப்பட்டுள்ள மேல் நடவடிக்கை குறித்து கேட்டபோது தான் தான் தற்போதைய தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர் : 1 என்ற தகவலை கூட தெரிவிக்காமல் நீங்கள் மட்டும் ஏன் அவர்களுடன் ஒத்துழைக்கவில்லை என்று கேள்வி எழுப்பினார். 1989 ஆம் ஆண்டே ரத்து செய்யப்பட்ட ஒரு அமைப்பை ஒருசிலர் மோசடியாக சட்டத்திற்கு விரோதமாக பயன்படுத்தி பலரை ஏமாற்றி வருகின்றனர்.
தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி. கணேசன்
அதுதொடர்பாக அளித்த புகாரின் மீது விசாரித்து நடவடிக்கை எடுக்காமல் இந்த விமலநாதன் மோசடி செய்த நபர்களுக்கு ஆதரவாக பேசுவதுடன். 31.03.1989 அன்றே தொழிற்சங்கத்தின் பதிவு ரத்து செய்யப்பட்ட ஆண்டு தேதி அலுவலக ஆ பதிவேட்டின்படி 20.08.2025 வரையில் பதிவு இல்லை என்பதை உறுதி செய்த பிறகு மட்டுமே புகார் அளிக்கப்பட்டுள்ளது.
1926ஆம் ஆண்டு தொழிற்சங்கங்கள் சட்டத்தின்கீழ் உரிய ஆவணங்கள் படிவம்-அ, அட்டவனை-1 மற்றும் 2, பொதுக்குழு கூட்ட தீர்மான நகல், உறுப்பினர் பட்டியல், சங்க துணை விதி, நிர்வாகிகளின் அடையாள அட்டை நகல், ஏதேனும் அடையாள அட்டை சுயசான்றொப்பமிட்ட நகல் சமர்ப்பிக்கும் பட்சத்தில் பரிசீலனை செய்வதன் அடிப்படையில் MADRAS UNION OF JOURNALISTS என்ற பெயரில் தொழிற்சங்கம் பதிவு செய்யப்படும். என்று தெரிவிக்கப்பட்டது.


இந்த பெயரில் அப்படியான ஒரு அமைப்பே இல்லாத நிலையில் மக்கள் வரிப்பணத்தில் ஊதியம் பெறுகிறோம் என்ற எண்ணமே துளியும் இல்லாமல் பொறுப்பில்லாத நபரை போன்று புகார்தாரரை உட்காரக் கூட வைக்காமல் நீங்கள் யார் என்ன புகார் கொடுத்திருக்கிறீர்கள் நீங்கள் அந்த சங்கத்தில் உறுப்பினராக இருக்கிறீர்களா என்று குறுக்கு கேள்விகளை கேட்டு அந்த அமைப்பு இருக்கிறதா இல்லையா என்று உங்களுக்கு ஏன் தெரிய வேண்டுமென புகார் அளிக்க வந்தவரிடமே குறுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
அப்போது புகார்தாரர் ஏற்கனவே தங்கள் அலுவலகத்தின் மூலம் தகவல் பெறும் உரிமை சட்டத்தின் மூலம் அளிக்கப்பட்ட தகவல் குறித்து கேட்டதற்கு பதில் எதுவும் கூறாமல் மௌனமாய் இருந்தார். அந்த சங்கம் தொடர்பான ஆவணங்களை உங்களுக்கு தபாலில் அனுப்புவோம் சென்று வாருங்கள் என்று பொறுப்பற்ற முறையில் பதில் அளித்தார். அதன்பிறகு இரண்டாவது புகாரை இன்று அலுவலக தபால் பிரிவில் வழங்கி உரிய அத்தாட்சி பெற்றுக் கொண்டோம்.

இது குறித்து தொழிலாளர் நலத்துறையில் உள்ள சில நேர்மையான அதிகாரிகளிடம் விசாரித்தபோது திருடனுக்கு தேள் கொட்டினதைப் போல நீங்கள் சம்பந்தப்பட்ட நபரையே கேள்வி கேட்டால் உங்களுக்கு எப்படி பதில் சொல்வார்? அவர்தான் தற்போதைய நிர்வாக பொறுப்பில் இருக்கும் தொழிலாளர் நல இணை ஆணையர் பல லட்சங்கள் கைமாறி இருக்கலாம் என்று தெரிவிக்கின்றனர்.
ஆகஸ்ட் மாதம் 20ஆம் தேதி அளித்த புகார் மீது இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காத தே.விமலநாதன் மீது உரிய ஆவணங்களுடன் பத்திரிகையாளர் தேவேந்திரன் ஊழல் தடுப்புக் கண்காணிப்புத்துறை இயக்குநராகத்தில் புகார் அளிக்க உள்ளார்.


தனது துறையில் உள்ளவர்களை இடது கையால் தூக்கி வீசி பந்தாடும் திறன் படைத்த தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன், இணை ஆணையர் தே.விமல்நாதனை மீது நடவடிக்கை எடுப்பாரா? அல்லது கட்டிங் வாங்க சொல்லி தட்டிக் கொடுப்பாரா அவர்மீது என்னதான் நடவடிக்கை எடுப்பார் சி.வி.கணேசன் என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இந்த புகார் குறித்து சம்பந்தப்பட்ட தொழிலாளர் நல இணை ஆணையர் விமலநாதன் அவர் தரப்பு விளக்கத்தை அளித்தால் நாம் அதை பதிவு செய்ய தயாராக இருக்கிறோம்.
