காரில் கணக்கில் வராத ரூ.11.75 லட்சம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் ஊட்டி நகராட்சி ஆணையராக பணியாற்றிய ஜஹாங்கீர் பாஷா காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டார். அதன்பிறகு அவர் நெல்லை மாநகராட்சியில் உதவி ஆணையராக நியமிக்கப்பட்டார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் ஜஹாங்கீர் பாஷா இன்று அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நகராட்சியின் ஆணையராக இருந்தவர் ஜஹாங்கீர் பாஷா. இவர் சென்னையை சேர்ந்தவர்.
கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் ஊட்டி நகராட்சி ஆணையர் பொறுப்பில் செயல்பட்டு வந்தார். கடந்த நவம்பர் 9 ம் தேதி ஜஹாங்கீர் பாஷா காரில் சென்னைக்கு புறப்பட்டு சென்றார். ஊட்டி – கோத்தகரி சாலையில் தொட்டபெட்டா சந்திப்பு பகுதியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரது காரை அதிரடியாக சோதனை செய்தனர். அப்போது கட்டுக்கட்டாக பணம் இருந்தது. பல லட்சம் பணத்துடன் ஊட்டி நகராட்சி ஆணையாளர் ஜஹாங்கீர் பாஷா சிக்கியது எப்படி?
அரசு அதிரடி முடிவு பல லட்சம் பணத்துடன் ஊட்டி நகராட்சி ஆணையாளர் ஜஹாங்கீர் பாஷா சிக்கியது எப்படி? அரசு அதிரடி முடிவு கணக்கில் வராத வகையில் ரூ.11.70 லட்சம் பணம் சிக்கியது. இதுபற்றி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.10 மணி நேரம் விசாரணை நடந்தது. ஆனால் பணத்துக்கு அவர் சரியான பதிலை கொடுக்கவில்லை. இதனால் லஞ்சப்பணம் என்பதை லஞ்ச ஒழிப்பு போலீசார் உறுதி செய்தனர். அதோடு ஜஹாங்கீர் பாஷா மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். அதன்பிறகு அவர் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
அதன்பிறகு கடந்த மாதம் 27 ம் தேதி ஜஹாங்கீர் பாஷாவிற்கு புதிய பொறுப்பு வழங்கப்பட்டது. காத்திருப்பு பட்டியலில் இருந்த அவர் திருநெல்வேலி மாநகராட்சி உதவி ஆணையராக நியமனம் செய்யப்பட்டார். இதற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அதேபோல் பிற எதிர்க்கட்சி தலைவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஊட்டி லஞ்ச ஒழிப்பு போலீசிடம் சிக்கிய ஜஹாங்கீர் பாஷா.. திருநெல்வேலி மாநகராட்சி உதவி கமிஷனராக நியமனம் ஊட்டி லஞ்ச ஒழிப்பு போலீசிடம் சிக்கிய ஜஹாங்கீர் பாஷா..
திருநெல்வேலி மாநகராட்சி உதவி கமிஷனராக நியமனம் இந்நிலையில் தான் இன்று ஜஹாங்கீர் பாஷா நெல்லை மாநகராட்சி துணை ஆணையர் பொறுப்பில் இருந்து அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை நகராட்சி நிர்வாக ஆணையர் பிறப்பித்துள்ளார். நெல்லை மாநகராட்சியின் துணை ஆணையர் பொறுப்பில் வேறு நல்ல அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்று தொடர்ந்து குரல் எழுந்த நிலையில் ஜஹாங்கீர் பாஷா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த மாதம் ஊட்டியில் லஞ்ச ஒழிப்பில் சிக்கிய ஜகாங்கீர் பாஷா மீது துறை ரீதியான எந்த நடவடிக்கையும் எடுக்காமல் நகராட்சி நிர்வாகம் அவரை திருநெல்வேலி உதவி ஆணையராக நியமனம் செய்து ஆணையிட்டது. இது குறித்து நாம் நமது இணையதளத்தில் அவர் செய்த ஊழல் பற்றி தெளிவாக எழுதி இருந்தோம். அது தவிர திருவேற்காடு நகராட்சியில் அவர் செய்த ஊழல் பற்றியும் நாம் தெளிவாக எழுதி இருந்தோம். லஞ்ச ஒழிப்பில் சிக்கிய அவருக்கு எப்படி உடனடியாக பணி வழங்கப்பட்டது.
கடந்த மாதம் ஊட்டியில் லஞ்ச ஒழிப்பில் சிக்கிய ஜகாங்கீர் பாஷா மீது துறை ரீதியான எந்த நடவடிக்கையும் எடுக்காமல் நகராட்சி நிர்வாகம் அவரை திருநெல்வேலி உதவி ஆணையராக நியமனம் செய்து ஆணையிட்டது. இது குறித்து நாம் நமது இணையதளத்தில் அவர் செய்த ஊழல் பற்றி தெளிவாக எழுதி இருந்தோம். அது தவிர திருவேற்காடு நகராட்சியில் அவர் செய்த ஊழல் பற்றியும் நாம் தெளிவாக எழுதி இருந்தோம். லஞ்ச ஒழிப்பில் சிக்கிய அவருக்கு எப்படி உடனடியாக பணி வழங்கப்பட்டது.
ஏற்கனவே லஞ்சம் வாங்கியவர் துறையூரில் உள்ள முக்கிய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து பணியில் சேர்ந்தார் என்ற குற்றச்சாட்டு இருந்தது. இதுகுறித்து சமூக வலைதளங்களில் அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வீடியோக்களும் செய்திகளும் வெளிவந்தன. இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கவனத்திற்குச் சென்றதும் உடனடியாக அவரை சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட்டார். பின்னர் உடனடியாக நகராட்சி நிர்வாகம் அவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது.
தவறு செய்யும் அதிகாரிகளை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லாமல் சில ஐஏஎஸ் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் லஞ்சம் வாங்கிக்கொண்டு அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர் என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் நகராட்சி மற்றும் உள்ளாட்சித் துறைகளில் பல்வேறு ஊடல்களும் ஊழல் செய்த அதிகாரிகளுக்கு துறை சார்ந்த அதிகாரிகள் ஆதரவாக செயல்படுகின்றனர் வரும் காலங்களில் தமிழக அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையென்றால் வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுகவிற்கு பெரும் இழப்பு ஏற்படும் என்று தெரிகிறது.