chennireporters.com

முறைகேடுகள் செய்யும் கேஸ் ஏஜென்சி அதிகாரிகளிடம் புகார்.

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் விதிமுறைகளை கடைபிடிக்காமல் செயல்படும் கேஸ் ஏஜென்சி பற்றி அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் திருவள்ளுவர் நகர் ஜெகநாதன் தெருவில் விஜயகுமார் இன்டேன் கேஸ் ஏஜென்சி என்ற பெயரில் கேஸ் ஏஜென்சி இங்கு வருகிறது.

இந்த ஏஜென்சியில் ஐசிசியின் விதிமுறைகளை கடைபிடிக்க படாமல் இயங்கி வருவதாக திருவள்ளுவர் நகர் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் ஐஓசி அதிகாரிகளுக்கு புகார் அனுப்பப்பட்டுள்ளது.

அந்தப் புகாரில் கூறப்பட்டுள்ளதாவது சிலிண்டர் என்று போன் மூலம் சம்பந்தப்பட்ட விஜயகுமார் கேஸ் ஏஜென்சிக்கு புகார் அளித்தால் உடனடியாக வந்து சரிசெய்வது தருவதில்லை.

சிலிண்டர் டெலிவரி செய்யும் போது லீக் பரிசோதனை கட்டாயமாக செய்யப்பட வேண்டும் என்பது விதிமுறை ஆனால் இதை பரிசோதனை என்ற பெயரில் சிலிண்டர் டெலிவரி செய்யும் பொழுது அதற்கு தனியாக பணம் கேட்கின்றனர்.

சிலிண்டரின் மொத்த விலையை காட்டிலும் கூடுதலாக நுகர்வோரிடம் குறைந்தபட்சம் ஐம்பது ரூபாய் வரை விஜயகுமார் கேஸ் ஏஜென்சி நிறுவன ஊழியர்கள் பணம் வசூலிக்கின்றனர்.

மேலும் பெரும்பாலான நேரங்களில் தானாகவே 50 ரூபாய் பணத்தை கேட்காமலேயே எடுத்துக்கொள்கின்றனர்.ஒருவேளை அதனை தட்டிக் கேட்டால் சிலிண்டர் டெலிவரி செய்யும் பொழுது வீட்டின் கேட் முகப்பிலேயே சிலிண்டரை வைத்துவிட்டு போய்விடுகிறார்கள்.

சிலிண்டரின் மொத்த எடை 14.2 கிலோ ஆனால் பல நேரங்களில் கேஸ் சிலிண்டரின் நிகர எடை குறைவாக இருக்கிறது.

ஒரு வீட்டில் சிலிண்டரில் கோளாறு ஏற்பட்டு அந்த சிலிண்டரில் காஸ் தீர்ந்து விட்டதாக வீட்டு உரிமையாளர் நினைத்துக்கொண்டே வீட்டில் உள்ள மற்றொரு சிலிண்டரை உபயோகப்படுத்தும்.

பட்சத்தில் புதிய சிலிண்டர் புக் செய்து டெலிவரி பாய் வீட்டுக்கு வந்து சிலிண்டர் எடுத்துச் செல்லும் போது அந்த சிலிண்டரில் அடைப்போ அல்லது பிரச்சினை இருக்கும் பட்சத்தில் அந்த கேஸ் சிலிண்டரில் மீதி 1 முதல் 3 கிலோ கேஸ் மீதமிருக்கும் அந்த சிலிண்டரை வீட்டு உரிமையாளரிடம் கேஸ் மற்றும் இருக்கிறது.

என்று தகவல் சொல்லாமல் சிலிண்டர் தீர்ந்து விட்டது என்று சொல்லி அந்தப் பகுதியில் உள்ள தனியார் கடைகளுக்கு விஜயகுமார் கேஸ் ஏஜென்சி டெலிவரி பாய்கள் குறைந்த விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.

சிலிண்டர் புக் செய்துவிட்டு குறிப்பிட்ட தேதிக்குள் சிலிண்டர் வராமல் போனால் வாடிக்கையாளர்கள் சம்பந்தப்பட்ட விஜயகுமார் கேஸ் ஏஜென்சிக்கு போன் மூலம் தகவல் கேட்டால்.

அங்கு பணியாற்றும் ஊழியர்கள் உங்களுக்கு சிலிண்டர் அவசரம் என்றால் நீங்களே எங்கள் கேஸ் ஏஜென்சிக்கு நேரில் வந்து எடுத்துச் செல்லுங்கள் என்று சொல்கிறார்கள்.

ஆனால்சட்டப்படி கேஸ் ஏஜென்சிக்கு சென்று நுகர்வோர்கள் சிலிண்டர் பெறக்கூடாது. விஜயகுமார் கேஸ் ஏஜென்ஸி மேனேஜர் சுப்பிரமணியம் வாடிக்கையாளர்களிடம் அணுகு முறை சரியாக இல்லை.

மோசமான பேச்சு ம் மரியாதைக் குறைவாக நடந்து கொள்கிறார்.ஒரு வாடிக்கையாளர் சிலிண்டர் புக் செய்துவிட்டு அவசரப் பயணமாக வெளியூருக்குச் சென்று உள்ள போது அவர்களுடைய செல்போனுக்கு எஸ்எம்எஸ்சில் சிலிண்டர் டெலிவரி செய்யப்பட்டுவிட்டது என்று தகவல் வருகிறது.

உடனே விஜயகுமார் கேஸ் ஏஜென்சியிடம் தொடர்பு கொண்டு கேட்டால் நீங்கள் ஊர் சுற்ற போனால் நாங்கள் எப்படி பொறுப்பாக முடியும் என்று பொறுப்பற்ற முறையில் கண்ணியம் இல்லாமல் நடந்து கொள்கிறார்.

டொமஸ்டிக் சிலிண்டர்களை கமர்சியல் பயன்பாட்டிற்கு சம்பந்தப்பட்ட விஜயகுமார் கேஸ் ஏஜென்சியின் ஊழியர்கள் கள்ளச்சந்தையில் விற்பனை செய்து வருகின்றனர்.

விஜயகுமார் கேஸ் ஏஜென்ஸியில் ஒரு உண்மையான உரிமையாளர் யார் என்று தெரியவில்லை பொதுமக்கள் தங்களுடைய குறைகளை சொல்ல நேரில் சென்றால் அங்கு உரிமையாளர் இப்போதும் ஏஜென்சியில் இருப்பதே இல்லை மேனேஜர் சுப்பிரமணி தான் இருக்கிறார்.

பல நேரங்களில் அவரும் இருப்பதில்லை பொதுமக்கள் தங்களுடைய குறைகளை யாரிடம் முறையிடுவது ஐஓசி நிர்வாகம் தெளிவுபடுத்த வேண்டும்.மக்களின் அத்தியாவசிய தேவையாக விளங்கும் கேஸ் ஏஜென்சிகள் பொறுப்பற்ற முறையில் பணியாற்றி வருகின்றனர்.

இதனால் பொதுமக்கள் பலர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.ஐஓசி யின் சட்டதிட்டங்களுக்கு புறம்பாக செயல்படும் விஜயகுமார் கேஸ் ஏஜென்சி மீது நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

இந்த புகார் தொடர்பாக விஜயகுமார் கேஸ் ஏஜென்சி நாம் தொடர்பு கொண்டோம் அதில் இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள இரண்டு தொலைபேசி எண்களில் ஒரு தொலைபேசி எண் தாம்பரத்தில் உள்ள மருத்துவமனையை மாற்றப்பட்டுள்ளதாகவும் ஒரு தொலைபேசி எண்ணை யாரும் எடுக்கவில்லை.

இந்த குற்றச்சாட்டு குறித்து விஜயகுமார் கேஸ் ஏஜென்சி நிர்வாகம் தங்கள் தரப்பு விளக்கத்தை தெரிவித்தால் நாம் அதை பதிவு செய்ய தயாராக இருக்கிறோம்.

தமிழகம் முழுவதும் இதுபோன்ற பிரச்சினைகள் இருந்து வருகின்றன நிர்ணயிக்கப்பட்டுள்ள விலையைவிட கூடுதலாக கட்டணத்தை கேட்கக் கூடாது என்று ஐஓசி நிர்வாகம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் எல்லா ஏஜென்சி ஊழியர்களும் கூடுதல் கட்டணத்தை கறாராக வசூலித்து வருகின்றனர் இதற்கு ஐஓசி நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் மௌனம் காப்பது எதற்கு என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.

இதையும் படிங்க.!