திருவெற்றியூர் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் கே.பி.பி.சங்கர் மீது கண்துடைப் பிற்காக ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது திமுக.
திருவொற்றியூர் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலைப் பணிகளில் தனக்கு கமிஷன் வழங்காத காரணத்தால் ஆத்திரமடைந்த தி.மு.க. எம்.எல்.ஏ கே.பி.பி சங்கர் அரசு அதிகாரியை அடித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நேற்று முன்தினம் இரவு போடப்பட்ட சாலை பணிகளில் சங்கர் தனக்கு உரிய பங்கினை வழங்கவில்லை என்று சென்னை மாநகராட்சியில் 1-வது மண்டல பத்தாவது வார்டு உதவி பொறியாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதனால் மாலை போடும் பணியில் பாதிப்பு ஏற்பட்டது.சங்கருக்கும் என்ஜினியருக்கும் வாக்குவாதம் முற்றியதாகவும் அப்போது அவரை அடித்ததாகவும் தகவல்கள் பரவியது.
ஏற்கனவே இது போல பல்வேறு அராஜக நடவடிக்கைகள் ஈடுபட்டுவந்த கே.பி.பி. சங்கர் கட்சிப் பொறுப்பிலிருந்து நேற்று அதிரடியாக நீக்கப்பட்டார்.
இந்த நிலையில் அரசு ஊழியரை தாக்கிய சட்டமன்ற உறுப்பினர் கே.பி. சங்கர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் அமைப்புகள் கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில் உதவி செயற் பொறியாளர் எந்தவித புகாரும் காவல்துறையில் அளிக்கவில்லை.
உதவி பொறியாளரை தாக்கியது தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். இந்த புகாரால் திமுக தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.