chennireporters.com

போதை பொருள் வழக்கில் ஷாருக்கான் மகனுக்கு நிபந்தனை ஜாமீன்.

இந்தி நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் ஜாமீன் வழங்கி மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ளது.

அக்டோபர் 2ஆம் தேதி கார்டெலியா குருஸஸ் நிறுவனத்துக்கு சொந்தமான “எம்பிரஸ்” என்ற சொகுசு கப்பல் மும்பையில் இருந்து கோவா செல்ல புறப்பட்டது .

இந்த கப்பலில் தடை செய்யப்பட்ட போதை பொருள் விருந்து நடை பெறுவதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல்கள் கிடைத்துள்ளது.

அதன் அடிப்படையில் கப்பலில் சோதனை நடத்தினர். இதில் கொகைன், ஹஷிஷ் போன்ற போதை பொருட்கள் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.

அதில் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் மற்றும் அவரது நண்பர்கள் கைது செய்யப்பட்டனர்.

25 நாட்களாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆரியன் கானுக்கு மும்பை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

ஆரியன் கான் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்தகி கைது செய்யப்பட்ட ஆரியன் கானிடமிருந்து எந்த போதை பொருட்களையும் கைப்பற்றவில்லை.

மேலும் உண்மையான மற்றும் சரியான காரணங்களை போலீசார் தெரிவிக்கவில்லை.

இந்த கைது அரசியல் சட்ட விதிகளை நேரடியாக மீறுவதாக வாதிட்டார்.

ஆர்யன்கான் மற்றும் மெர்ச்சன்ட், முன்முன் தமேச்சா ஆகியோருக்கு எந்த வித தொடர்பும் இல்லை. எனவே இவர்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று வாதிடப்பட்டது.

இதை ஏற்றுக்கொண்ட மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி “நிதின்சாம்ப்ரே” மூன்று பேருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

விரிவான நிபந்தனைகள் குறித்து பின்னர் நீதிமன்றம் தெரிவிக்கும் என்று நீதிபதி தெரிவித்தார்.

இதையும் படிங்க.!