இன்று சென்னை அதிகாலையில் போலிசார் நடத்திய துப்பாகிக்சூட்டில் வியாசர்பாடியை சேர்ந்த ரவுடியை சுட்டுப்பிடித்தனர். ரவுடிகளின் அட்டகாசத்தை கட்டுக்குள் கொண்டுவர சென்னை போலீஸ் துப்பாகிகளை கையில் எடுத்திருக்கின்றனர். இந்நிலையில், இன்று அதிகாலை சென்னையில் பிரபல ரவுடியை போலீஸ் சுட்டு பிடித்த செய்தி தான் ஹாட் டாப்பிக். போதை பொருட்கள் கடத்தல், வன்முறை, கூலிப்படையாக செயல்படுவது, கொலை, என தலைநகர் சென்னையில் குற்றங்கள் தொடர்ந்து நடந்துக்கொண்டே இருக்கின்றன. குற்றங்களும் பெருகி வருகின்றன.
பிரபல ரவுடி அறிவழகன்
இதனை கட்டுக்குள் கொண்டுவரும் வேலையை காவல்துறை செய்து வருகிறது. சில நேரங்களில் போலீசார் வேறு வழியின்றி துப்பாக்கியை பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றனர். அப்படியான சம்பவம் ஒன்றுதான் இன்று காலை நடந்திருக்கிறது. அதாவது, சென்னை வியாசர்பாடியை சேர்ந்த பிரபல ரவுடி அறிவழகனை போலீசார் பல்வேறு வழக்குகளில் தேடி வந்திருக்கின்றனர்.
இந்நிலையில் அவர் பெரம்பூர் பகுதியில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அவரை பிடிக்க இன்று அதிகாலை தனிப்படை போலீசார் விரைந்தனர். ஆனால் போலீசாரை தாக்கிவிட்டு அறிவழகன் அங்கிருந்து எஸ்கேப் ஆக முயன்றிருக்கிறார். இதனையடுத்து வேறு வழியின்றி போலிசார் துப்பாக்கியை பயன்படுத்தியுள்ளனர். போலீசார் அறிவழகனை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்த அவனை மீட்ட போலீசார் உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
தற்போது அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதிகாலையில் ரவுடியை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்துள்ள சம்பவம் பெரம்பூர் பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாலியல் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மற்றும் கூலிப்படையில் பணத்திற்காக ஈடுபடும் இளைஞர்கள் என எல்லா வகை குற்றவாளிகளையும் போலீசார் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை விட என்கவுண்டர் செய்தால் மட்டுமே குற்றங்களை தடுக்க முடியும் என்கின்றனர் சில பாதிக்கப்பட்ட பெற்றோர்கள்.
சமீப காலமாக கடந்த மூன்று ஆண்டுகளில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் அதிக அளவில் கஞ்சா கிராமப்புறங்களிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கோயம்பேட்டில் இருந்து தேனி மதுரை நாகர்கோயில் நெல்லை போன்ற பகுதிகளுக்கு செல்லும் சொகுசு ஆம்னி பேருந்துகளில் கஞ்சா கொண்டுவரப்பட்டு சென்னையில் விற்கப்படுகிறது. குறிப்பாக தேனிக்குச் செல்லும் பேருந்துகளில் கஞ்சா மூட்டை மூட்டையாக கடத்திக் கொண்டு வரப்படுகிறது எனவே போலீசார் கவனத்துடன் இந்த பிரச்சனைகளை கையாண்டு தீவிர வாகன சோதனை நடத்தினால் மட்டுமே ஆந்திரா மற்றும் தேனி பகுதியில் இருந்து கஞ்சா சென்னைக்குள் கொண்டுவரப்படுவதை தடுக்க முடியும் என்கின்றனர்.