chennireporters.com

கொரோனா சிகிச்சை மையங்களுக்கு இலவசமாக பால் வழங்கும் விவசாயி..

cow-milk

தேனி அருகே கொரோனா சிகிச்சை மையங்களுக்கு தினமும் விவசாயி ஒருவர் பணம் வாங்காமல் பால் வழங்கி வருகிறார்.தேனி மாவட்டம் பள்ளப்பட்டியை சேர்ந்தவர் சீனிராஜ்.விவசாயியான இவருக்கு சொந்தமாக பத்து மாடுகள் உள்ளன.

தற்போது தேனீர் கடைகள், ஓட்டல்கள் இல்லாததால் தனக்கு கிடைக்கும் பாலை விற்பனை செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார் சீனிராஜ்.இந்தநிலையில் பாலை பயனுள்ளதாக மாற்றும் வகையில் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் செயல்படும் கொரோனா சிகிச்சை மையத்துக்கும், வட வீர நாயக்கன் பட்டியில் செயல்படும் கொரோனா சித்த மருத்துவ மையத்துக்கும் இலவசமாக பால் வழங்கி வருகிறார்.

இந்த 2 மையங்களிலும் தலா 40 லிட்டர் வீதம் பால் கொடுக்கிறார்.கடந்த சிலதினங்களாக குடியிருப்பு பகுதியிலேயே பொதுமக்களுக்கு இலவசமாக பால் வழங்கி வருகிறார்.நல்ல உள்ளம் படைத்த இவரை பொதுமக்களும் கொரோனா நோயாளிகளும் பாராட்டி வருகின்றனர்.

இதையும் படிங்க.!