chennireporters.com

முதலமைச்சர் ஸ்டாலின் கையில் முன்னாள் அதிமுக அமைச்சர்களின் ஊழல் லிஸ்ட்.

இரண்டு தினங்களுக்கு முன்பு உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி அன்பழகன் வீடு மற்றும் உறவினர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

அதில் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்கம் வெள்ளி ஆவணங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டது .இந்த சோதனை தொடரும் என்கிறார்கள் லஞ்ச ஒழிப்புத் துறையில் உள்ள சில அதிகாரிகள்.

இது தொடர்பாக கடந்த ஆட்சியில் ஊழல் செய்து சொத்துக்களை சேர்த்து வைத்துள்ளவர்களின் பெயரையும் சொத்து பட்டியலையும் முதலமைச்சரின் டேபிள் மீது கோப்புகளாக வைக்கப்பட்டுள்ளது என்று சொல்லுகிறார்கள்.கோட்டை வட்டார அதிகாரிகள்.

அதன் தொடர்ச்சியாகத்தான் முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர் என்கிறார்கள் அதிகாரிகள்.

முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகன் வீட்டில் பல கோடி ரூபாய் ஆவணம் சிக்கியதாக கூறப்படுகிறது.அதிமுக முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சராக இருந்தவர் கே.பி அன்பழகன்.

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தபிறகு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் லஞ்சம் வாங்கி அதிக சொத்துக்களை சேர்த்து வைத்துள்ள முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

கடந்த கடந்த கால அதிமுக ஆட்சியில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த புகார்களில் பல முன்னாள் அமைச்சர்கள் பெயர்களை லஞ்ச ஒழிப்புத் துறையினர் பட்டியியல் தயாரித்து வைத்து அதன் அடிப்படையில் சோதனை நடத்தி வருகின்றனர்.

உயர்கல்வித் துறை அமைச்சராக இருந்தவர் கே.பி.அன்பழகன்.இவர் வீட்டில் இரண்டு தினங்களுக்கு முன்பு திடீரென லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.

அவருக்கு சொந்தமான வீடு மற்றும் உறவினர் வீடுகள் அலுவலகங்கள் என அவருக்கு தொடர்புடைய 58 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ஒரே நேரத்தில் அதிரடி சோதனை நடத்தினர்.

தர்மபுரி மாவட்டம் உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இந்த சோதனை நடை பெற்றது.கே.பி அன்பழகன் தன்னுடைய வருமானத்தை காட்டிலும் கூடுதலாக 11 கோடியே 32 லட்சம் ரூபாய் அளவிற்கு சொத்து சேர்த்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கே.பி அன்பழகன் மனைவி மல்லிகா மகன்கள் சசிமோகன் சந்திரமோகன் மருமகள் வைஷ்ணவி உள்பட ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்த சோதனையில் வங்கி லாக்கர் சாவிகள் மற்றும் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக முன்னாள் பஞ்சாயத்து தலைவர் மோலையனூர் பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் மனு தாக்கல் செய்து இருந்தார்.

அந்த மனுவில் முன்னாள் உயர் கல்வி துறை அமைச்சர் கே.பி அன்பழகன மற்றும் உறவினர்கள் பெயரிலும் சொத்துக்கள் வாங்கி இருப்பதாகவும் பல தனியார் நிறுவனங்களில் முதலீடு செய்திருப்பதாகவும் அவர் வீட்டில் ரெய்டு நடத்துமாறு அதில் கோரிக்கை வைத்திருந்தார்.

தர்மபுரி உள்பட 58 இடங்களிலும் சேலம் , சென்னை, தெலுங்கானா என மொத்தம் 58 இடங்களில் சோதனை நடை பெற்றது.இந்த சோதனையில் 6.637 கிலோகிராம் தங்க நகைகள் 14 கிலோ வெள்ளி நகைகள் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றப்பட்டது என்று லஞ்ச ஒழிப்பு போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க.!