தமிழகத்தில் பல முக்கிய அரசியல்வாதிகள் அதிகாரிகள் மற்றும் தொழிலதிபர்களை மிரட்டி சவுக்கு சங்கர் பல கோடி ரூபாய் வரை சொத்து சேர்த்ததாக புகார் எழுந்து வருகிறது. இந்த நிலையில் போக்குவரத்து துறை அதிகாரி R.T.O. அவர்களை மிரட்டி இன்னோவா கார் வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சென்னை வானகரத்தை சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் நெல்லை கோபால் என்பவர் தமிழக டிஜிபி மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகள் அனைவருக்கும் புகார் எழுதியுள்ளார்.
அந்த புகாரில் அவர் கூறியுள்ளதாவது; மூத்த பத்திரிகையாளரும் மூத்த குடிமகனும் சமூக சேவகர்மான நெல்லை கோபாலின் பணிவான வணக்கங்கள் என்று அந்த கடிதம் துவங்குகிறது . அதில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் போக்குவரத்து துறையில் ஆர்டிஓ அலுவலராக இருப்பவர் முக்கண்ணன். யூடியூபர் சவுக்கு சங்கர் மற்றும் அவரது அலுவலக பணியாளர்களும் திண்டிவனம் ஆர்டிஓ முக்கண்ணனின் ஊழல் குறித்து அவர்களது சவுக்கு முடியாத வலைதள பக்கத்தில் விமர்சனம் செய்து வந்தனர்.
ஆர்டிஓ முக்கண்ணனின் புகைப்படத்தோடு அவரது பெயரை உச்சரித்தவர்கள் வேறு எந்த ஒரு ஆர்டிஓ அதிகாரிகள் குறித்தும் மேற்படியாளர்களால் சவுக்கு மீடியாவில் குறை கூறி விமர்சிக்கவில்லை. இந்த நிலையில் கடந்த 11/5/2024 பிரபல நெறியாளர் முக்தார் அவர்கள் youtube சங்கரின் உதவியாளரை பேட்டி காண்கையில் ஒரு ஆர்டிஓ குறித்து ட்வீட் போட்டதில் மருதினமே அந்த ஆர்டிஓ சவுக்கு சங்கருக்கு புதிய இன்னோவா கார் ஒன்றை வாங்கி கொடுத்தார் என்ற வாக்குமூலங்களாக தெரிவித்துள்ளதால் அந்த கார் விவகாரம் திண்டிவனம் ஆ.ர்.டி.ஓ முக்கண்ணன் சம்பந்தப்பட்டதாக மட்டுமே இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை என நான் நம்புவதால் இது குறித்து உரிய விசாரணை செய்து ஆர்டிஓ முக்கண்ணன் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோருகிறேன் என்று கூறியுள்ளார்.
மேலும் அந்த கடிதத்தில் சவுக்கு சங்கர் அவர்களது வலைதளத்தில் ஆர்டிஓ முக்கண்ணனைத்தவிர வேறு யாரையும் டியூப்பில் சொல்லவில்லை என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.
R.T.O. முக்கண்ணன்
எனவே 39 லட்சம் மதிப்புள்ள ஒரு இன்னோவா காரை ஆர்டிஓ முக்கண்ணன் சவுக்கு சங்கருக்கு லஞ்சமாக கொடுத்திருக்கிறார் என்கிறபோது இந்த வருமானத்துக்கு என்ன கணக்கு ஆர்டிஓ முக்கண்ணன் அவரது பணியில் பல்வேறு முறைகேடுகள் செய்து அதில் வந்த லஞ்ச வருமானத்தில் மட்டும்தான் இப்படிப்பட்ட ஒரு காரை சவுக்கு சங்கருக்கு லஞ்சமாக வழங்கி இருக்க முடியும் .
அதே நேரத்தில் இப்படி ஒரு லஞ்ச வருமானங்களை ஈட்டெடுக்க இவரது தரங்கெட்ட பணிகளால் மட்டுமே வருமானங்களை பெருக்கி இருக்க முடியும் என்பதாலும் அதனால் மட்டுமே விபத்துக்கள் பெருகி இருக்கக்கூடும் என்பதாலும் இவர் திண்டிவனம் ஆர்டிஓ பொறுப்பு என்பதற்கு முன்பும் அதன் பின் நடந்த விபத்துக்கள் குறித்து ஆய்வுகளோடு இவரது முறைகேடான லஞ்ச லாவண்ய பணிகளால் மட்டுமே விபத்துக்கள் பெருகி உள்ளது.
என்பதை அறிந்து ஆர்டிஓ முக்கண்ணன் மீது கடும் நடவடிக்கை எடுத்து ஆர்டிஓ வையும் சிறைபிடிக்க வேண்டும் என்று கோரிக்கையை நான் மட்டுமல்ல பல்வேறு தரப்பிலிருந்து தெரிவிக்கப்படுவதால் ஆர்டிஓ முக்கண்ணன் மீது உரிய நடவடிக்கை எடுக்க பணிந்து கூறுகிறேன் என்று அந்த புகார் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும் விபத்தில் முதலிடம் தமிழகம் என்பதை கவனத்தில் எடுத்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன் என்று சத்தியம் டிவிக்கு சவுக்கு சங்கரின் உதவியாளர் அளித்த புகாரின் இணைப்பையும் கோடிட்டு காட்டி உள்ளார். தமிழ்நாட்டில் இன்னும் பல அதிகாரிகள் தொழிலதிபர்கள் புகார் அளிப்பார்கள் என்கிற எதிர்பார்ப்போடு தமிழக போலீசார் நடவடிக்கை எடுக்க காத்திருக்கிறார்கள். சவுக்கு சங்கர் ரமணா பட பானியில் கொள்ளையடித்து இருக்கிறார் என்கிறார்கள் அவர்களது நண்பர்கள்.