chennireporters.com

#country bomb; நாட்டு வெடிகுண்டு வியாபாரிடம் மாமுல் வாங்கிய போலீசார்.

ஆவடி அருகே உள்ள தண்டுரை பகுதியில் நாட்டு வெடி குண்டு வெடித்து உயிர் இழந்த 4 பேரின் உடல்களும் அடையாளம் காணப்பட்டது. நாட்டு வெடி விற்பனை செய்து வந்த விஜயின் தந்தை ஆறுமுகம் கைது செய்யப்பட்டுள்ளார். தலைமறைவாக இருந்த விஜய் அவரது நண்பர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். பட்டாபிராம், தண்டுரையில் விஜய் என்பவர் வீட்டில் வைத்து நாட்டு வெடி விற்பனை செய்து வந்துள்ளார்.

வீட்டில் விற்பனைக்கு வைத்து இருந்த நாட்டு வெடி வெடித்து சிதறியதில் வீடு இடிந்து விழுந்து தீவிபத்து ஏற்பட்டது. வெடி விபத்தில் வீட்டில் இருந்த 4 பேர் உடல் கருகி உயிர் இழந்தனர். உயிர் இழந்த உடல்களில் திருநின்றவூரை சேர்ந்த யாசின், சுனில், பிரகாஷ் ஆகியோர் உடல்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் மீதமுள்ள 2 உடல்கள் அடையாளம் தெரியாமல் இருந்தது. இதில் பொன்னேரி,ஆரணியை சேர்ந்த சுமன்,சஞ்சய் என்பது தெரியவந்துள்ளது. இருவரும் மேளம் அடிக்கும் வேலை செய்து வருவதாகவும் நாட்டு வெடி வாங்க வந்த போது வெடி விபத்தில் சிக்கியது தெரியவந்துள்ளது.உரிமமின்றி வீட்டில் நாட்டு வெடி தயாரித்த குடும்பம் - திடீரென ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் உயிரிழப்பு!நாட்டு வெடி விற்பனையில் ஈடுபட்ட விஜய் வெளியே நின்று இருந்ததால் அதிஷ்டவசமாக தப்பியுள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. விபத்து ஏற்பட்டதும் விஜய் அவரது நண்பர் இருவரும் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.

நாட்டு வெடி விற்பனை செய்து வந்த விஜய் பாண்டிச்சேரியில் இருந்து நாட்டு வெடியை வாங்கி வந்து ரக ரகமாய் வெடிகளை தயார் செய்து விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது. திருநின்றவூரை சேர்ந்த யாசின்,சுனில் பிரகாஷ் ஆகியோர் வெடி வாங்க சென்ற போது தான் விபத்து ஏற்பட்டுள்ளது என்பது உறுதியாகியுள்ளது.நாட்டு வெடி வெடித்து 4 பேர் உயிரிழப்பு- காவல் ஆணையர் நேரில் விசாரணைதீபாவளிக்கு நாட்டு வெடியை வாங்கிய யாசின் மற்றும் சுனில் பிரகாஷ் ஆகியோர் அவர்களது வாட்சாப், இன்ஸ்டா பக்கத்தில் வாங்கிய நாட்டு வெடிகளை வீடியோ எடுத்து பதிவு செய்துள்ளனர். யாசின்,சுனில் பிரகாஷ் ஆகியோர் அவர்களது இணைய பக்கத்தில் பகிர்ந்த வீடியோ வைரலாகி உள்ளது. வீடியோவில் விற்பனைக்காக மூட்டை ,மூட்டையாக நாட்டு வெடி பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்துள்ளது.வீட்டில் நாட்டுவெடி வெடித்து 4 பேர் பலி : சென்னை அருகே பயங்கரம் | தமிழ்நாடு - News18 தமிழ்கடந்த ஏழு ஆண்டுகளாக அந்தப் பகுதியில் விஜய் நாட்டு வெடிகுண்டுகளை தயார் செய்து விற்பனை செய்து வந்தது அந்தப் பகுதி மக்களுக்கு நன்றாக தெரியும். வெளியூரிலிருந்து வருபவர்கள் பட்டாசு விற்கும் விஜய் வீடு எங்கே இருக்கிறது என்று கேட்டால் அனைவரும் சொல்லும் அளவிற்கு ஏரியாவில் பிரபலமானவர். ஆட்டோ ஓட்டுனர் தாமோதரன் என்பவர் பெரும்பாலான இடங்களுக்கு இவர் தான் நாட்டு வெடிகுண்டுகளை தனது ஆட்டோவில் ஏற்றிச் சென்று கொடுத்ததாக கூறப்படுகிறது.

 இந்த நாட்டு வெடிகுண்டு விபத்து தொடர்பாக பட்டாபிராம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கிருஷ்ணராஜ், உளவுத்துறை எஸ்ஐ ரமேஷ் ஆகியோரை கமிஷனர் சங்கர் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.

இந்த செய்தி குறித்து நாம் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்த போது கடந்த ஏழு ஆண்டுகளாக விஜய் நாட்டு வெடிகுண்டுகளையும், நாட்டு பட்டாசுகளையும் விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. மேலும் சென்னை புறநகர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் போன்ற பகுதியில் உள்ள சில ரௌடி கும்பலுக்கும், நாட்டு வெடிகுண்டுகளை விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. விஜய் சம்பந்தப்பட்ட பட்டாபிராம் காவல் நிலையத்திற்கு மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை லஞ்சமாக கொடுத்தது தெரியவந்துள்ளது.17-year-old boy's 2 hands amputated in homemade bomb explosion - Trivandrum | நாட்டு வெடிகுண்டு வெடித்து 17-வயது சிறுவனின் 2 கைகள் துண்டாகின - திருவனந்தபுரத்தில் பரபரப்புபோலீசுக்கு தெரியாமல் எந்த குற்றச் செயல்களும் நடக்காது உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்காமல் போலீசார் உடன் கூட்டு சேர்ந்து லஞ்சம் பெற்ற உளவுத்துறை சப் இன்ஸ்பெக்டர் ரமேஷ் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு இதுவே முக்கிய காரணம் என்கின்றனர் பட்டாபிராம் காவல் நிலையத்தில் பணியாற்றும் சில காவலர்கள்.

பட்டாபிராம் போலீசார் தண்டுறைப் பகுதியில் உள்ள மீன் மார்க்கெட், ஆட்டு இறைச்சி கடை, கோழிக்கறி கடை என பல இடங்களில் அவர்கள் லஞ்சம் வாங்காத அதாவது மாமுல் வாங்காத இடமே இல்லை என்கின்றனர் அந்தப் பகுதி மக்கள். இரவு நேரத்தில் தள்ளுவண்டி கடையில் இட்லி வியாபாரம் செய்பவர்கள் சூப் விற்பவர்கள், பானி பூரி விற்பவர்கள் என அனைவரிடமே பட்டாபிராம் போலீசார் மாமுல் வாங்கி வருகின்றனர்.Proactive policing, effective grievance redressal key to ...கமிஷனர் சங்கர்

வாரத்திற்கு ஒரு சில கடைகள் 500 ரூபாயும், ஒரு சில கடைகள் மாதத்திற்கு 3 ஆயிரம் ரூபாய் வரைக்கும் தருவதாக சொல்லுகிறார்கள் சிறு வியாபாரிகள். லஞ்சம் வாங்குவதை நிறுத்தி விட்டால் குற்றம் சம்பவங்களையும், உயிரிழப்புகளையும் தடுக்கலாம் என்பதற்கு இந்த நாட்டு வெடிகுண்டு விபத்து சாட்சி. இந்த வெடிகுண்டு விபத்தில் பட்டாபிராம் காவல் நிலையத்தில் பணியாற்றும் அனைவர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் அவர்கள் அனைவரையும் ஒட்டுமொத்தமாக சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்கின்றனர் மனித உரிமை ஆர்வலர்கள். சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது நடவடிக்கை எடுப்பாரா கமிஷனர் சங்கர் என்பதுதான் கேள்வி.

இதையும் படிங்க.!