chennireporters.com

கொரோனா தடுப்பூசி போட்டு விழிப்புணர்வு ஏற்படுத்திய தேனி மாவட்ட நீதிபதி அ. முகமது ஜியாவுதீன்.

judge 2

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டு தேனி மாவட்ட நீதிபதி அ. முகமது ஜியாவுதீன் என்கிற அ.மு. தமிழினியன் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.கொரோனா பெரும் தொற்று அதிகரித்து வருகிறது.

இந்த நோய்தொற்றிலிருந்து தற்காத்து கொள்ள முக கவசம், சமூக இடைவேளி, சோப்பு போட்டு கை கழுவுதல் போன்ற வழி முறைகளை கடைபிடிக்க வேண்டும்.அது தவிறகொரோனா உயிரிழப்பை தடுக்க ஒரே தற்காப்பு ஆயுதம் தடுப்பூசி போட்டுக் கொள்வது தான்.

judje
நீதிபதி முகமது ஜியாவுதீன்.

அதை தான் அரசும் மருத்துவர்களும் வலிவுறுத்தி வருகின்றனர்.நடிகர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டு பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் 21.05.2021 அன்று தேனி மாவட்டம், பெரியகுளம் அரசு மருத்துவ மனையில் இரண்டாவது முறை (Second dose) கோவிஷீல்டு தடுப்பூசியை தேனி மாவட்ட நீதிபதி மற்றும் நிரந்தர மக்கள் நீதிமன்றத் தலைவர் அ.முகமது ஜியாவுதீன் என்கிற அ. மு. தமிழினியன் போட்டுக் கொண்டார்.

அப்போது தடுப்பூசி போட்டுக் கொள்வதும்முகக் கவசம் அணிவதும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதும் நோய்த் தொற்றில் இருந்து நம்மையும் நம்மைச் சுற்றி உள்ளோரையும் பாதுகாக்கும் என அவர் அறிவுறுத்தினார்.இதைத் தொடர்ந்து சமூக நல அமைப்பினர் பலரும் நீதிபதிக்கு பெரிதும் பாராட்டு தெரிவித்தனர்.

இதையும் படிங்க.!