திருவள்ளூர் மாவட்டத்தில் தனிநபர் கழிப்பறை திட்டத்தில் பல லட்சம் ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக தகவல் அறியும் உரிமைசட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது. இது கிறித்து வழக்கறிஞர் ஒருவர் கலெக்டரிடம் புகார் அளித்துள்ளார்.
அமுதவாணன் வழக்கறிஞர்.
தனிநபர் கழிப்பறை திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளதாகவும் பயனாளிகளுக்கு முறையாக மானியம் கிடைக்கவில்லை என மாவட்ட கலெக்டரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. திருவள்ளுர் ஒன்றியம் தண்ணீர் குளம் ஊராட்சியை சேர்ந்தவர் அமுதவாணன் வழக்கறிஞர் என்பவர் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது; தண்ணீர் குளம் ஊராட்சியில் 2015, 2019 ஆண்டில் 39 பயனாளிகளுக்கு தூய்மை பாரத இயக்கம் திட்டத்தின் கீழ் தனிநபர் கழிப்பறை கட்ட ஒருவருக்கு தலா .12 ஆயிரம் ரூபாய் அவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தில் திருவள்ளூர் ஒன்றிய பொது தகவல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
ஆர்.டி.ஐ-யில் கொடுக்கப்பட்ட பதில்.
ஆனால் மேற்கண்ட பயனாளிகளில் இதுவரை 50 பேர் கூட கழிப்பறை கட்டவில்லை. பெரும்பாலானோருக்கு 12 ஆயிரம் ரூபாய் மானியம் அவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படாமல் மோசடி நடந்துள்ளது. மேற்கண்ட பணம் முறைப்படி பயனாளிகளை சென்றடைந்ததா என விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட அலுவலரின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இதே போல பூண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட அல்லிக்குழி, பிளேஸ் பாளையம், அம்மம்பாக்கம், கல்கா ஓடை , கன்னிகுளம், வெள்ளாத்துக்கோட்டை, என காடுகளை ஒட்டியுள்ள மலை கிராமங்களில் ஒரு வீடுகளில் கூட இந்த தனிநபர் கழிப்பிடம் கட்டவில்லை. . ஆனால் ஒவ்வொருவருக்கும் அவர்களது வங்கி கணக்கில் வெறும் ஐந்தாயிரம் ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
மீதமுள்ள 7 ஆயிரம் ரூபாய் பணம் வழங்கப்படவில்லை என்கிற குற்றச்சாட்டு நீண்ட நாட்களாக இருந்து இருந்து வருகிறது. அதேபோல ஒரு சில வீடுகளில் கட்டப்படாமலேயே வெறும் ஐந்தாயிரம் ரூபாய் மட்டும் வழங்கப்பட்டு ஜோக்கர் படத்தில் வருவதைப் போல போர்டு மட்டும் வைக்கப்பட்டுள்ளது. அது தவிற கழிப்பிடம் கட்ட அதிகாரிகள் கதவுகள், பீங்கான்கள் வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளது. தரமான பொருட்களை கொடுத்து பல லட்சம் பணத்தை பி.டி.ஒக்கள் கொள்ளையடித்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர்.
இதே போல் பூண்டி ஒன்றியத்தில் உள்ள ராமஞ்சேரி, வள்ளியம்மா பேட்டை, ஈன்ற பேட்டை போன்ற பகுதிகளிலும் இன்னும் பல்வேறு கிராமங்களிலும் இந்த ஊழல் நடைபெற்று உள்ளது. இது தவிர பாரத பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது. குறிப்பாக ஒட்டுமொத்த திருவள்ளூர் மாவட்டத்தில் கட்டப்படாத வீடுகளுக்கும் ஏற்கனவே பழைய வீடுகளை புதுப்பிக்கப்பட்டு புதிதாக வீடு கட்டப்பட்டுள்ளதாக கணக்கு காட்டப்பட்டு பணம் பெறப்பட்டு உள்ளது.
இளம்பரிதி நிர்வாகப் பொறியாளர் குடிசை மாற்று வாரியம்.
திருவேற்காடு, கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர் போன்ற பகுதிகளில் பலதரப்பட்ட கிராமங்களில் இந்த ஊழல் நடைபெற்று உள்ளது. இந்த ஊழலில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீதும் சம்பந்தப்பட்ட கிராமங்களை ஆய்வு செய்தாலே பல அதிகாரிகள் சிறைக்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டும். குறிப்பாக வீட்டு வசதி வாரியத்தின் எக்ஸிகியூட்டிவ் இன்ஜினியராக பணியாற்றிய இளம்பரிதி என்பவர் பல கோடி ரூபாய் இதில் லஞ்சமாக பெற்று பின்னர் பிரச்சனைக்கு ஆளாக்கப்பட்டார் தற்போது அவர் திருச்சி மாவட்டத்திற்கு பணி மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
திருவேற்காடு பகுதியில் மாற்றுத்திறனாளியாக உள்ள தையல்காரர் அவர் வீடு கட்டி உள்ளார். ஆனால் அவருக்கு இதுவரை ஒரு ரூபாய் கூட பணம் வழங்கப்படவில்லை. கலெக்டர் மற்றும் முதலமைச்சரின் தனிப்பிரிவு என பருக்கும் புகார் அளித்து இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே மக்கள் பணத்தை முறையாக செலவு செய்யப்படாமல் ஏஜென்ட்கள் மூலம் கொள்ளையடிக்க காரணமாக அமைந்த அதிகாரி இளம்பரதி மீது தனி அலுவலரை நியமித்து விசாரணை நடத்த வேண்டும் என்கின்றனர் பாதிக்கப்பட்ட பொதுமக்கள்.