பெங்களூரில் தமிழ் பள்ளிக் கூடத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு ஏழு ஆண்டுகளாகிறது. இன்னும் அந்த பள்ளிக்கு மின்சாரம் வழங்கப்படவில்லை.அந்த பகுதியில் உள்ள தமிழர்கள் யாரும் கண்டுகொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
தமிழ் அமைப்புகள் எதுவும் குரலெழுப்ப இயலவில்லை. கர்நாடக மாநிலம் பெங்களூரில் அசோக் நகர் கம்மிஷனரேட் தெருவில் உள்ளது.அரசு தமிழ் உயர் ஆரம்பப்பள்ளி அமைந்துள்ளது.
1930-ம் ஆண்டு ஆங்கிலேயர்கள்காலத்தில் துவங்கப்பட்ட இந்த பள்ளி கர்நாடக மாநில சட்டப் பேரவையான விதான் சௌதாவிலி ருந்து 4 கிமீ தொலைவில் இருக்கிறது.ஆனால் அங்கு கடந்த 7 ஆண்டுகளாக அந்த பள்ளியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
மின்சாரம் இல்லாமல் இந்த பள்ளி செயல்பட்டு வருகிறது.இந்த பள்ளியில், 1 முதல் 5-ம் வகுப்புவரை 10 மாணவர்கள் மட்டுமே படித்துவருகின்றனர்.அதற்காக ஒரு ஆசிரியர் மட்டுமே பணியாற்றி வருகிறார்.
பள்ளியில் மின்சாரம் இல்லாததால் மாணவர்களால் பள்ளியின் உள்ளே அமர முடியாத நிலை ஏற்ப்பட்டுள்ளது.மின் விளக்கு, மின்விசிறி போன்ற எந்தவசதியும் இல்லை.
மேலும், கழிவறைக்கு தண்ணீர் வசதியும் இல்லை.குடிநீரும் இல்லை.
பள்ளி கட்டடமும் மிக பழமையானது என்பதால், இந்த பள்ளியில் குழந்தைகளை சேர்க்க பெற்றோர்கள் யாரும் முன்வருவதில்லை.
இதனால் பள்ளியில் படித்துவந்த மாணவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்துவிட்டதாக அப்பகுதியில் உள்ள தமிழர்கள் சொல்கிறார்கள்.
இந்த பள்ளிக்கு மின்வசதி உள்ளிட்ட அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளை செய்துத்தர பள்ளிக்கல்வித்துறை அல்லது மக்கள் பிரதிநிதிகள் முன் வரவேண்டும்.
ஆங்கிலேயர்கள் காலத்தில் தொடங்கப்பட்ட தமிழ்ப்பள்ளி என்பதால், இப்பள்ளியின் வளர்ச்சியில் யாரும் அக்கறை செலுத்துவதில்லை என்று அப்பகுதியை சேர்ந்த தமிழர்கள் சிலர் சொல்கிறார்கள்.
இந்த பகுதியில் பொருளாதாரத்தில் நலிவடைந்தநிலையில் உள்ள தமிழர்கள் பலர் தங்கள் குழந்தைகளுக்கு தமிழ்க்கல்வியை கற்றுக்கொடுக்க நினைத்தாலும், அதற்கான வாய்ப்பு இந்தபள்ளியில் இல்லை.
அதே நேரத்தில் “இந்த தமிழ்ப்பள்ளியை கன்னடப் பள்ளியாக மாற்றும் முயற்சியும் ஒருபுறம் நடந்து வருகிறது.
மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதை காரணம் காட்டி, பள்ளியை மூடிவிட்டு அந்த இடத்தில் வணிக நிறுவனங்களை கொண்டுவரவும் அதிகார வர்கத்தினர் முயன்று வருவதாக கூறப்படுகிறது.
“இந்த பள்ளியின் கட்டிடத்தை இடித்துவிடும் திட்டம் இருப்பதால் தான், மின்சார வசதி அளிக்கப்படவில்லை” என்று அரசு தரப்பில் கூறப்படுகிறது.
இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பி.சி.நாகேஷ் கூறுகையில்,”சம்பந்தப்பட்ட வட்டார கல்வி அதிகாரியை அனுப்பி பள்ளியை பார்வையிடுமாறு உத்தரவு விட்டுள்ளேன்.
அதன்பிறகு, பள்ளிக்கு மின்வசதி செய்துதரப்படும்.” என்று அவர் தெரிவித்துள்ளார்.
கார்நாடகத்தின்பெங்களுரின் பழைமைகளில் இந்த பள்ளியும் ஒன்று தான்.
அசோக் நகரில் உள்ள தமிழர்கள் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கர்நாடக முதல்வரிடம் பேசி சம்பந்தப்பட்ட தமிழ் பள்ளியின் தரத்தை உயர்த்தி உட்கட்டமைப்பை சரி செய்து சீரமைக்க வலியுறுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.