chennireporters.com

#cuttings in coimbatore brothels; கோவை விபச்சார விடுதிகளில் கட்டிங் வாங்கிய ரிப்போட்டர்ஸ்.. ஓசியில் கூத்தடித்த டூபாக்கூர்கள்.

கோவை மாநகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள ஸ்டார் ஓட்டல் ரிசார்ட்டுகள், கெஸ்ட் ஹவுஸ்கள் மற்றும் தங்கும் விடுதிகளில் வெளிநாட்டு பெண்களை வைத்து விபச்சாரம் நடத்தி வந்தவர்களிடம் சில பத்திரிகையில் பணியாற்றும் போட்டோகிராபர்கள் டுபாக்கூர் ரிப்போர்ட்டர்ஸ்கள்  சேர்ந்து செட்டிங் போட்டு கட்டிங்  வாங்கி உல்லாசமாக இருந்த செய்தி கோவை பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

டுபாக்கூர் நந்தகுமார்.

தேனி மாவட்டத்தை சேர்ந்த சிக்கந்தர் பாட்ஷா என்பவர் தலைமையில் கோவை பகுதிகளில் விபச்சாரம் செய்து வந்தவரை அவரது கூட்டாளிகளுடன் போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.  அவர்கள் ரஷ்யா இந்தோனேசியா தாய்லாந்து நாடுகளை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட இளம் பெண்களை வைத்து விபச்சாரத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.  கைது செய்யப்பட்ட சிக்கந்தர் பாட்ஷா உள்ளிட்ட அவரது நண்பர்களிடம் நடத்தப்பட்ட போலீஸ் விசாரணையில் இவர்களது பாலியல் தொழிலுக்கு கோவை மாவட்டத்தை சேர்ந்த ஒரு சில ஊடக மற்றும் பத்திரிகையாளர்களும் பல டுபாக்கூர் ரிப்போர்ட்டர்களும் உதவி செய்ததாக தகவல் தெரிய வந்துள்ளது.

அதற்கு பலனாக அவர்கள் மாதம் இந்த விபச்சாரம் நடத்துவது சிக்கந்தர் பாஷாவிடம் கூகுள் பே மூலம் பணம் வாங்கியது தெரியவந்துள்ளது. இது கோவை மாவட்ட பத்திரிகையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.   கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் இந்த விவகாரத்தில் தொடர்புடைய பத்திரிகையாளர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

கமிஷனரை சந்தித்த டுபாக்கூர் கூட்டம்

இந்த விவகாரம் குறித்து  உளவுத்துறை அதிகாரி ஒருவர் நம்மிடம்  பல அதிர்ச்சி தரும் செய்திகளை சொன்னார். இந்த விவகாரத்தில்  பத்திரிகையாளர்கள் விபச்சாரம் நடத்தியவர்களிடம் பணம் வாங்கி உள்ளனர். அவர்களது வங்கி கணக்குகள் சொத்து விபரங்களை சேகரித்து வருகிறோம். சட்டவிரோத செயல்களுக்கு இவர்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும் செய்தி வெளியிடாமல் இருப்பதால் கூறி இவர்கள் மாதா மாதம் பல லட்ச ரூபாய் மாமலாக வாங்கி உள்ளனர்.

இவர்களுக்கு தலைவனாக செயல்பட்ட   நபர் குறித்த  தீவிர விசாரணை நடத்தப்பட்டுள்ளன. பத்துக்கும் மேற்பட்ட நபர்கள் தீவிர கண்காணிப்பில் இருக்கிறார்கள். இதில் பத்திரிகையில் தொடர்பு இல்லாத பல டுபாக்கூர்களில் முதலிடம் வகித்து வருகின்றனர்.

மேலும் அந்த டுபாக்கூர் பத்திரிகையாளர்கள் அரசு  அதிகாரிகள் மற்றும் தனியார் ரிசார்ட் உரிமையாளர்கள் என பலரை மிரட்டி  பணமும் வாங்கிக்கொண்டு அந்த விடுதிகளில் ஓசியில் தங்கி உல்லாசமாக இருந்து வந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மூன் டிவி மருதாசலம்.

ஃபிராடு மற்றும் டுபாக்கூர் ரிப்போர்ட்டர்களின் கையில் சிக்கித் தவிக்கும் திருப்பூர் மற்றும்  கோவை மாவட்டத்தில் உள்ள ஃபிராடுகளை களையெடுத்தால் தான்  சில நேர்மையான பத்திரிகையாளர்கள் தலை நிமிர முடியும் என்கின்றனர். கோயம்புத்தூர் பத்திரிகையாளர்கள் மன்றம் மற்றும் அதன் உறுப்பினர்கள் மீது மருது என்கிற மருதாச்சலம் என்ற நபர் தரக்குறைவாக அவதூறான கருத்துக்களை தொடர்ந்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தார்.

 

அதன் தொடர்ச்சியாக கடந்த 22 ஆம் தேதி அன்று சமூக வலைதளங்களில் மன்றத்தின் மீதும் மன்ற உறுப்பினர்கள் மீதும் பொய்யான மற்றும் அவதூறான கருத்தை பதிவிட்டிருந்தார் இது தொடர்பாக மற்ற உறுப்பினர்கள் தனித்தனியாகவும் மன்றத்தின் சார்பிலும் கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் கோவை மாநகர காவல் ஆணையர் ஆகியோரை நேரில் சந்தித்து புகார் மனு அளித்திருந்தனர். இந்த விவகாரத்தில் மருதாச்சலம் பதிவிட்டு இருக்கும் தகவல்களில் பல போலியான தகவல்களை பதிவு செய்துள்ளார் சில நேர்மையான பத்திரிகையாளர்களுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பி வருகிறார் என்று  கோவை மாநகர ஆணையர் பாலகிருஷ்ணனிடம் புகார் அளித்துள்ளனர்.

அந்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதாக அவர்  உறுதியளித்துள்ளார். அதன் பிறகு போலீசார் நடத்திய விசாரணையில் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

அகில உலக  இந்தியன் பத்திரிகையாளர் சங்கத் தலைவர் கூத்துப்பட்டறை வினோத்ராம் குமார்.

அதில் மக்கள் நேச காவலர் குரல் என்ற டுபாக்கூர் பத்திரிகையின் பிராடு ரிப்போர்ட்டர் துரை, கதிர்குரல், தமிழ் டாக் என்னும் பத்திரிகையின்  தமிழை சரியாக எழுதத் தெரியாத பிராடு அருண் ஹென்றிக்ஸ்,  கலைஞர் டிவி கேமிராமேன் சொர்ண குமார், பாலிமர் டிவி கேமிராமேன் ரமேஷ், ஈ நாடு ரிப்போட்டர் சீனிவாசன்,  நியூஸ் தமிழ் அருண்,  தீக்கதிர் பாபு, மாலை நியூஸ் நந்தகுமார்  இந்த சம்பவத்தின் மூலையாக செயல்பட்ட நியூஸ் செவன் youtube சேனலின் தங்கப்பா என்பவர் இவரது தலைமையில் இந்து தமிழ் ஃபோட்டோகிராபர் மற்றும் தினகரன் ஃபோட்டோகிராபர் இணைந்து செயல்பட்டுள்ளனர்.  விபச்சாரம் நடத்தியவர்களிடம் google pay-வின் மூலம் பணம் பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. போலீசார் விசாரணை நடத்தினால் எல்லோரும் சிக்குவார்கள் என்று மருதாசலம் என்ற ரிப்போட்டர் சமூக வலை தளங்களில் பதிவிட்டார். இதற்காக அவரை போலீசார் கைது செய்தனர். விபச்சார விடுதி நடத்தியவர்களிடம் பணம் வாங்கிய லிஸ்ட்டை போலீசார் இன்னும் வெளியிடாமல் இருப்பதன் மர்மம் என்ன என்று தான் தெரியவில்லை.  இந்த கூட்டத்தில் உள்ள சிலர் கஞ்சா சங்கருடன் தொடர்பில் இருப்பவர்கள் என தெரிகிறது. 

டுபாக்கூர்கள் துரை மற்றும் ரஞ்சித்

இந்தியாவிலேயே அகில உலக பத்திரிகையாளர்கள் சங்கம் என்கிற அமைப்பை ஒரு டுபாக்கூர் கோவையில் சங்கம் வைத்து நடத்தி வருகிறது. அந்த பிராடு திருப்பூரில் பெண்களை வைத்து விபச்சாரம் நடத்தி வருகிறது.  இந்த பிராடு திருப்பூர் சிட்டி கமிஷனர் லஷ்மி அவர்களை சந்தித்து அவர்களுடன் நின்று ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டு ஊரை ஏமாற்றி வருகிறது.  இதே பிராடு அந்த மாவட்ட கலெக்டரையும் ஏமாற்றி ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டு அதிகாரிகளை மிரட்டி வருகிறது. அந்த பிராடு வைத்திருக்கும் செல்போன் ட்ரூ காலரில் கூத்துப்பட்டறை முனுசாமி என்று வருகிறது.
இவர் தான் அகில உலக பத்திரிகையாளர் சங்கத் தலைவர். 

தமிழை சரியாக எழுத கூட தெரியாத டுபாக்கூர்.

தமிழ்நாடு முழுவதும் டுபாக்கூர்கள் போலியாக ஒரு பத்திரிகை மற்றும்  youtube சேனல் தொடங்கி பத்திரிகையாளர் என்கிற ஐடி கார்டை போட்டு வைத்துக்கொண்டு ஊரை மிரட்டி உல்லாசமாய் வாழ்ந்து வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு தேனியில் அரசு மருத்துவரை மிரட்டி பல டுபாக்கூர் பத்திரிகையாளர்கள் 25 லட்ச ரூபாய் பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் வழக்கு பதிவு செய்யப்பட்டு டுபாகர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

அதேபோல இரண்டு தினங்களுக்கு முன்பு சென்னையில் பத்திரிகையாளர்கள் சங்கம் என்ற பெயரிலும் போலியாக ஒரு பத்திரிகை தொடங்கி அதில் கல்லூரி மற்றும் பல்கலைக்கழக சான்றிதழ்களை போலியாக அச்சடித்து பல லட்ச ரூபாய் சம்பாதித்துள்ளனர். அவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.  ஆனாலும் திருப்பூர், கோவை , கோவை புறநகர் பகுதிகளில் பிராடுகளின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக  தமிழை கூட சரியாக எழுத படிக்க தெரியாத சில தற்குறிகளும் தங்களை பத்திரிகையாளர்கள் என்று சொல்லிக் கொண்டு வருகின்றனர்.

எனவே தமிழக அரசு கோவை மற்றும் திருப்பூர் பகுதியில் உள்ள ஃபிராடுகள் மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் அவர்கள் மீது குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர் சில அங்கீகாரம் பெற்ற பத்திரிகையாளர் சங்க அமைப்புகள்.

இதையும் படிங்க.!