#சிறப்பு செய்தி; #சிறப்பு செய்தி;
திருவள்ளூர் மாவட்டத்தில் மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகத்தில் பணியாற்றும் டிஇஓ வின் நேர்முக உதவியாளர் பொற்செழியன் பற்றி பல்வேறு புகார்கள் எழுந்துள்ளது. உடனடியாக அவர் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் மாவட்டத்தில் கல்வித் துறை அதிகாரிகள் மத்தியில் மதக்கலவரம் ஏற்படும் வாய்ப்புள்ளது என்கின்றனர் ஆசிரியர்கள் உடனடியாக அவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் ஆசிரியர்கள்.
DEO PA பொற்செழியன்
திருவள்ளூர் மாவட்டத்தில் இயங்கும் அரசு நிதி உதவி பெறும் கிறித்தவ சிறுபான்மை பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர் மற்றும் அலுவலக உதவியாளர்களின் கோப்புகள் மற்றும் துறை சார்ந்த நடவடிக்கைகளை கையாள்வதில் மாவட்ட கல்வி அலுவலகத்தில் பணியாற்றும் பி ஏ பொற்சழியன் மற்றும் தலைமை கண்காணிப்பாளர் ராஜமாணிக்கம் ஆகிய இருவரும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் பற்றி அவதூராக பேசுவதும் ஒருமையில் அழைப்பதும் அவர்களுடைய கோப்புகளை கிடப்பில் போட்டு வேண்டும் என்றே நிராகரிக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது குறித்து முதல்வரின் தனி பிரிவிற்கும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், மற்றும் இயக்குனருக்கும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியருக்கும் பல புகார்கள் அனுப்பியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்கின்றனர் ஆசிரியர்கள்.
திருவள்ளூர் கல்வி மாவட்டத்தில் சுமார் 9 கிருத்தவ சிறுபான்மை பள்ளிகள் இயங்கி வருகிறது. மாவட்ட கல்வி அலுவலகத்தில் நேர்முக உதவியாளராக பணிபுரிந்து வரும் பொற்செழியன் மற்றும் கண்காணிப்பாளர் ராஜமாணிக்கம் ஆகிய இருவரும் சேர்ந்து கொண்டு தன் எல்லை வரம்பு மீறி நடந்து கொண்டு வருகிறார்கள். இவர்கள் இருவரும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் என்று அவர்களே பெருமையாக சொல்லி வருகிறார்கள்.
இதனால் தங்கள் அரசுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் கிறிஸ்துவ பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்களின் பணப் பயன்களை குறிப்பாக டிபிஎப்,செலக்சன் கிரேட், ஸ்பெஷல் கிரேட், ரிட்டயர்மென்ட் செட்டில்மெண்ட், ப்ரமோஷன், சேலரி அரியர்ஸ், இன்கிரிமென்ட் ஆகியவற்றை ஆசிரியர்களுக்கு உரிய காலத்தில் வழங்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர்.
DEO OFFICE கண்காணிப்பாளர் ராஜமாணிக்கம்.
நேரடியாக சென்று கேட்டால் தாங்கள் கொடுத்த கோப்பில் நிறைய பிழை இருக்கிறது. தவறு இருக்கிறது. அதை சரி செய்து எடுத்து வாருங்கள் என்று திட்டமிட்டு வேண்டும் என்று கொரிப்போட்டு திருப்பி அனுப்புவது வாடிக்கையாக வைத்துள்ளனர். இந்நிலையில் யாராவது நேரில் வந்து கேட்டால் ஒருமையில் பேசுவது ஆசிரியர்களை கொஞ்சம் கூட மரியாதை இல்லாமல் மிகவும் கேவலமாக அவமானமாய் பேசி விரட்டி அடிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றன.
கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன்.
எம் ஃபில் மற்றும் பிஹெச்டி படித்தவர்கள் வரை ஆசிரியர்களாக இருப்பவர்களை சாதாரணமாக இளநிலை உதவியாளராக இருந்து பொறுப்புக்கு வந்த மேற்படி இருவரும் தங்களை ஒன்றும் செய்ய முடியாது கல்வித் துறை இயக்குனர் கண்ணப்பன் என் சாதிக்காரர் என் மாமா என்னை யாரும் ஒரு முடியையும் புடுங்க முடியாது என்று பொற்சழியன் பேசி வருகிறார்.
DEO PA பொற்செழியன்
இதனால் ஆசிரியர்கள் பெரும் மனவேதனை அடைந்துள்ளனர். எனவே ஆர் எஸ் எஸ் அமைப்பை சார்ந்த இவர்கள் இருவரும் கழக அரசுக்கும் தமிழக அரசுக்கும் அவப்பெயரை உண்டாக்கும் வகையில் நடந்து கொள்ளும் இவர்கள் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர் ஆசிரியர்கள்.
அரசு நிதி உதவி பெறும் சிறுபான்மை கிருத்துவ பள்ளிகளின் மாவட்ட கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளராக பணியாற்றும் பொற்செழியன் மற்றும் கண்காணிப்பாளர் ஆகிய இருவரையும் அப்பொறுப்பிலிருந்து வேறு துறைக்கு மாற்ற வேண்டும் இல்லை என்றால் முதன்மை கல்வி அலுவலகத்தில் சாதி மத மோதல்களும் கலவரங்களும் உண்டாக்கும் சூழல் ஏற்படும் என்று சொல்லி வருகின்றனர் ஆசிரியர்கள். மாவட்ட ஆட்சியரும் மற்றும் கல்வித்துறை இயக்குனரும் உடனடியாக இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்து உள்ளது.
தமிழ்நாட்டின் அடுத்த முதல்வராக அண்ணாமலை தான் உட்காருவார் என்று அடிக்கடி பொற்செழியனும், ராஜமாணிக்கமும் பேசி வருகிறார்கள். திமுகவையும் முதல்வர் ஸ்டாலினையும் உதயநிதியையும் கண்ணில் விரலை விட்டு ஆட்டுகிறார் அண்ணன் அண்ணாமலை என்று மார்தட்டி பேசி வரும் பிஏ பொற்செயலியன் தனது உயர் அதிகாரியையும் அதிகாரிகளையும் மிக கேவலமாக பேசுவார்.
டிஇஓ மற்றும் டிஓ ஆபிஸ் அதிகாரிகளை இவர்களுக்கு ஒன்றும் தெரியாமல் சீட்டில் வந்து உட்கார்ந்து கொண்டு கல்லா கட்டி வருகிறார்கள் என்று பேசி வருவார். இவனுங்க சொன்னா நான் உடனே வேலை செய்யணுமா அப்படி என்று தனக்கு வரும் கோப்புகளை கோப்புகளில் கையெழுத்து போடாமல் மாதக்கணக்கில் கிடப்பில் போட்டு கேலி பேசி வருகிறார்.
கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி சின்னப் பையன் அரசியலும் தெரியாது அதிகாரமும் என்னன்னு தெரியாது உதயநிதிக்கு நண்பர் என்று சொல்லி ஜால்ரா தட்டி எம்எல்ஏவாகி அமைச்சர் பதவியை வாங்கியவர். இவனுக்கு கீழே எல்லாம் நாம் வேலை செய்ய வேண்டிய நிலைமை அப்பனே பெருமாளே உனக்கு அடுக்குமா என்று கன்னத்தில் புத்தி போட்டுக் கொள்கிறாராம் பிஏ பொற்செழியன். கல்வித்துறை அமைச்சர் இனிமேலாவது தயங்காமல் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் ஆசிரியர்கள்.