Chennai Reporters

திருத்தணி சுற்றுவட்டார பகுதிகளில் ஏழைகளுக்கு உணவு வழங்கும் அப்பா அறக்கட்டளை.

அப்பா அறக்கட்டளையின் நிறுவனர்

பொது முடக்க காலத்தில் திருத்தணி ஒன்றியம் மற்றும்  வேலஞ்சேரி பகுதியில் அப்பா அறக்கட்டளை சார்பில் ஏழை மக்களுக்கு தினந்தோறும் உணவு வழங்கப்பட்டடு வருகிறது.

வேலஞ்சேரி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அப்பா அறக்கட்டளையின் நிறுவனர் வழக்கறிஞர் D.செல்வம் தலைமையில் D.ராஜபாண்டியன் அரசு வழக்கறிஞர். D.பாண்டியராஜன் ஆகியோர் திருத்தணி வேலஞ்சேரி அருகே உள்ள கிராம மக்களுக்கு தினந்தோறும் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு உணவு வழங்கி வருகின்றனர்.

அப்பா அறக்கட்டளையின் நிறுவனர்

அது தவிர காய்கறிகளும் வழங்கப்படுகிறது வேளஞ்சேரி ,பி.டி புதூர், அருந்ததியர் காலனி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு 10க்கும் மேற்பட்டோர் கொண்ட குழு கடந்த ஒரு மாதமாக சாப்பாடு தயார் செய்து ஆட்டோ மற்றும் மோட்டார் பைக்குகளில் எடுத்து சென்று அந்தப் பகுதியில் உள்ள மக்களுக்கு சாப்பாடு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் திவாகர் மற்றும் அறக்கட்டளையை சார்ந்த நிர்வாகிகளும் மற்றும் பொதுமக்களும் உடன் இருந்தனர்.

இதையும் படிங்க.!

error: Alert: Content is protected !!