chennireporters.com

அம்மாக்களை விட அப்பாகளுக்கு பெண் பிள்ளைகள் மீது அதிக அன்பு

தந்தையர் தின சிறப்பு செய்தி.

பெங்களூர்:
ஆன்லைன் மூலம் படிக்கும் தனது மகள் மழையில் நனையாமல் இருக்க அவரின் தந்தை குடை பிடித்தபடி இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கடந்த ஆண்டு கொரோனா முதல் அலையிலிருந்து இந்த ஆண்டு இரண்டாவது அலை வரை பள்ளி கல்லூரிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

ஆன்லைன் வகுப்பில் படிக்க பலருக்கு போன் இல்லை இன்டர்நெட் சிக்னல் கிடைப்பதில்லை இத்தனையும் கடந்து மாணவர்கள் ஆன்லைன் வகுப்பில் படித்து வருகிறார்கள்.

அந்த வகையில் கர்நாடக மாநிலம் தட்சிண கன்னட மாவட்டத்தை சேர்ந்த மாணவி தனது வீட்டில் ஆன்லைன் வகுப்பில் படிக்க இன்டர்நெட் சிக்னல் கிடைக்கவில்லை.

இதனால் தினந்தோறும் தனது வீட்டு எதிரில் உள்ள சாலையில் அமர்ந்து படித்து வருகிறார் இந்த நிலையில் ஆன்லைன் வகுப்பின் போது மழை கொட்டியது.

தனது மகள் மழையில் நனைவதை பார்த்த அவரின் தந்தை ஓடிவந்து வீட்டில் இருந்த குடையை எடுத்து வந்து மகள் மழையில் நனையாமல் இருக்க குடை பிடித்தார்.

இந்த ஒற்றை புகைப்படம் இணைய தளத்தில் வைரலாகி வருகிறது தனது மகளின் படிப்பு கெட்டுவிடக் கூடாது என்ற எண்ணத்தில் மழையில் நனையாத வகையில் தனது மகள் படிக்க வேண்டும் என்பதற்காக மகளுக்கு குடை பிடித்தபடி நீண்டநேரம் நின்றிருந்த தந்தையை மக்கள் பாராட்டி வருகிறார்கள்.

தொலைதூர கிராமப்புறங்களில் இருக்கும் மாணவர்கள் ஆன்லைன் வகுப்பில் படிக்க எத்தனை கஷ்டங்களை சந்திக்கிறார்கள் என்பதை அறிய இந்த ஒற்றை புகைப்படமே சான்றாகும்.

அந்த மாவட்டத்தில் சுல்லியா தாலுகாவில் பலக்கா கிராமத்தில் இணையதளம் சிக்னல் கிடைப்பதில்லை என புகார் எழுந்துள்ளது.

இணையதள சிக்னல் கிடைப்பதற்காக கிராமத்தினர் சிக்னல் கிடைக்கும் இடங்களுக்குச் செல்வதாக தெரிவிக்கிறார்கள்.

அந்த பகுதி மக்கள் இது குறித்து கூறுகையில் பலாக்கா கிராமத்தில் பி.எஸ்.என்.எல். நெட் சிக்னல் கிடைப்பது இல்லை.

இதனால் ஆன்லைன் வகுப்புகளுக்கு 30 முதல் 40 மாணவர்கள் வரை சிக்னல் கிடைக்கும் இடத்தில் ஒன்றாக கூடி வகுப்புகளை கவனித்து வருகிறார்கள்.

தென்மேற்கு பருவமழையின் போது காலை 9 மணிக்கு வருவோம் ஒரு மணி வரை பாடம் கவனித்துவிட்டு சாப்பிட சென்று விடுவோம்.

பின்னர் இரண்டு மணிக்கு வீட்டுக்கு சென்று விட்டு மீண்டும் படிக்க வருவோம் என்கின்றார்கள் மாணவர்கள்.

இதையும் படிங்க.!