தலித் மக்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்காத வன்னிய மக்கள் மீது வண் கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த உள்ளது வழுதலம் பேடு கிராமம் இந்த கிராமத்தில் 300 குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். எங்கள் கிராமத்தில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் அருள்மிகு ஸ்ரீ எட்டியம்மன் ஆலயம் வழுதலம்பேடு கிராமத்தில் அமைந்துள்ளது.
சின்ன வழுதலம்பேடு காலனி, பெரிய வழுதலம்பேடு, ஆதிதிராவிடர் மக்கள் என மூன்று பகுதியை சேர்ந்த மக்கள் சேர்ந்து விழா எடுப்பது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒன்பதாம் தேதி அன்று வன்னியர் சமூகத்தை சார்ந்த தேவராஜ், ரகுநாதன், சுப்பிரமணி, ஊராட்சி மன்ற தலைவர் மணிமேகலை, எட்டியப்பன், முருகன், முனுசாமி ஆகியோர் தன்னிச்சையாக திருவிழா செய்ய ஏற்பாடு செய்தனர்.
கும்பாபிஷேகம் நடத்தவும் ஆரம்பித்து விட்டனர். மேலும் ஆதிதிராவிடர் தரப்பில் நாங்கள் தேவராஜ் அவர்களை நேரில் சந்தித்து பேசினோம். அவர் திட்டவட்டமாக பறையர் சமூகத்தினரை நாங்கள் சேர்க்க மாட்டோம் என திமிராக பேசி அனுப்பி விட்டார். அதன் அடிப்படையில் சார் ஆட்சியர் பொன்னேரி அவர்களிடம் மனு கொடுத்தோம். கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அவர்களின் தலைமையில் சமாதான கூட்டம் நடைபெற்றது.
வன்னியர் சமூகத்தை சார்ந்தவர்களிடம் ஆதிதிராவிடர் சமூக மக்கள் இணைந்து திருவிழா நடத்த வேண்டும் என முடிவெடுக்கப்பட்டு இருதரப்பினரும் கையெழுத்து போட்டனர். ஆனால் மறுநாள் ஒன்பதாம் தேதி காலை 11:30 மணி அளவில் காவல்துறை பாதுகாப்புடன் ஆதிதிராவிடர் மக்கள் ஒன்று சேர்ந்து எட்டியம்மன் ஆலயத்திற்கு சென்றோம். அங்கு தேவராஜ் வன்னியர் சமூகத்தை சேர்ந்த மக்களுடன் சேர்ந்து கொண்டு பறையர் சமூக மக்களை கோவிலில் உள்ளே வரக்கூடாது என்று ஆவேசமாக பேசி எங்களை இழிவு படுத்தி அடிக்க முற்பட்டனர்.. உடனே நாங்கள் அங்கிருந்து தப்பித்து வந்து விட்டோம்
ஆகவே தாங்கள் சாதி வெறியோடு மனித இனத்தை இழிவு படுத்தி பொது இடத்தில் அவமானப்படுத்தியவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று வழுதலம் பேடு கிராமத்தைச் சேர்ந்த சரவணன் என்பவர் கும்மிடிப்பூண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
1998 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த கோவில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமானது. ஏற்கனவே 22 ஆண்டுகளாக கோயில் பூட்டப்பட்டு இருந்தது. கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் சரவணகுமார் தலைமையில் நள்ளிரவு வரை இருதரப்பு மக்களிடையே சமாதான கூட்டம் நடத்தி சண்டை இல்லாமல் ஒவ்வொரு தரப்பினர் சாமி கும்பிட வேண்டும் என்று தாசில்தார் வலியுறுத்தினார்.
கும்மிடிப்பூண்டி திமுக எம்எல்ஏ கோவிந்தராஜன்
ஆனால் வன்னிய சமூக மக்கள் தலித் மக்களை சாமி கும்பிட அனுமதிக்க வில்லை அது தவிர தலித் மக்கள் சாமி கும்பிட பாதுகாப்பு தருவோம் என்று சொன்ன வருவாய்த்துறை அதிகாரிகள் யாரும் சம்பவ இடத்தில் இல்லை. மேலும் போலீஸ் அதிகாரிகளும் குறிப்பிட்ட வன்னிய சமூகத்து மக்களுக்கு மட்டும் பாதுகாப்பாக நின்று சாமி கும்பிட அனுமதி அளித்தனர். தலித் மக்கள் சாமி கும்பிட அனுமதிக்காமல் கோயிலுக்கு சீல் வைத்தனர்.
அருள்மிகு ஸ்ரீ எட்டியம்மன் ஆலயம் வழுதலம்பேடு
இந்த சம்பவம் குறித்து கும்மிடிப்பூண்டி திமுக எம்எல்ஏ டிஜே எஸ் கோவிந்தராஜன் எந்தவித பதிலும் சொல்லாமல் ஒரு குறிப்பிட்ட சமூக மக்களுக்கு ஆதரவாக நிற்பதாக புகார் தெரிவிக்கின்றனர் புரட்சி பாரதம் கட்சியை சேர்ந்தவர்கள்.
திராவிட கழகத்தைச் சேர்ந்த தோழர்கள் இரு தரப்பு மக்களுக்கும் எட்டியம்மனை வணங்கி வரும் நிலையில் மக்கள் மத்தியில் ஒரு கலவரத்தையும் ஒரு சாதிய வெறுப்புணர்ச்சி ஏற்படுத்தும் கோவில் மக்களுக்கு தேவையில்லை. அதை நிரந்தரமாக பூட்டி வைக்க வேண்டும் என்கின்றனர். தன்னை வணங்கும் பக்தர்களுக்கு இடையில் சாதி தேவையில்லை ஏன் என்று எட்டி அம்மன் சொல்லவில்லை என்று சாதி மறுப்பாளர்களும் கடவுள் மறுப்பாளர்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அம்பாள் எப்போதடா பேசினாள் ??? என்று பராசக்தி படத்தில் கருணாநிதி எழுதிய வசனம் தான் தற்போது நினைவுக்கு வருகிறது.