தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பணி மனையிலிருந்து கும்பகோணம் டூ சீர்காழி செல்லும் அரசு பேருந்தில் உயிர்”க்கு ஆபத்தான நிலையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் படியில் நின்று கொண்டு பயணிக்கிறார்கள். பின் பக்கத்தில் உள்ள ஏணியிலும் நின்று பயணம் செய்கிறார்கள்.
இதனை அரசு கவனத்தில் கொண்டு பள்ளி செல்லும் நேரம் மற்றும் பள்ளி விடும் நேரத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்கப் பட வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பு.
தொடர்ந்து பள்ளி நடைபெறும் நாட்களில் காலை மற்றும் மாலை நேரங்களில் ஆபத்தான முறையில் பள்ளி மாணவர்கள் பயணம் செய்கிறார்கள்.
அந்த நேரத்தில் கூடுதலாக பேருந்தை இயக்கினால் கூட்ட நெரிசலை தவிர்க்கலாம்.
மாணவர்கள் படியில் நின்று பயணம் செய்யும் தேவையும் ஏற்படாது.
ஏற்கனவே ஆபத்தான முறையில் பள்ளி மாணவர்கள் பேருந்தில் பயணம் செய்தால் நடத்துனர் மற்றும் ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து துறை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழகம் முழுவதும் காலை மற்றும் மாலை நேரங்களில் ஒரு வழித்தடத்தில் இரண்டு பேருந்துகளை இயக்கினால் கூட்ட நெரிசலை தவிர்க்கலாம் அது தவிர மாணவர்களின் முறையற்ற பயணத்தையும் உயிர் சேதத்தையும் தவிர்க்கலாம்.