chennireporters.com

#Davidson as DGP; டிஜிபியாகிறார் டேவிட்சன் தேவ ஆசீர்வாதம்.

தமிழக சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக உள்ள டேவிட்சன் தேவாசீர்வாதம் அவர்கள் டிஜிபியாக பதவி உயர்வு வழங்க அரசு முடிவு செய்துள்ளது.  1995-ல் ஐபிஎஸ் ஆக தேர்வான கூடுதல் டிஜிபி-க்களான டேவிட்சன் தேவாசீர்வாதம், சந்தீப் மித்தல், பாலநாக தேவி ஆகிய 3 பேரும் டிசம்பர் 31-ம் தேதி அல்லது ஜனவரி முதல் தேதியில் டிஜிபியாக பதவி உயர்த்தப்பட உள்ளனர்.
டேவிட்சன் தேவாசீர்வாதம். ஐ.பி.எஸ்
அதோடு, ஐஜி-க்களாக உள்ள அன்பு, பிரேம் ஆனந்த் சின்ஹா, தீபக் டாமோதர், செந்தில்குமார், அனிதா உசேன், நஜ்மல் ஹோடா, மகேந்திர குமார் ஆகிய 7 அதிகாரிகள் கூடுதல் டிஜிபி-க்களாக பதவி உயர்வு பெற உள்ளனர். மேலும் 15 எஸ்.பி-க்களும் டிஐஜி-யாக பதவி உயர்வு பெற உள்ளனர்.
டாக்டர். சந்தீப் மிட்டல், ஐபிஎஸ் – காவல்துறை, நீதித்துறை மற்றும் குடிமக்களுக்கு சைபர் பாதுகாப்பு மற்றும் காவல்துறை சிக்கல்கள் குறித்து ...
சந்தீப் மித்தல். ஐபிஎஸ்.
இதுதவிர, அடுத்த மாதம் முதல் வாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள், எஸ்.பி-க்கள் மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதி | Chief Minister M.K. Stalin admitted to Apollo hospital
மாநாடு முடிந்தவுடன் 20-க்கும் மேற்பட்ட போலீஸ் அதிகாரிகள் பணியிடம் மாற்றம் செய்யப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
அந்த பட்டியலும் தற்போது முழு வீச்சில் தயாராகி வருகிறது என்று தலைமை செயலக உள்துறை வட்டாரம் தெரிவிக்கிறது.

இதையும் படிங்க.!