chennireporters.com

விடுதலைப்போரின் விடிவெள்ளி மைசூரின் புலி திப்பு சுல்தான் அவர்கள் நினைவு தினம்!.

திப்பு சுல்தான் (நவம்பர் 20, 1750, தேவனஹள்ளி – மே 4, 1799, ஸ்ரீரங்கப்பட்டணம்), மைசூரின் புலியென அழைக்கப்பட்டவர்.

1782 ஆம் ஆண்டிலிருந்து 1799 ஆம் ஆண்டுவரை மைசூரின் அரசை ஆண்டவர். திப்பு சுல்தான் ஹைதர் அலியின் இரண்டாம் தாரமான ஃவாதிமாவின் மகனாவார்.

பிரித்தானியப் படைகளுடனான இரண்டாம் ஆங்கில-மைசூர்ப் போரில் ஹைதர் அலி வெற்றி பெறுவதற்கு உறுதுணையாகவிருந்த திப்பு தனது தந்தையின் மரணத்திற்குப் பின்னர் மைசூரின் மன்னரானார்.

ஆங்கிலேயர்களை இந்தியாவை விட்டு அகற்றுவதற்காகப் பிரான்சின் மாவீரன் நெப்போலியனுடன் பேச்சுவார்த்தைகூட நடத்தினார்.

மூன்றாம் மற்றும் நான்காம் ஆங்கில-மைசூர்ப் போர்களில் பிரித்தானிய அரசினாலும் அதன் கூட்டுப் படைகளினாலும் தோற்கடிக்கப்பட்டார். மே 4, 1799 ஆம் ஆண்டு தனது ஆட்சித் தலைநகரமான ஸ்ரீரங்கப்பட்டினத்தில் போரின்போது இறந்தார்.

இதையும் படிங்க.!